Aadhar Card Pan Card Link: ஆதார்-பான் கார்டு இணைப்புக்கு மார்ச் 31 கெடு! எப்படி இணைப்பது தெரிந்து கொள்ளுங்கள்
மார்ச் 31ம் தேதிக்குள் ஆதாருடன் பான் கார்டை இணைக்காவிட்டால், பான் கார்டு ரத்து செய்யப்படும் என்று வருமானவரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மார்ச் 31ம் தேதிக்குள் ஆதாருடன் பான் கார்டை இணைக்காவிட்டால், பான் கார்டு ரத்து செய்யப்படும் என்று வருமானவரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவ்வாறு ஆதாருடன் இணைக்காதவர்கள், 2023,ஏப்ரல் 1ம் தேதி முதல் தங்கள் பான் கார்டை எந்தவிதமான பரிவர்த்தனைக்கும் பயன்படுத்த முடியாது. இந்த வாய்ப்பைத் தவறவிட்டால், 10இலக்க பான் எண் செயலிழந்துவிடும்.
கணக்குத் தணிக்கைக்காக அமெரிக்காவின் கிராண்ட் தார்ன்டன் நிறுவனத்துடன் அதானி குழுமம் ஒப்பந்தம்
இது குறித்து மத்திய வருமானவரித்துறை வெளியிட்ட அறிவிப்பில் “இன்றே ஆதாருடன் பான்கார்டைஇணையுங்கள். அனைவரும் கட்டாயமாகச் செய்ய வேண்டும், தாமதிக்காதீர்கள்.
வருமானவரிச்சட்டத்தின்படி, விதிவிலக்குப்பட்டியலில் இருப்பவர்களைத் தவிர அனைவரும் ஆதார் எண்ணுடன் பான்கார்டை இணைக்க வேண்டும். 2023, மார்ச் 31ம் தேதி கடைசித் தேதியாகும் இதை செய்யாவிட்டால், பான்கார்டு செயலிழந்துவிடும்” எனத் தெரிவித்துள்ளது.
ஆதார் எண்ணுடன், பான் எண்ணை இணைக்காதவர்கள் வருமானவரி ரிட்டனையும் தாக்கல் செய்ய முடியாது.
எல்பிஜி சிலிண்டர் விலை எப்போது குறையும்? நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில்
அபராதம், காலதாமதக் கட்டணம்
ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்க தற்போது விரும்பவர்கள் அபராதமாக ரூ.1000 செலுத்த வேண்டும். 2022, ஜூன் 30வரை இந்த கட்டணம் ரூ.500 ஆக இருந்தது,அதன்பின் அதிகரித்துள்ளது.
எஸ்எம்எஸ் மூலம் ஆதாருடன்-பான்கார்டை இணைப்பது எவ்வாறு
1. UIDPAN என டைப் செய்ய வேண்டும்.
2. UIDPAN இடைவெளி- 12 இலக்க ஆதார் எண்(இடைவெளி) 10இலக்க பான் எண்ணை டைப் செய்ய வேண்டும்.
3. ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்
4. குறுஞ்செய்தி அனுப்பியபின், ஆதாருடன் பான் எண் இணைக்கப்பட்டது குறித்த உறுதியான செய்தி கிடைக்கும்
எல்ஐசி தரும் அரிய வாய்ப்பு! பழைய பாலிசியை மீண்டும் தொடங்கலாம்! முழு விவரம்
ஆன்-லைனில் ஆதார்-பான் இணைப்பது எவ்வாறு
1. வருமானவரித்துறை இணையதளத்துக்கு செல்ல வேண்டும்
2. eportal.incometax.gov.in or incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தை கிளிக் செய்ய வேண்டும்.
3. உங்களைப் பற்றிய விவரத்தை பதிவு செய்ய வேண்டும். பான் எண் அல்லது ஆதார் எண் யுசர் ஐடியாகும்
4. திரையில் வரும் லிங்கை கிளிக் செய்தால், ஹோம்பேஜ்ஜுக்குச் செல்லும்
5. ஆதாருடன் பான் இணைப்பது என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்
6. பான் எண் மற்றும் ஆதார் எண்ணை டைப் செய்து, ஆதார் கார்டில் உள்ள உங்கள் பெயரைக் குறிப்பிட வேண்டும்.
7. கேப்சா குறியீடுகளை டைப்செய்து உறுதி செய்ய வேண்டும்
8. ஆதாருடன் பான் கார்டு இணைக்கப்பட்டதாக உறுதி செய்யப்பட்ட செய்தி கிடைக்கும்.