- Home
- Business
- இந்த ஒரு தொழில் போதும்! மாதம் ரூ.2 லட்சம் கண்பார்ம் - லட்சத்தில் வருமானம் அள்ளும் தொழில் பற்றி தெரியுமா?
இந்த ஒரு தொழில் போதும்! மாதம் ரூ.2 லட்சம் கண்பார்ம் - லட்சத்தில் வருமானம் அள்ளும் தொழில் பற்றி தெரியுமா?
Business Idea: வேலை செய்யும் பலர் ஒரு நாள் தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பார்கள். சில வருடங்கள் வேலை செய்துவிட்டு, பிறகு ஒரு நல்ல தொழிலை தொடங்கி செட்டில் ஆக நினைக்கிறார்கள். ஆனால் நாம் சம்பாதிக்கும் போதே நான்கு பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் ஒரு நல்ல பிசினஸ் ஐடியாவை பற்றி இன்று தெரிந்து கொள்வோம்..

மனித வாழ்க்கைக்கு உணவு, உடை எவ்வளவு முக்கியமோ, அதே அளவு மருத்துவமும் முக்கியம். அதனால் தான் மருத்துவத் துறை சார்ந்த தொழில்களில் நஷ்டம் என்பதே இருக்காது என்று பலர் கூறுகிறார்கள். போட்டி அதிகமாக இருந்தாலும் மருத்துவத் துறையில் நல்ல லாபம் பார்க்கலாம். மருத்துவத் துறையில் உள்ள ஒரு சிறந்த பிசினஸ் ஐடியாவை பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.
மருத்துவத் துறையில் மருந்துகள், அறுவை சிகிச்சைக்கு தேவையான இயந்திரங்களுடன் கண்டிப்பாக தேவைப்படும் ஒரு பொருள் காட்டன். சர்ஜிக்கல் காட்டனுக்கு நாளுக்கு நாள் டிமாண்ட் அதிகரித்து வருகிறது. சிறிய நகரங்களில் கூட பெரிய பெரிய மருத்துவமனைகள் வந்துவிட்டன. மெடிக்கல் ஷாப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அறுவை சிகிச்சைகள் அதிகரித்து வருவதால் சர்ஜிக்கல் காட்டனுக்கும் டிமாண்ட் அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட சர்ஜிக்கல் காட்டன் தயாரிப்பு யூனிட்டை தொடங்கினால் நினைத்துப் பார்க்க முடியாத லாபத்தை ஈட்டலாம். இந்த பிசினஸை எப்படி தொடங்குவது? எவ்வளவு செலவாகும்? போன்ற விவரங்கள் உங்களுக்காக..
சர்ஜிக்கல் காட்டன் தயாரிக்க முதலில் மொத்தமாக பருத்தியை வாங்க வேண்டும். இந்த காட்டனை உள்ளூரில் இருக்கும் காட்டன் மில்ஸ்லிருந்து நேரடியாக வாங்கலாம். பிறகு இந்த காட்டனை சில ரசாயனங்களை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இப்படி பருத்தியை சுத்தம் செய்த பிறகு அதை வைத்து சர்ஜிக்கல் காட்டன் தயாரிக்கிறார்கள். இதற்காக சில மிஷின்களை வாங்க வேண்டும். கடைசியாக பருத்தியை ரவுண்ட் ஷேப்பில் பேக்கிங் செய்கிறார்கள்.
எவ்வளவு முதலீடு.? லாபங்கள் எப்படி இருக்கும்.?
சர்ஜிக்கல் காட்டன் தயாரிப்பு பிளாண்ட் அமைக்க முதலீடு அதிக அளவில் தேவைப்படும். வெறும் இயந்திரங்களுக்கே ரூ. 70 லட்சம் தேவைப்படும். ரா மெட்டீரியல்ஸ்க்கு குறைந்தபட்சம் ரூ. 10 லட்சம் வரை முதலீடு செய்ய வேண்டும். ஆனால் முதலீட்டிற்கு ஏற்றார் போலவே வருமானம் இருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். சர்ஜிக்கல் காட்டனை நல்ல பிராண்டிங்குடன் ஹோல்சேல் விற்பனை செய்தால் மாதம் குறைந்தபட்சம் ரூ. 2 லட்சம் வருமானம் பெறலாம். அதுமட்டுமில்லாமல் உங்களோடு சேர்ந்து இன்னும் நான்கு பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கலாம். ஏற்கனவே இந்த தொழிலை நடத்தி வருபவர்களை நேரடியாக தொடர்பு கொண்டு பிசினஸ் தொடங்கினால் நல்ல லாபம் பெறலாம்.