ரூ.5,000 வரை.. போன்பே வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. நோட் பண்ணுங்க
டீ கடை முதல் டாக்ஸி, உணவு டெலிவரி முதல் ஆன்லைன் ஷாப்பிங் வரை அனைத்திற்கும் மொபைல் மூலம் பணம் செலுத்துவது சாதாரண விஷயமாகி விட்டது. போன்பே நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ரூ.5,000 வரை லிமிட்
இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், யுபிஐ பயன்பாடு தினசரி வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறியுள்ளது. டீ கடை முதல் டாக்ஸி, உணவு டெலிவரி முதல் ஆன்லைன் ஷாப்பிங் வரை அனைத்திற்கும் மொபைல் மூலம் பணம் செலுத்துவது சாதாரண விஷயமாகி விட்டது. இந்த சூழலில் போன்பே நிறுவனம் பயனர்களுக்கு பெரிய சுலபத்தை வழங்கும் புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி ஒவ்வொரு சிறிய பரிவர்த்தனைக்கும் யுபிஐ பின் உள்ளிட வேண்டிய அவசியம் இருக்காது.
கைரேகை அல்லது முகஅடையாளம்
போன்பே தற்போது பயோமெட்ரிக் அடிப்படையிலான அங்கீகார முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது கைரேகை அல்லது முகஅடையாளம் (Face Unlock) மூலம் பணம் செலுத்த முடியும். இதன் மூலம் பரிவர்த்தனை நடைமுறை மேலும் விரைவாகவும் எளிதாகவும் மாறும். தினசரி சிறிய செலவுகளுக்கான கட்டணங்களை பின் இல்லாமல் முடிக்கலாம் என்பதால் பயனர்களுக்கு நேரச்சேமிப்பு கிடைக்கும்.
ரூ.5,000 வரை லிமிட்
ரூ.5,000 வரை உள்ள யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு இந்த வசதி பொருந்தும். குறிப்பாக காய்கறி, மருந்து, உணவு, சிறிய பொருட்கள் வாங்கும் போது கைரேகை அல்லது முகஅடையாளம் மட்டும் போதுமானது. ஆனால் ரூ.5,000 ஐ விட அதிகமான தொகைக்கு வழக்கம்போல யுபிஐ பின் அவசியம். இது பாதுகாப்பு தரத்தை குறைக்காமல் வைத்திருக்க உதவும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
யுபிஐ கட்டணம்
தற்போது இந்த வசதி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. ஐபோன் பயனர்களுக்கும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த அம்சம் பரிவர்த்தனை செயல்முறையில் இடையூறுகளை குறைத்து, வேகமான பணப்பரிவர்த்தனையை உறுதி செய்யும் என போன்பே விளக்கியுள்ளது.
பயோமெட்ரிக் கட்டண முறை
இந்த பயோமெட்ரிக் கட்டண முறையை செயல்படுத்த, போன்பே செயலியைத் திறந்து சுயவிவரம் பகுதியில் உள்ள “பணம் செலுத்துதல்களை நிர்வகி” விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும். அங்கு “பயோமெட்ரிக் பே” என்ற அமைப்பை செயல்படுத்தி, முதல் முறை யுபிஐ பின் மற்றும் கைரேகை உறுதிப்படுத்த வேண்டும். அதன் பின்னர் ரூ.5,000 வரை உள்ள பரிவர்த்தனைகளுக்கு பின் உள்ளிட தேவையில்லை. மொபைல் பாதுகாப்பு முறை இரண்டாம் கட்ட அங்கீகாரமாக செயல்படும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

