IPS Salary | ஐபிஎஸ் அதிகாரியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?
இந்தியாவில் அதிக சம்பளம் வழங்கப்படும் பதவிகளில் ஒன்று ஐபிஎஸ். அதிகாரம், அதிக சம்பளம், மதிப்பு மரியாதை, சவால்கள் நிறைந்த ஒரு பணி என்றால் ஐபிஎஸ் பணியை குறிப்பிடலாம். ஒரு ஐபிஎஸ் அதிகாரி பணியில் சேர்ந்தது முதல் அவர் பதவி உயர்வு பெற்ற படிப்படியாக முன்னேறும் வரை சம்பளமும் அதிகரிக்கிறது.
IPS
இந்திய ஆட்சிப் பணிக்கான யுபிஎஸ்சி (UPSC) தேர்வு எழுதி, நேர்முக தேர்வில் தேர்ச்சி பெற்று, காவல் துறைக்கான முறையான பயிற்சிக்கு பின்பு தான் ஒருவர் ஐபிஎஸ் அதிகாரியாக முடியும்.
இத்தொகுப்பில், இந்தியாவில் உள்ள IPS அதிகாரிகளின் குறைந்தபட்ச சம்ளபம் முதல் அதிகபட்ச சம்பளம் வரை என்ன இருக்கும் என்பதை தெரிந்துகொள்வோம். IPS அதிகாரிகளுக்கு சம்பளத்துடன் எக்கச்சக்க சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
IPS
IPS சம்பள அமைப்பு
இந்திய சீருடை பணியாளர்களுக்கு குறிப்பாக காவல் பணிக்கு 7வது ஊதியக் குழுவால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சம்பள அமைப்பு பின்பற்றப்படுகிறது. அதன்படி, ஒருங்கிணைக்கப்பட்ட சம்பள நிலைகளை (Consolidated Pay Levels) கொண்டுள்ளது. ஒரு IPS அதிகாரியின் சம்பளம் அவர்களின் அடிப்படைச் சம்பளத்தை (Basic Pay) அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து, அவர்களது பயணப்படி (Travel Allowance - TA), அகவிலைப்படி (Dearness Allowance - DA), வீட்டு வாடகைப்படி (House Rent Allowance - HRA) போன்றவைகளை சேர்த்து மொத்த சம்பளம் கணக்கிடப்பட்டு வழங்கப்படுகிறது.
துணை கண்காணிப்பளார் டிஎஸ்பி முதல் காவல்துறை தலைமை இயக்குனர் டிஜிபி வரை பல்வேறு பதவிகளை அலங்கரிப்பவர்கள் ஐபிஎஸ் படித்தவர்கள் மட்டுமே. ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று முதலில் பதவிக்கு வரும்போது அனைத்து IPS அதிகாரிகளுக்கும் சம்பளம் ஒரே மாதிரியாக இருக்கும். பின்னர், பணிக்கால அனுபவம் அதைத்தொடர்ந்து வரும் புரோமோஷன் பதவி உயர்வு ஆகியவை சம்பள நிலையை உயர்த்தும்.
IPS Officer Salaries
துணை காவல் கண்காணிப்பாளர் (DSP)க்கு சம்பளம் ரூ.56,100 வழங்கப்படுகிறது.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ASP) ரூ.67,700 சம்பளம் வழங்கப்படுகிறது.
மூத்த காவல் கண்காணிப்பாளர் (SSP) பணிக்கு ரூ..78,800 சம்பளமும்
காவல் துணைக் கண்காணிப்பாளர் (DIGP)க்கு ரூ.1,31,100 சம்பளம் பெறுகிறார்.
இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் (IGP)க்கு சம்பளம் ரூ.1,44,200.
காவல்துறை தலைமை இயக்குனர் (டிஜிபி)க்கு ரூ.2,05,400 சம்பளம் பெறுகிறார்.
புலனாய்வு பணியகம் (IB) அல்லது மத்திய புலனாய்வு துறை (CBI) போன்ற பதவிகளில் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ரூ.2,25,000 சம்பளம் வழங்கப்படுகிறது.
அன்று ரூ.300 சம்பளம்.. இன்று அவரின் மகனின் சொத்து மதிப்பு 10 லட்சம் கோடி..!
IPS சலுகைகள்!
Union Public Service Commission (யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) மூலம் இந்திய உயர் பதவி காவல் பணி சேவைக்கான ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், 5-8 லட்சம் பேர் மதிப்புமிக்க யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வை எழுதுகிறார்கள் இதில் சுமார் 100 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் IPS அதிகாரிகளாக தேர்வாகின்றனர்.
IPS சலுகைகள்!
சம்பளத்தைத் தவிர, IPS அதிகாரிகளுக்கு பல்வேறு அரசு சலுகைகள் மற்றும் பிற சலுகைகளும் உண்டு. IPS அதிகாரிகள் பொது ஒழுங்கையும், நாட்டின் அமைதியையும் காக்க உறுதியேற்கிறார்கள். அதன்படி நடக்க வேண்டும். அவர்கள் மாநில காவல்துறை, மத்தியப் படைகள், CBI, IB போன்ற பல்வேறு ஏஜென்சிகளையும் வழிநடத்துகிறார்கள்.