MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் தொழில்கள்..

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் தொழில்கள்..

சாக்லேட் தயாரிப்பு முதல் டிபன் கடை வரை, குறைந்த முதலீட்டில் தொடங்கி நல்ல வருமானம் ஈட்டக்கூடிய தொழில் வாய்ப்புகள் ஏராளம் உள்ளன. இந்த பதிவில் இதுகுறித்து பார்க்கலாம்.

2 Min read
Author : Ramya s
| Updated : Aug 14 2024, 02:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Business Ideas Tamil

Business Ideas Tamil

சிலர் படித்த படிப்புக்கு ஏற்ற வேலையை செய்தாலும், சிலர் கிடைத்த வேலையை செய்து வருகின்றனர். இன்னும் சிலரோ எப்படியாவது ஒரு தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற இலக்கோடு இருக்கின்றனர். அந்த வகையில் குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க உதவும் சில பிசினஸ் ஐடியாக்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Business Ideas Tamil

Business Ideas Tamil

சாக்லேட் தயாரிப்பு

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவது சாக்லேட் மற்றும் ஸ்வீட் தான். அதிலும் சாக்லேட்களுக்கு மத்தியில் எப்போதுமே வரவேற்பு கிடைக்கும். அதிலும் வீட்டிலேயே ஆர்கானிக் முறையில் தயாரிக்கப்படும் ஸ்வீட் என்றால் சொல்லவா வேண்டும். எனவே சாக்லேட் தயாரிக்கும் பிசினஸை ரூ.10000 என்ற குறைந்த முதலீட்டில் தொடங்கலாம். வீட்டில் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளை ஆன்லைனில் ஆர்டர் செய்து பலரும் லாபம் ஈட்டி வருகின்றனர். இதன் மூலம் மாதம் ரூ.30000 வரை லாபம் ஈட்டி வருகின்றனர். 

36
Business Ideas Tamil

Business Ideas Tamil

கோலி சோடா :

சிறு வயதில் கோலி சோடா வாங்கி குடித்திருப்போம். அப்போது அதன் விலை ரூ.5 மட்டுமே இருந்திருக்கும். ஆனால் தற்போது இந்த கோலி சோடா பிசினஸ் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த பிசினஸுக்கு தேவையான பொருட்கள் வாங்க ரூ.50000 என்ற முதலீட்டில் இதை தொடங்கலாம். தற்போது கோலி சோடாவில் பலர் ஃபிளேவர்களை சேர்த்து ஒரு பாட்டில் ரூ.40  முதல் 50 வரை விற்கப்படுகிறது. இந்த பிசினஸில் மாதம் ரூ.50000 வரை லாபம் பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. தரமான முறையில் கோலி சோடா தயாரித்தால் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

46
Business Ideas Tamil

Business Ideas Tamil

டெயிலரிங் தொழில் :

டெயிலரிங் தொழில் என்பது எவர்கிரீன் பிசினஸ் ஆகும். ஆம். தங்களுக்கு விருப்பமான முறையில் ஆடைகளை கஸ்டமைஸ் செய்து அணிய வேண்டும் என்று  பலரும் விரும்புகின்றனர். எனவே ரூ.50000 என்ற முதலீடட்டில் தையல் பிசினஸை தொடங்கலாம்.  இந்த டெயிலரிங் பிசினஸில் 40 முதல் 60% வரை லாபம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. எனவே இது லாபகரமான தொழில்களில் ஒன்றாகும்.

56
Business Ideas Tamil

Business Ideas Tamil

டிபன் கடை அல்லது ஹோட்டல்

இன்றைய அவசர வாழ்வில் பலரும் சமைப்பதை தவிர்த்து ஹோட்டலில் ஆர்டர் செய்து சாப்பிடுகின்றனர். ஆனால் தினமும் ஹோட்டலில் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். வீட்டில் தயாரிக்கப்படும் அதே தரத்துடன் மக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று உணவு வழங்கும் டிபன் கடைகள், கேட்டரிங் சர்வீஸ் போன்றவற்றை தொடங்கலாம்.  அலுவலகங்கள், பொது இடங்கள் என குறிப்பிட்ட இடங்களில் நடமாடும் வண்டிகளில் வழங்கினால் இந்த தொழிலில் நல்ல லாபம் ஈட்டலாம். ரூ.50000 என்ற முதலீட்டில் இந்த தொழிலை தொடங்கலாம். மேலும் இதில் மாதம் ரூ.50000 வரை லாபம் கிடைக்கும். 

 

66
Business Ideas

Business Ideas

பேப்பர் பிளேட், பேப்பர் கப் பிசினஸ்

தற்போது பேப்பர் பிளேட், பேப்பர் கப் ஆகியவற்றின் தேவை அதிகரித்து வருகிறது. சுப நிகழ்ச்சிகள் தொடங்கி ஹோட்டல், டீக்கடை வரை பல இடங்களில் இவை பயன்படுத்தப்படுகிறது. தற்போது பலரும் பாக்குமட்டை தட்டுகளை பயன்படுத்துகின்றனர். எனவே இந்த பொருட்களை தயாரிக்கும் பிசினஸை தொடங்கலாம். இந்த மெஷினின் விலை ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை இருக்கும். எனவே இதற்கு கூடுதல்  முதலீடு தேவை. இதற்கு முத்ரா கடன் போன்ற கடனுடதவி மூலம் இந்த தொழிலை தொடங்கலாம். இதிலும் நல்ல லாபம் கிடைக்கும். 

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
Live
NZNZ
-
INDIND
(2.5 ov)18/1
NZ chose to bowl.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Gas Cylinder : கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு! புதிய விலை என்ன? முழு விவரம்!
Recommended image2
Government Schemes: ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்கு உதவும் மத்திய அரசின் 6 முக்கியத் திட்டங்கள்! யாருக்கெல்லாம் என்னென்ன நன்மைகள்?
Recommended image3
8th Pay Commission Pension Calculator: 8-வது ஊதியக் குழுவில் பென்ஷன் டபுள் ஆகுமா? 25, 50, 75 ஆயிரம் வாங்குபவர்களுக்கு எவ்வளவு கிடைக்கும்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved