ஆபத்து கிடையாது.. அதிக வருமானம்! கோல்டு ETF-ன் 5 நன்மைகள்
தங்கம் வேகமாக விலை உயர்ந்து வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களின் வியூகம் மற்றும் உலகளாவிய மந்தமான பொருளாதாரம் காரணமாக தங்கம் முதலீட்டாளர்களின் விருப்பமாக உள்ளது. சந்தை வல்லுநர்கள் இதை ஆபத்து இல்லாத முதலீடாக கருதுகின்றனர்.

Gold ETF Investment : இடிஎப் (ETF) என்றால் எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட்ஸ், எனவே இதை எளிதாக வாங்கவும் விற்கவும் முடியும். கோல்டு இடிஎஃப்-ஐ பங்குச் சந்தையில் (Share Market) எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம், எப்போது வேண்டுமானாலும் விற்று லாபம் பார்க்கலாம்.
பிஸிக்கல் கோல்டை வங்கியில் அல்லது லாக்கரில் வைத்தால் கட்டணம் செலுத்த வேண்டும். வீட்டில் வைத்தால் திருட்டு பயம் இருக்கும், ஆனால் கோல்டு இடிஎஃப்-க்கு அப்படி எந்த தொந்தரவும் இல்லை. எக்ஸ்சேஞ்ச் டிரேடட் யூனிட்ஸுக்கு ஸ்டோரேஜ் காஸ்ட் எதுவும் கிடையாது. இது டிமேட் அக்கவுண்ட்டுடன் இணைக்கப்பட்டிருக்கும். இதனால் கிடைக்கும் லாபத்தை எப்போது வேண்டுமானாலும் வங்கி கணக்கிற்கு மாற்றலாம்.
நீங்கள் இடிஎஃப் ஆக டிஜிட்டல் தங்கம் வாங்கும்போது, தங்க நகைகளின் மேக்கிங் சார்ஜ் பற்றி கவலைப்படத் தேவையில்லை. பொதுவாக தங்க நகைகளின் மேக்கிங் காஸ்ட் 15-20% வரை இருக்கலாம். கோல்டு இடிஎஃப்-ல் இதை தவிர்க்கலாம்.
உங்களிடம் குறைவான பணம் இருந்தாலும் கோல்டு இடிஎஃப் வாங்கலாம். சிறிய சிறிய யூனிட்ஸ்களில் முதலீடு செய்யலாம். தற்போது 1 கிராம் பிஸிக்கல் தங்கம் வாங்க சுமார் 8,500 ரூபாய் கொடுக்க வேண்டும், ஆனால் கோல்டு இடிஎஃப் 500-1,000 ரூபாய் அல்லது 100-200 ரூபாயில் கூட வாங்கலாம்.
தங்கத்தின் விலையை கண்காணிப்பது மிகவும் எளிதானது. நீங்கள் கோல்டு இடிஎஃப்-ல் முதலீடு செய்தால், ஒவ்வொரு நாளும் இதன் செயல்திறனையும் பார்க்கலாம், அது எவ்வளவு மேலே அல்லது கீழே வருகிறது, இதனால் உங்களுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கிறது. இது முதலீட்டின் அடிப்படையில் மிகவும் வெளிப்படையானது.
157% வரை அதிகரிக்கும் சம்பளம்.. உச்சகட்ட மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்!