MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ஆப்பு வச்சதுக்கு அப்புறம் இன்ப அதிர்ச்சி! டி.சி.எஸ் ஊழியர்களுக்குக் கொண்டாட்டம்!

ஆப்பு வச்சதுக்கு அப்புறம் இன்ப அதிர்ச்சி! டி.சி.எஸ் ஊழியர்களுக்குக் கொண்டாட்டம்!

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) அதன் பெரும்பாலான ஊழியர்களுக்கு 4.5% முதல் 7% வரை சம்பள உயர்வு அறிவித்துள்ளது. சிறப்பாகச் செயல்படும் ஊழியர்களுக்கு 10%க்கும் மேலாக சம்பள உயர்வு வழங்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

1 Min read
Author : SG Balan
Published : Sep 02 2025, 02:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
டி.சி.எஸ். சம்பள உயர்வு
Image Credit : social media

டி.சி.எஸ். சம்பள உயர்வு

நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்) அதன் பெரும்பாலான ஊழியர்களுக்கு 4.5% முதல் 7% வரை சம்பள உயர்வு அறிவித்துள்ளது. இந்தச் சம்பள உயர்வு செப்டம்பர் முதல் அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.

நிறுவனம் இந்த உயர்வு குறித்த அறிவிப்புக் கடிதங்களை திங்கள்கிழமை மாலை முதல் ஊழியர்களுக்கு அனுப்பத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து நிறுவனம் அதிகாரபூர்வமான எந்தத் தகவல்களையும் இதுவரை வெளியிடவில்லை.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
12,000 ஊழியர்களைப் பணி நீக்கம்
Image Credit : Social media

12,000 ஊழியர்களைப் பணி நீக்கம்

கடந்த இரண்டு மாதங்களாக, இந்த நிறுவனம் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகி வந்தன. சந்தை நிலவரம் சரியாக இல்லாத காரணத்தினால் சம்பள உயர்வை ஒத்திவைப்பதாக முதலில் அறிவித்திருந்தது.

இதைத் தொடர்ந்து, சுமார் 12,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யப் போவதாகவும், அதாவது அதன் மொத்த ஊழியர்களில் 2% பேரை நீக்கப் போவதாகவும் அறிவித்தது.

33
10%க்கும் மேலாக சம்பள உயர்வு
Image Credit : Getty

10%க்கும் மேலாக சம்பள உயர்வு

சமீபத்தில் வெளியான ஊடக அறிக்கைகளின்படி, பெரும்பாலான ஊழியர்கள் கீழ் மற்றும் மத்திய நிலையில் உள்ளவர்கள்தான் இந்தச் சம்பள உயர்வு பெறத் தகுதியுள்ளவர்கள் என்று கூறப்படுகிறது. அதேநேரம், சிறப்பாகச் செயல்படும் ஊழியர்களுக்கு 10%க்கும் மேலாக சம்பள உயர்வு வழங்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜூன் மாதக் காலாண்டு அறிக்கையின்படி, இந்நிறுவனத்தின் பணியாளர் விலகல் விகிதம் (attrition rate) 13.8% ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
சம்பளம்
சம்பள உயர்வு
தொழில்
வேலைவாய்ப்பு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Saving Tips: பட்ஜெட்டில் இனி துண்டு விழாது.! வீட்டு செலவை பாதியாக குறைக்க 20 ஐடியாஸ்.!
Recommended image2
எமிரேட்ஸ் டிரா: ஒவ்வொரு பரிசுத் தொகுப்பையும் வென்ற கணக்காளர்! அவரது 4 மில்லியன் டாலர் வெற்றிக்குப் பின்னால் இருந்தது என்ன?
Recommended image3
Online Shopping Tricks: மாதம் ரூ.5,000 மிச்சப்படுத்த ஆன்லைன் ஷாப்பிங் டிரிக்.! கேஷ்பேக் + பேங்க் ஆபர் + சேல் = பணம் சேமிக்கும் சூப்பர் ஃபார்முலா!
Related Stories
Recommended image1
டிசிஎஸ் சென்னையில் போட்ட பிளான்.. ஒட்டுமொத்தமா மாறுது.. ஐடி ஊழியர்கள் மகிழ்ச்சி!
Recommended image2
டிசிஎஸ் பணிநீக்கங்கள்: 12,000 ஊழியர்களின் வேலைகள் ஆபத்தில் - ஐடி துறையின் எதிர்காலம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved