- Home
- Business
- பழைய 2 ரூபாய் நோட்டு வச்சா நீங்க தான் லக்கி! வீட்டிலிருந்தே லட்சாதிபதியாக ஒரு சூப்பர் வாய்ப்பு!
பழைய 2 ரூபாய் நோட்டு வச்சா நீங்க தான் லக்கி! வீட்டிலிருந்தே லட்சாதிபதியாக ஒரு சூப்பர் வாய்ப்பு!
குறிப்பிட்ட அம்சங்கள் கொண்ட பழைய 2 ரூபாய் நோட்டுகளுக்கு சர்வதேச சந்தையில் அதிக தேவை உள்ளது. இளஞ்சிவப்பு நிறத்தில் '786' என்ற எண் அச்சிடப்பட்ட ஒரு 2 ரூபாய் நோட்டை ஆன்லைனில் விற்பதன் மூலம் 4 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

2 ரூபாய் நோட்டு இருக்கா?
பழைய நாணயங்கள் மற்றும் நோட்டுகளைச் சேகரிக்கும் பழக்கம் இப்போது பலருக்குப் பெரும் லாபம் தரும் தொழிலாக மாறி வருகிறது. சர்வதேச சந்தையில் பழைய 2 ரூபாய் நோட்டுகளுக்குத் தற்போது செம டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. உங்களிடம் குறிப்பிட்ட அம்சம் கொண்ட ஒரு 2 ரூபாய் நோட்டு இருந்தால், அதை 4 லட்சம் ரூபாய் வரை விற்க முடியும் என்ற தகவல் பரவி வருகிறது.
அந்த நோட்டில் என்ன ஸ்பெஷல் இருக்கணும்?
சர்வதேச சந்தையில் அதிக விலைக்குப் போகும் அந்த 2 ரூபாய் நோட்டில் சில முக்கியமான சிறப்பம்சங்கள் இருக்க வேண்டும்:
• 786 எண்: நோட்டின் முன்பக்கத்தில் வரிசை எண்ணில் '786' என்ற எண் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். (இந்த எண் பலரால் அதிர்ஷ்டமாகவும், புனிதமான ஒன்றாகவும் கருதப்படுகிறது).
• நிறம்: அந்த நோட்டு இளஞ்சிவப்பு (Pink) நிறத்தில் இருக்க வேண்டும்.
உங்களிடம் இப்படிப்பட்ட ஒரு நோட்டு இருந்தால் 4 லட்சம் ரூபாயும், அதுவே மூன்று நோட்டுகள் இருந்தால் 12 லட்சம் ரூபாய் வரையும் சம்பாதிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
எங்கே, எப்படி விற்பது?
நீங்கள் எங்கும் அலையத் தேவையில்லை, வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் இதை விற்கலாம்:
1. Quikr போன்ற ஆன்லைன் இணையதளங்களில் 'விற்பனையாளர்' (Seller) ஆகப் பதிவு செய்ய வேண்டும்.
2. உங்களிடம் உள்ள நோட்டின் தெளிவான புகைப்படத்தைப் பதிவேற்ற வேண்டும்.
3. அந்த நோட்டை வாங்க விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் உங்களை நேரடியாகத் தொடர்புகொள்வார்கள். அதன் பிறகு விலையைப் பேசி நீங்கள் விற்றுக் கொள்ளலாம்.
எச்சரிக்கை: கவனமாக இருக்க வேண்டியவை!
சமூக வலைதளங்களில் இது போன்ற செய்திகள் வைரலாகி வந்தாலும், சில விஷயங்களில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்:
• ஆர்பிஐ (RBI) விளக்கம்: இந்திய ரிசர்வ் வங்கி இதுபோன்ற பழைய நோட்டு மற்றும் நாணயங்களை விற்கவோ, வாங்கவோ எந்த ஒரு தனிநபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ அனுமதி வழங்கவில்லை.
• மோசடி ஜாக்கிரதை: நோட்டை வாங்குவதாகச் சொல்லி யாராவது உங்களிடம் முன்பணம் கேட்டாலோ அல்லது தனிப்பட்ட வங்கி விவரங்களைக் கேட்டாலோ கொடுக்க வேண்டாம். ஆன்லைன் மோசடியாளர்களிடம் சிக்காமல் கவனமாகச் செயல்படுவது அவசியம்.
முக்கிய குறிப்பு: இது போன்ற அரிய நோட்டுகளை விற்கும் முன் அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்து கொள்வது நல்லது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

