- Home
- Business
- Tomato and Onion Price: பெட்டி பெட்டியாக தக்காளி.! மூட்டை மூட்டையாக வெங்காயம்.! போட்டி போட்டு அள்ளி செல்லும் இல்லத்தரசிகள்! விலை நிலவரம்?
Tomato and Onion Price: பெட்டி பெட்டியாக தக்காளி.! மூட்டை மூட்டையாக வெங்காயம்.! போட்டி போட்டு அள்ளி செல்லும் இல்லத்தரசிகள்! விலை நிலவரம்?
Vegetable Prices: ரசம் முதல் பிரியாணி வரை இந்தியாவில் அனைத்து வகையான உணவு தயாரிப்புகளிலும் வெங்காயம், தக்காளி பயன்பாடு தேவை தான் மிக அதிகம். காய்கறிகளை விட பை நிறைய தக்காளி, வெங்காயத்தை அதிகளவில் இல்லத்தரசிகள் வாங்கி செல்வது வழக்கம்.

வெங்காயம், தக்காளி
சமையலுக்கு என்ன தான் காய்கறிகளை போட்டு செய்தாலும் ருசியை தூக்கிக்கொடுப்பது தக்காளி, வெங்காயம். அதாவது ரசம் முதல் பிரியாணி வரை இந்தியாவில் அனைத்து வகையான உணவு தயாரிப்புகளிலும் வெங்காயம், தக்காளி பயன்பாடு தேவை தான் மிக அதிகம். காய்கறிகளை விட பை நிறைய தக்காளி, வெங்காயத்தை அதிகளவில் இல்லத்தரசிகள் வாங்கி செல்வது வழக்கம். இதன் காரணமாகவே லாரியில் மூட்டை மூட்டையாக வெங்காயமும், பெட்டி பெட்டியாக தக்காளி சந்தையில் அதிகளவில் குவிந்து வருகின்றது.
சென்னை கோயம்பேடு காய்கறி நிலவரம்
மேலும் காய்கறிகளின் வரத்தை பொறுத்து விலையும் நிர்ணயிக்கப்படுகிறது. பருவமழை மற்றும் கோடை வெயில் காலத்தில் மட்டும் தக்காளி, வெங்காயம் விலை உச்சப்பெறும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்றைய தக்காளி, வெங்காயம் மற்றும் காய்கறிகளின் விலையை குறித்து பார்க்கலாம்.
பீட்ரூட் முதல் குடைமிளகாய் வரை
பெரிய வெங்காயம் ஒரு கிலோ 25 முதல் 32 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 முதல் 75 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 40 முதல் 50 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 62 முதல் 78 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 44 முதல் 56 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 32 ரூபாய்க்கும், நெல்லிக்காய் 84 முதல் 105 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 60 முதல் 75 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 47 முதல் 59 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 43 முதல் 54 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
காலிஃபிளவர் முதல் முருங்கைக்காய் வரை விலை நிலவரம்
பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 48 முதல் 60 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 50 முதல் 63 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 36 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 58 முதல் 72 ரூபாய்க்கும், காலிஃபிளவர் ஒரு கிலோ 31 முதல் 39 ரூபாய்க்கும், கொத்தவரை 50 முதல் 63 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 34 முதல் 42 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 60 முதல் 75 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 36 முதல் 45 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
பீர்க்கங்காய் விலை நிலவரம்
சேனைக்கிழங்கு ஒரு கிலோ 43 முதல் 54 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 72 முதல் 90 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 96 முதல் 120 ரூபாய்க்கும், மாங்காய் 20 முதல் 26 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 46 முதல் 57 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 32 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 46 முதல் 57 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 49 முதல் 62 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 48 முதல் 60 ரூபாய்க்கும், கோவைக்காய் ஒரு கிலோ 38 முதல் 48 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

