MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Photos:Post office savings scheme:மாதம் ரூ.4,950 வருமானத்தை உறுதிசெய்யும் அஞ்சல சேமிப்புத் திட்டம்:முழு விவரம்

Photos:Post office savings scheme:மாதம் ரூ.4,950 வருமானத்தை உறுதிசெய்யும் அஞ்சல சேமிப்புத் திட்டம்:முழு விவரம்

அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள் நிலையான, உறுதியான வருமானத்தை வழங்கும். முதலீடு செய்தவர்களுக்கு உறுதியான பலன்கள் கிடைக்கும். 

1 Min read
Pothy Raj
Published : Jan 10 2023, 04:59 PM IST| Updated : Jan 10 2023, 05:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மாந்திர வருமானம் ஈட்டும் சேமிப்புத் திட்டம்

மாந்திர வருமானம் ஈட்டும் சேமிப்புத் திட்டம்

 அஞ்சலகம் சார்பில் உருவாக்கப்பட்ட சிறுசேமிப்புத் திட்டங்களில் ஒன்று மாதாந்திர வருமானம் ஈட்டும் திட்டமாகும். ஒருகணக்குதாரர் ரூ.1000 அதற்கு மேல் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக ஒருகணக்கு தாரர் ரூ.4.50 லட்சமும், கூட்டுக்கணக்குவைத்திருந்தால்  ரூ.9.50 லட்சமும் முதலீடு செய்யலாம். தனிநபர் அதிகபட்சமாக ரூ.4.50 லட்சம் முதலீடு செய்யலாம். 

25
அதிகபட்சம் எவ்வளவு முதலீடு செய்யலாம்

அதிகபட்சம் எவ்வளவு முதலீடு செய்யலாம்

தனி கணக்குதாரராக இருந்தால், மாதாந்திர வருமானம் திட்டத்தில் ரூ.4.50லட்சம் முதலீடு செய்து ஆண்டுக்கு ரூ.29,700 வட்டியாகப் பெறலாம். இந்த தொகையை 12 மாதங்களுக்குப் பிரிக்கலாம். கூட்டுக் கணக்காகஇருந்தால், ரூ.9லட்சம் வரை முதலீடு செய்யலாம். அவ்வாறு முதலீடு செய்யும்போது, ஆண்டுக்கு ரூ.59,400 வட்டி கிடைக்கும். இதை 12 மாதங்களுக்குப் பிரித்து மாத வருமானமாக மாற்றும்போது ரூ.4,950 கிடைக்கும்.

35
வட்டி எப்படி கிடைக்கும்

வட்டி எப்படி கிடைக்கும்

கணக்கு தொடங்கிய நாளில் இருந்து ஒவ்வொரு மாதத்தின் முடிவிலும் வட்டி கணக்கிடப்பட்டு முதிர்வுத்தொகை வரும்வரை வழங்கப்படும். ஒவ்வொரு மாதம் வரும் வட்டிக்கும் கூட்டுவட்டி கிடைக்காது. திட்டத்தில் குறிப்பிடப்பட்ட தொகைக்கு அதிகமாக கணக்குதாரர் முதலீடு செய்திருந்தால், அந்தப்பணம் டெபாசிட்தாரரிடம் திருப்பித் தரப்படும். அல்லது, அஞ்சல சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்படும். டெபாசிட் செய்துள்ள பணத்துக்கான வட்டிவீதம் மட்டுமே கணக்கில் எடுக்கப்படும்.

45
யாரெல்லாம் திட்டத்தில் சேரலாம்

யாரெல்லாம் திட்டத்தில் சேரலாம்

வயதுவந்தவர்கள் யார் வேண்டுமானாலும் தனிநபர் மாத வருமானத் திட்டத்தில் சேரலாம்.கூட்டுக்கணக்கு தொடங்க 3 நபர்கள் தேவை. குழந்தைகள் பெயரில் தொடங்க, காப்பாளர், அல்லது பெற்றோர் கையொப்பம் தேவை. 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு அவர்கள் பெயரிலேயே கணக்குத் தொடங்கலாம்.

55
வட்டி எதில் வரவு வைக்கப்படும்

வட்டி எதில் வரவு வைக்கப்படும்

முதலீடு செய்த பணத்துக்கு வட்டி மாதந்தோறும் கணக்குத்தாரரின் எங்கு அஞ்சல சேமிப்புக் கணக்கு தொடங்கியுள்ளாரோ அந்த சேமிப்புக் கணக்கில் சேர்க்கப்படும். ஒருவேளை முதலீடு செய்த அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கு இருந்தால் அங்குள்ள கணக்கில் வரவு வைக்கப்படும்.

About the Author

PR
Pothy Raj
தபால் அலுவலகத் திட்டம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved