MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathimynation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ஸ்மார்ட் போன் மூலம் வருமானம் ஈட்டலாம் "ஈசியா"- இது தெரியாம போச்சே!

ஸ்மார்ட் போன் மூலம் வருமானம் ஈட்டலாம் "ஈசியா"- இது தெரியாம போச்சே!

ஸ்மார்ட்போன் மூலம் பணம் சம்பாதிக்க பல வழிகள் உள்ளன. பணம் தரும் செயலிகள், புகைப்படம் விற்பனை, ஃப்ரீலான்சிங், ஆன்லைன் விற்பனை, அஃபிலியேட் மார்க்கெட்டிங், ஆன்லைன் டியூஷன், கன்டென்ட் கிரியேஷன் என பல வழிகளில் வருமானம் ஈட்டலாம்.

3 Min read
Vedarethinam Ramalingam
Published : Jun 12 2025, 07:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • Google NewsFollow Us
19
ஸ்மார்ட் போன் தரும் வருமானம்
Image Credit : our own

ஸ்மார்ட் போன் தரும் வருமானம்

இப்போது சிலர், ஸ்மார்ட்போன் என்பது தவறான முதலீடாக இருக்கலாம் என எண்ணலாம். ஆனால் சிலர், இது சொந்த பயனுக்காக வேலை செய்யக்கூடிய சிறந்த கருவி என்றும் நம்புகிறார்கள். உண்மையில், எதுவரும் ஒருவருக்கு இது பிடித்த விஷயமாக இருந்தால் மட்டுமே, அது வருமானமாக மாறும். கையில் இருக்கும் செல்போனில் விளையாடிக்கொண்டே சில சில யுத்திகளை செய்தால் நம்மால் கைநிறைய சம்பாதிக்க முடியும். உங்கள் சாதாரண போனிலிருந்து பகல்-இரவு என்று நேரம் பார்த்துக்கொல்லாமல், எளிமையாகவும் நடைமுறையிலும் பணம் சம்பாதிக்க சில வழிகள் இருக்கின்றன. அதற்கு சில செயலிகள் கைகொடுக்கின்றன.

29
Cash Reward Apps: பணம் தரும் செயலிகள் எப்படி வேலை செய்கிறது?
Image Credit : Gemini

Cash Reward Apps: பணம் தரும் செயலிகள் எப்படி வேலை செய்கிறது?

பணம் தரும் செயலிகள் எப்படி வேலை செய்கிறது? என தெரிந்துகொண்டால் அதன் மூலம் வருமானம் ஈட்டலாம். Swagbucks, InboxDollars, Google Opinion Rewards போன்ற செயலிகளை App Store-இல் இருந்து பதிவிறக்கம் செய்யவும். உங்கள் மின்னஞ்சல் மூலம் பதிவு செய்து, வீடியோ பார்க்கும் வேலை, கருத்துக்கணிப்பு, கேம்ஸ் போன்றவற்றில் கலந்துகொள்ளலாம். இதல் ஒவ்வொரு பணிக்கும் 50 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். ஒரே மாதத்தில், கவனமாக செய்தால் 5,000 ரூபாய்க்கு மேல் வருமானம் பெற முடியும்.

Related Articles

தங்கத்தை விட சிறந்த முதலீடு எது?! தெரிஞ்சுக்கலாம் வாங்க!
தங்கத்தை விட சிறந்த முதலீடு எது?! தெரிஞ்சுக்கலாம் வாங்க!
ஆயிரத்தில் முதலீடு கோடி ரூபாய் சேமிப்பு: எஸ்ஐபி (SIP) சூட்சமம்!
ஆயிரத்தில் முதலீடு கோடி ரூபாய் சேமிப்பு: எஸ்ஐபி (SIP) சூட்சமம்!
39
புகைப்படங்களை விற்று வருமானம் பெறலாம்
Image Credit : Gemini

புகைப்படங்களை விற்று வருமானம் பெறலாம்

செல்போனில் அழகழகான புகைப்படங்களை எடுக்கும் ஆற்றல் மிக்கவரா நீங்கள், அப்படியென்றால் உங்களுக்கு சில ஆப்கள் வருமானத்தை அள்ளி தரும் வகையில் உள்ளன. உங்கள் செல்போனில் நல்ல புகைப்படங்களை எடுத்து, Shutterstock, Adobe Stock, Foap போன்ற தளங்களில் பதிவேற்றவும். ஒவ்வொரு புகைப்படமும் ரூ.50 முதல் ரூ.300 வரை வருமானம் தரும். சில புகைப்படக்காரர்கள் மாதம் 10,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கிறார்கள்.

49
ஆன்லைன் ஃப்ரீலான்சிங் வேலைகள்
Image Credit : Getty

ஆன்லைன் ஃப்ரீலான்சிங் வேலைகள்

கதை கவிதை உரைநடை என அழகான நடையில் எழுதக்கூடிய நபராக இருந்தால் கீழ்கண்ட செயலிகள் உங்களுக்கு உதவும். Fiverr அல்லது Upwork போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்து, உங்கள் திறமைகள் (எழுத்து, டிசைன், சோஷியல் மீடியா) பட்டியலிடவும். கிளையண்ட்களிடம் வேலைக்கு விண்ணப்பிக்கவும். சிறிய வேலைகளுக்கு 200 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை வருமானம் ஈட்டலாம். சீரான வேலைக்கு மாதம் 15,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

59
ஆன்லைனில் பொருட்களை விற்கலாம் ஈசியா!
Image Credit : our own

ஆன்லைனில் பொருட்களை விற்கலாம் ஈசியா!

பயன்படுத்திய பொருட்களை மிக குறைந்த விலையில் வாங்கி அதனை மேம்படுத்தி இணையத்தில் விற்றால் நல்ல லாபம் கிடைக்கும். அதற்கு ஓஎல்எக்ஸ் போன்ற செயலிகள் உதவுகின்றன. OLX, Facebook Marketplace, Instagram போன்றவற்றில் பொருட்களின் புகைப்படங்கள், விளக்கம் பதிவிட்டு விற்கலாம். அதில் பொருளின் வகை, தேவைப் பொருந்து ரூ.500 முதல் ரூ.20,000 வரை வருமனம் பெறலாம்.

69
அஃபிலியேட் மார்க்கெட்டிங்
Image Credit : Gemini

அஃபிலியேட் மார்க்கெட்டிங்

பொருட்களை விற்பனை செய்து எளிதாக 3% சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கமிஷன் தொகை பெறலாம். அதற்கு நீங்கள் Amazon Associates, Flipkart Affiliate போன்றவற்றில் சேர்ந்து, தயாரிப்பு லிங்க்களை உருவாக்கி WhatsApp, Facebook, Instagram-ல் பகிரவும். ரூ.1000 மதிப்புள்ள பொருளுக்கு விற்பனை செய்தால் ரூ.30 முதல் ரூ.100 வரை லாபம் கிடைக்கும் .

79
ஆன்லைன் Tutor
Image Credit : Google

ஆன்லைன் Tutor

பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்து அதன் மூலம் தினமும் ஆயிரக்கணக்கில் வருமானம் ஈட்டலாம். Vedantu, Unacademy போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்து, பதிவு செய்து, மாணவர்களுக்கு நேரடி அல்லது பதிவு செய்யப்பட்ட வகுப்புகள் நடத்தலாம்.ஒவ்வொரு மணி நேரமும் உங்களுக்கு ரூ.500 முதல் ரூ.2,000 வரை வருமானம் கொடுக்கும்.

89
கைகொடுக்கும் Content Creation
Image Credit : our own

கைகொடுக்கும் Content Creation

YouTube, Instagram போன்றவற்றில் வீடியோ பதிவு செய்து, எடிட் செய்து, இடையிலான இடைவெளியில் பதிவு செய்யுங்கள். பின்தொடர்பவர்களை அதிகரிக்கவும். முதன்முறையாக ஆரம்பிப்பவர்களுக்கு மாதம் ₹1,000-₹5,000 வரை கிடைக்கலாம். புகழ்பெற்றவர்கள் இதைவிட அதிகம் சம்பாதிக்கிறார்கள்.

99
இதனை இப்படி செய்ய வேண்டும்
Image Credit : Gemini

இதனை இப்படி செய்ய வேண்டும்

உங்களுக்குப் பிடித்த 1 அல்லது 2 வழிகளை தேர்வு செய்யுங்கள், சிறிய இலக்குகளை வைத்துக் கொண்டு மெதுவாக பயணம் செய்யுங்கள்,. தினமும் போனில் ஏதாவது ஒரு செயலில் ஈடுபடுங்கள். சம்பாதித்த பணத்தை குறித்துக் கொண்டே உங்களுடைய வளர்ச்சிக்கு திட்டமிடுங்கள். சிறிது நேர்மையான முயற்சியால், உங்கள் பழைய போனே ஒரு மின்கதவு போல உங்களுக்கு வருமானத்தை தரும்.புகைப்படமோ, சிறிய பணிகளோ, அறிவை பகிர்வதோ – எல்லோருக்கும் ஏதாவது ஒரு வழி இருக்கிறது.இன்று முயற்சி செய்யுங்கள் – உங்கள் போனே உங்களுக்காக வேலை செய்யட்டும்!

About the Author

Vedarethinam Ramalingam
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
திறன் பேசி
முதலீடு
வருமானம்
வணிகம்
வணிக யோசனை
வணிக உரிமையாளர்
 
Recommended Stories
Top Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Andriod_icon
  • IOS_icon
  • About Us
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved