- Home
- Business
- ரூ.70 லட்சம் வரை சம்பளம்.. டிகிரி இல்லாமலே இந்தியாவில் அதிக சம்பளம் கிடைக்கும் வேலைகள்..
ரூ.70 லட்சம் வரை சம்பளம்.. டிகிரி இல்லாமலே இந்தியாவில் அதிக சம்பளம் கிடைக்கும் வேலைகள்..
இந்தியாவில் அதிக சம்பளம் கிடைக்கும் பல வேலைகளுக்கு கல்லூரி பட்டம் அவசியமில்லை. வெப் டெவலப்மென்ட், விமானத்துறை மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் கல்லூரி பட்டம் இல்லாமலேயே சிறந்த சம்பளம் பெறும் வாய்ப்புகள் உள்ளன.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. ஆனால் அதிக சம்பளம் கிடைக்கும் வேலையில் சேர கல்லூரிப் பட்டம் தேவை என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். ஆனால் அதிக சம்பளம் கிடைக்கும் வேலையில் சேர கல்லூர் பட்டம் தேவையில்லை என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறது. ஆம் உண்மை தான்.. சரியான திறன்கள் மற்றும் சான்றிதழ்களுடன் இருந்த இதுபோன்ற வேலையில் சேர முடியும். அந்த வகையில் இந்தியாவில் அதிக ஊதியம் கிடைக்கும் ஐந்து வேலைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
Web Designing
1. வெப் டெவலப்பர்/வெப் டிசைனர்
கோடிங் மற்றும் டிசைனிங்கில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் போதும் வெப் டெவலப்பர் ஆகலாம். உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு வெப்சைட் டெவலப்மெண்ட் மற்றும் வெப் டிசைனிங்கில் சான்றிதழ் படிப்பை படிக்கலாம். வெப் டெவலர் துறையில் எண்ட்ரி லெவல் பணிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 3 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரை சம்பளத்தை வழங்கப்படுகிறது, அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் மேலும் அதிகரிக்கும்.
2. கமர்ஷியல் விமானி
இந்தியாவில் கமர்ஷியல் விமானியாவதற்கு கல்லூரி பட்டப்படிப்பு தேவையில். விண்ணப்பதாரர்கள் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றில் தங்களின் 10 + 2 தேர்வுகளை முடிக்க வேண்டும். மேலும் அதனுடன் விமானி தொடர்பான சான்றிதல் உரிமங்களைப் பெற வேண்டும். கமர்ஷியல் விமானிகள் தொடக்கத்தில் ஆண்டுக்கு சுமார் ரூ. 9 லட்சம் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது., அனுபவம் மற்றும் பணிமூப்பு அடிப்படையில் ஆண்டுக்கு ரூ.70 லட்சம் வரை வருவாய் ஈட்டலாம்.
ethihad airways to hire 2000 pilots cabin crew and mechanics
3. கேபின் க்ரூ
விமானப் போக்குவரத்து மற்றும் வாடிக்கையாளர் சேவையில் ஆர்வமுள்ளவர்களுக்கு, விமான நிறுவனத்தில் கேபின் குழுவில் சேரலம். இதற்கும் கல்லூரிப் பட்டம் தேவையில்லை. விண்ணப்பதாரர்கள் பொதுவாக தங்கள் 10+2 தேர்வுகளை முடிக்க வேண்டும். குறிப்பிட்ட வயது, உடற்பயிற்சி மற்றும் விமான நிறுவனங்களால் நிர்ணயிக்கப்பட்ட பயிற்சி தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். கேபின் குழு உறுப்பினர்கள் ரூ. 25,000 முதல் ரூ. 50,000 வரையிலான மாதச் சம்பளத்தைப் பெறலாம்.
ரியல் எஸ்டேட் முகவர்
இந்தியாவில் ஒரு வெற்றிகரமான ரியல் எஸ்டேட் முகவராக மாறுவதற்கு கல்லூரி பட்டப்படிப்பு தேவையில்லை. நெட்வொர்க்கிங் மற்றும் வணிக புத்திசாலித்தனம் இருந்தால் போதும். விண்ணப்பதாரர்கள் சான்றளிக்கப்பட்ட ரியல் எஸ்டேட் பயிற்சி, பயிற்சி உரிமம் பெற வேண்டும். கமிஷன்கள் மற்றும் வெற்றிகரமான பரிவர்த்தனைகள் மூலம் அதிக வருவாய் ஈட்டமுடியும். ஒரு ரியல் எஸ்டேட் முகவர் ஆரம்ப நிலையில் சுமார் ரூ.4.25 லட்சம் சம்பாதிக்க எதிர்பார்க்கலாம்.
அன்று ரூ.300 சம்பளம்.. இன்று அவரின் மகனின் சொத்து மதிப்பு 10 லட்சம் கோடி..!
Ethical Hacker
நெறிமுறை ஹேக்கர்
AI மற்றும் தொழில்நுட்ப வசதி அசுர வளர்ச்சி அடைந்துள்ள இந்த காலக்கட்டத்தில் இணைய அச்சுறுத்தல்களிலிருந்து தரவு மற்றும் அமைப்புகளைப் பாதுகாப்பதில் நெறிமுறை ஹேக்கர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். சில நிறுவனங்கள் கல்லூரிப் பட்டம் பெற்றவர்களை விரும்பினாலும், 10+2 தேர்வுகளை முடித்து, நெட்வொர்க் பாதுகாப்பு அல்லது தொடர்புடைய துறைகளில் சான்றிதழ்களைப் பெற்றால் போது. நெறிமுறை ஹேக்கிங் வேலையை பெறலாம். நெறிமுறை ஹேக்கர்கள் தங்கள் நிபுணத்துவம் மற்றும் குறியீட்டு முறை மற்றும் இணையப் பாதுகாப்பில் உள்ள அனுபவத்தைப் பொறுத்து மாதந்தோறும் ரூ.28,000 முதல் ரூ.1 லட்சம் வரை சம்பாதிக்கின்றனர்.