- Home
- Business
- அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! சம்பளம் இரண்டு மடங்கா உயரப்போகுது.? 8வது ஊதியக் குழுவில் காத்திருக்கும் குஷியான அறிவிப்பு
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! சம்பளம் இரண்டு மடங்கா உயரப்போகுது.? 8வது ஊதியக் குழுவில் காத்திருக்கும் குஷியான அறிவிப்பு
8th Pay Commission : மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக் குழு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. ஃபிட்மென்ட் காரணி, அகவிலைப்படி அடிப்படையில் ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் மற்றும் ஓய்வூதியம் கணிசமாக உயரும்.

மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 8வது மத்திய ஊதியக் குழு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. 2025 ஜனவரியில் இந்த ஆணையத்திற்கு மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்திருந்தாலும்,
ஆணையம் அமைப்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போது மாநில அரசுகளுடன் தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. 8வது ஊதியக் குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சரியான நேரத்தில் வெளியிடப்படும் என நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி சமீபத்தில் ராஜ்யசபாவில் பேசும்போது தெளிவுபடுத்தினார்.
தற்போது அகவிலைப்படி 58 சதவீதமாக உள்ளது. 8வது ஊதியக் குழு வரும்போது அகவிலைப்படி 60 சதவீதத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 60 சதவீத அகவிலைப்படியை கருத்தில் கொள்ளும்போது, அடிப்படை ஃபிட்மென்ட் காரணி 1.60 ஆக இருக்கும். இதனுடன் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை கூடுதல் உயர்வு வழங்க வாய்ப்புள்ளது.
உதாரணமாக, 20 சதவீத உயர்வு வழங்கப்பட்டால், ஃபிட்மென்ட் காரணி 1.92 ஆக மாறும். 30 சதவீத உயர்வு வழங்கப்பட்டால், ஃபிட்மென்ட் காரணி 2.08 ஆக உயரும். திருத்தப்பட்ட சம்பளம் = அடிப்படை சம்பளம் × ஃபிட்மென்ட் காரணி என்ற அடிப்படை சூத்திரத்தைப் பயன்படுத்தி புதிய சம்பளம் கணக்கிடப்படும்.
தற்போது 7வது ஊதியக் குழுவின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்குக் கிடைக்கும் குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் ரூ.18,000 மற்றும் ஓய்வூதியதாரர்களுக்குக் கிடைக்கும் குறைந்தபட்ச அடிப்படை ஓய்வூதியம் ரூ.9,000 ஆகும். இது தவிர, 58 சதவீத அகவிலைப்படி/அகவிலை நிவாரணம் வழங்கப்படுகிறது.
8வது ஊதியக் குழு செயல்படுத்தப்படும்போது, அகவிலைப்படி/அகவிலை நிவாரணம் பூஜ்ஜியமாக மாற்றியமைக்கப்படும். ஃபிட்மென்ட் காரணி 1.92 ஆக இருந்தால், ஊழியர்களுக்குக் கிடைக்கும் புதிய குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் ரூ.34,560 ஆகவும், ஓய்வூதியதாரர்களுக்குக் கிடைக்கும் குறைந்தபட்ச அடிப்படை ஓய்வூதியம் ரூ.17,280 ஆகவும் இருக்கும்.
ஃபிட்மென்ட் காரணி 2.08 ஆக இருந்தால், ஊழியர்களுக்குக் கிடைக்கும் புதிய குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் ரூ.37,440 ஆகவும், ஓய்வூதியதாரர்களுக்குக் கிடைக்கும் குறைந்தபட்ச அடிப்படை ஓய்வூதியம் ரூ.18,720 ஆகவும் இருக்கும். ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்கள் சம்பளம்/ஓய்வூதிய உயர்வை நிர்ணயிக்கும் 8வது ஊதியக் குழுவின் அறிவிப்புக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.