MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ரூ.1.10 லட்சம் கோடி சாம்ராஜ்யத்தின் அதிபதி.. ஆனா சொந்தமாக மொபைல் இல்லை.. ஆடம்பர கார்கள் இல்லை..

ரூ.1.10 லட்சம் கோடி சாம்ராஜ்யத்தின் அதிபதி.. ஆனா சொந்தமாக மொபைல் இல்லை.. ஆடம்பர கார்கள் இல்லை..

ஸ்ரீராம் குழுமத்தின் தலைவர் R. தியாகராஜன், லட்சக்கணக்கான கோடிகளுக்கு அதிபதியாக இருந்தும் எளிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். ₹6 லட்சம் மதிப்புள்ள காரை ஓட்டும் இவரிடம் சொந்தமாக மொபைல் போன் கூட இல்லை.

2 Min read
Ramya s
Published : Aug 17 2024, 09:02 AM IST| Updated : Aug 17 2024, 10:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
R Thyagarajan

R Thyagarajan

ஆடம்பர வாழ்க்கையை விரும்பாத யாராவது உண்டா என்றால் பதில் சந்தேகமே.. பெரும்பாலான மக்கள் ஆடம்பர வாழ்க்கை வேண்டும் என்றே விரும்புகின்றனர். இன்றைய ஆடம்பர உலகில், பல லட்சம் கோடிகளுக்கு அதிபதியாக இருக்கும் நபர் ஆடம்பர வாழ்க்கையை விடுத்து சாதாரண எளிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்.. உண்மை தான். ரூ1.10 லட்சம் கோடி பேரரசின் நிறுவனர், ஆடம்பரத்தைத் தவிர்த்து, சாதாரணமான வீட்டில் வசிக்கும், வெறும் ₹6 லட்சம் மதிப்புள்ள காரை ஓட்டுகிறார். இந்த கோடீஸ்வரரிடம் சொந்தமாக மொபைல் போன் இல்லை என்பதே வியப்பூட்டும் தகவல். அவர் வேறு யாருமில்லை. ஸ்ரீராம் குழுமத்தின் தலைவர் R. தியாகராஜன்.

27
R Thyagarajan

R Thyagarajan

1960 களில் ஸ்ரீராம் குழுமத்தை அவர் நிறுவினார். அந்த குழுமத்தின் மூளையாகவும் அவர் இருக்கிறார். ஸ்ரீராம் ஃபைனான்ஸ் மட்டும் ரூ1.10 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை கொண்டுள்ளது. சிட் ஃபண்ட் நிறுவனமாகத் துவங்கிய நிறுவனம், இன்று பிரம்மாண்டமாக நிறுவனமாக உருவெடுத்துள்ளது.. ஆனால் தியாகராஜன் எப்படி வெற்றி பெற்றார்?

37
R Thyagarajan

R Thyagarajan

சென்னையில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த தியாகராஜன் எப்போதுமே சமத்துவத்தை பற்றி அதிகம் சிந்தித்துக் கொண்டே இருப்பார். சென்னையில் இளங்கலை மற்றும் முதுகலை மட்டத்தில் கணிதம் படித்த அவர், கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் சேர்ந்து படித்தார்.

1961 ஆம் ஆண்டில், இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் சேர்ந்த தியாகராஜன், 20 ஆண்டுகள் அங்கு பணியாற்றினார். அது தனது வேலை இல்லை என்பதை உணர்ந்த அவர், தனது 37 வது வயதில், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ஸ்ரீராம் சிட்ஸ் என்ற நிறுவனத்தை நிறுவினார்.

47
R Thyagarajan

R Thyagarajan

வங்கிகளில் கடன் பெற வேண்டுமெனில் குறிப்பிட்ட வருமானம் தேவை என்ற விதி உள்ளது. இதனால் குறைந்த வருமானம் கொண்டவர்களால் கடன் பெற முடியாத நிலை இருந்தது. வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் பெரும்பாலும் சிட் ஃபண்டுகள் என்று அழைக்கப்படும் நிதி நிறுவனங்களையே நம்பியிருக்கிறார்கள். ஸ்ரீ ராம் சிட்ஸ் நிறுவனம் குறுகிய காலத்திலேயே நல்ல வளர்ச்சியை கண்டது. ஆண்டுகள் செல்ல செல்ல மற்ற நிறுவனங்களை நிறுவிய தியாகராஜன், ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தை இறுதியில் 30 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் குழுவாக மாற்றினார். 

57
R Thyagarajan

R Thyagarajan

ஸ்ரீராம் நிறுவனம் 98% க்கும் அதிகமான நிலுவைத் தொகையை சரியான நேரத்தில் வசூலிக்கிறது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.  இன்று, ஸ்ரீராம் குழுமம் சுமார் 23 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருகிறது.. முதன்மை நிறுவனமான ஸ்ரீராம் ஃபைனான்ஸ் லிமிடெட், ரூ1.10 லட்சம் கோடி சந்தை மதிப்பை கொண்டுள்ளது.

67
R Thyagarajan

R Thyagarajan

ஸ்ரீராம் நிறுவனங்களில் உள்ள தனது பங்குகள் அனைத்தையும் 2006 இல் நிறுவப்பட்ட ஸ்ரீராம் உரிமையாளர் அறக்கட்டளைக்கு மாற்றினார். இந்த அறக்கட்டளையில் 44 குழு நிர்வாகிகள் பயனாளிகளாக உள்ளனர். நிர்வாகிகள் ஓய்வு பெறும்போது லட்சக்கணக்கான டாலர்களை எடுத்துக்கொண்டு வெளியேறுகிறார்கள். அறக்கட்டளையின் மொத்த மதிப்பு 750 மில்லியன் டாலரை தாண்டியுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் அதன் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது.

77
R Thyagarajan

R Thyagarajan

அபரிமிதமான செல்வம் இருந்தும், தியாகராஜனின் வாழ்க்கை முறை அவரது பணிவுக்கு சான்றாக உள்ளது. அவர் தொடர்ந்து ரு.6 லட்சம் மதிப்புள்ள காரை மட்டுமே ஓட்டுகிறார். நவீன் தொழில்நுட்பங்களின் ஆடம்பரங்களை தவிர்த்து வெளிச்சத்திலிருந்து விலகி இருக்க விரும்புகிறார். இதனால் அவரிடம் சொந்தமாக மொபைல் போன் கூட இல்லை. மொபைல் போனை கவனச்சிதறல் என்று அவர் கருதுகிறார். கிளாசிக்கல் இசையைக் கேட்பதற்கும் மேற்கத்திய வணிக இதழ்களைப் படிப்பதற்கும் தனது பொழுதுபோக்கு என்று தியாகராஜன் கூறியுள்ளார். 

உண்மையான வெற்றி என்பது பொருள் உடமைகளால் அளவிடப்படுவதில்லை மாறாக ஒருவர் மற்றவர் மீது ஏற்படுத்தும் தாக்கத்தால் அளவிடப்படுகிறது என்பதை தியாகராஜனின் கதை வலுவாக நினைவூட்டுகிறது.. அவரது எளிமையான வாழ்க்கை பலருக்கும் உத்வேகமாக இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் செய்திகள்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved