MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • அன்று ரூ.300 சம்பளம்.. இன்று அவரின் மகனின் சொத்து மதிப்பு 10 லட்சம் கோடி..!

அன்று ரூ.300 சம்பளம்.. இன்று அவரின் மகனின் சொத்து மதிப்பு 10 லட்சம் கோடி..!

ஒரு ஆசிரியரின் மகனாகப் பிறந்த திருபாய் அம்பானி, ஏமனில் பணியாற்றிய அனுபவத்திற்குப் பின்னர் இந்தியாவில் ஜவுளித் தொழிலில் அடி எடுத்து வைத்தார். சகோதரருடன் இணைந்து தொடங்கிய ரிலையன்ஸ் நிறுவனம், பல தடைகளைத் தாண்டி இன்று நாட்டின் முன்னணி நிறுவனமாக மாறியுள்ளது.

2 Min read
Ramya s
Published : Aug 15 2024, 04:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Dhirubhai Ambani

Dhirubhai Ambani

1932-ம் ஆண்டு குஜராத்தின் சோர்வோடு என்ற இடத்தில் பிறந்தவர் தான் திருபாய் அம்பானி. இவரின் தந்தை ஒரு ஆசிரியர் ஆவார். தனது குடும்பத்தில் 3-வது குழந்தையாக பிறந்தவர் தான் திருபாய் அம்பானி. பெரிய குடும்பம் என்பதாலும் தனது தந்தையின் வருமானம் போதுமானதாக இல்லை என்பதாலும் சிறு வயதிலேயே வேலைக்கு சென்றார் திருபாய் அம்பானி.

29
Dhirubhai Ambani

Dhirubhai Ambani

தனது 16-வது வயதில் தனது மூத்த சகோதரர் உதவியுடன் ஏமன் நாட்டிற்கு சென்றார் திருபாய் அம்பானி. அப்போது அவர் பணியாற்றிய நிறுவனத்தில் அம்பானிக்கு ரூ.300 சம்பளம் வழங்கப்பட்டது. அங்கு சில ஆண்டுகள் அவர் பணியாற்றிய நிலையில் இந்தியாவில் சொந்தமாக நாடு திரும்பினார். 

39
Dhirubhai Ambani

Dhirubhai Ambani

இதனிடையே 1955-ம் ஆண்டு கோகிலாபென் என்ற பெண்ணை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு அனில் அம்பானி முகேஷ் அம்பானி என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். 1958-ம் ஆண்டு ஏமனில் இருந்து இந்தியா வந்த அவர் ஜவுளித்தொழில் தொடங்க முடிவு செய்தார். திருபாய் அம்பானி 1960களில் தனது உறவினர் சம்பக்லால் தமானியுடன் இணைந்து ரிலையன்ஸ் கார்ப்பரேஷனுக்கு அடித்தளம் அமைத்தார்.

முதலீடு இல்லாமலே நல்ல லாபம்.. வீட்டிலிருந்து எப்படி கூடுதல் வருமானம் ஈட்டலாம்?

49
Dhirubhai Ambani

Dhirubhai Ambani

இருவரும் இணைந்து மஸ்ஜித் பண்டரில் ஒரு சிறிய அலுவலகத்தில் தங்கள் தொழிலைத் தொடங்கினார்கள். தனது நிறுவனத்தின் மூலம் பாலிஸ்டர் நூலை இறக்குமதி செய்து மசாலாப் பொருட்களை ஏமனுக்கு ஏற்றுமதி செய்தார். இதை தொடர்ந்து ரிலையன்ஸ் கமர்ஷியல் என்ற நிறுவனத்தை தொடங்கினார். 350 சதுர அடி கொண்ட அவரின் அலுவலகத்தில் ஒரு தொலைபேசி, ஒரு மேஜை மற்றும் மூன்று நாற்காலிகள், இரண்டு உதவியாளர்கள் இருந்தனர். இந்த காலகட்டத்தில், அம்பானியும் அவரது குடும்பத்தினரும் மும்பையின் புலேஷ்வரில் உள்ள ஜெய் ஹிந்த் எஸ்டேட்டில் இரண்டு படுக்கையறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் தங்கினர்.

59
Dhirubhai Ambani

Dhirubhai Ambani

ஆனால் 1965 ஆம் ஆண்டில், சம்பக்லால் தமானி மற்றும் திருபாய் அம்பானி ஆகியோர் தங்கள் கூட்டுறவை முடித்துக்கொண்டனர். எனினு இது திருபாய் அம்பானியின் வெற்றிக் கதையின் தொடக்கமாகும், ஜவுளித் தொழிலில் வளர்ந்து வரும் தேவையைப் பற்றி அறிந்து கொண்ட திருபாய் அம்பானி, நரோடா அகமதாபாத்தில் "விமல்" என்ற பெயரில் ஜவுளி நூற்பு ஆலையில் வணிக லாபத்திற்கான வாய்ப்பை உணர்ந்தார்.

69
Dhirubhai Ambani

Dhirubhai Ambani

அதே ஆண்டில், 1996ல் ரிலையன்ஸ் கார்ப்பரேஷன் மகாராஷ்டிராவில் ரிலையன்ஸ் டெக்ஸ்டைல்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் இணைக்கப்பட்டது. முதல் செயற்கை துணி ஆலை குஜராத்தின் நரோடாவில் நிறுவப்பட்டது. 10 ஆண்டுகளுக்குள், நிறுவனத்தின் ஆண்டு வருவாய் ரூ. 70 கோடி ஆக இருந்தது. இதை தொடர்ந்து அம்பானிக்கு வளர்ச்சி பாதையாகவே இருந்தது. இன்று திருபாய் அம்பானி தொடங்கிய ரிலையன்ஸ் நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக மாறியது.

79
Dhirubhai Ambani

Dhirubhai Ambani

துரதிர்ஷ்டவசமான மரணம்

திருபாய் அம்பானி முதல் முறையாக 1986 ஆம் ஆண்டு பெரும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். பக்கவாதத்தால் அவரது வலது கை செயலிழந்ததால், தனது இரு மகன்களிடமும் தனது தொழிலை ஒப்படைக்க முடிவு செய்தார். ஜூன் 24, 2002 அன்று அவர் இரண்டாவது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

SIP முதலீடு மூலம் பல லட்சம் சேமிக்கலாமா... அது எப்படி வேலை செய்யுது? முதலீடு செய்வது எப்படி?

89
Dhirubhai Ambani

Dhirubhai Ambani

அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்த நிலையில் ஜூலை 6 ஆம் தேதி மறைந்தார். அவரது துரதிர்ஷ்டவசமான மரணம் வணிக உலகிலும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. எனினும் தனது மகன்களுக்கு அவர் சொத்துக்களை பிரிக்காததால்  குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. 

99
Dhirubhai Ambani

Dhirubhai Ambani

திருபாய் அம்பானியின் இரு மகன்களும் அவர் விட்டு சென்ற தொழிலை சிறப்பாகவே நடத்தினர். இதில் அனில் அம்பானி கொஞ்சம் பின்னடவை சந்தித்தாலும் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரராகவும் திகிழ்கிறார். முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.10 லட்சம் கோடி என்று கூறப்படுகிறது. 

 

 

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved