MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • SBI ATM Rules: ஏடிஎம்‍-ல் பணம் எடுக்க இனி கூடுதல் கட்டணம்.. எஸ்பிஐ-யின் புதிய ரூல்ஸ்!

SBI ATM Rules: ஏடிஎம்‍-ல் பணம் எடுக்க இனி கூடுதல் கட்டணம்.. எஸ்பிஐ-யின் புதிய ரூல்ஸ்!

SBI ATM Rules: எஸ்பிஐ இனி 4 முறைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளது. அக்டோபர் 1 முதல் அமலாக உள்ள இந்த புதிய ரூல்ஸ் குறித்து விரிவாக பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Aug 20 2026, 07:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
SBI ATM Rules
Image Credit : x

SBI ATM Rules

நீங்கள் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வாடிக்கையாளராக இருந்து, ஒரு மாதத்தில் பலமுறை ஏடிஎம் ம்மில் பணம் எடுக்குற பழக்கம் உங்களுக்கு இருந்தால் இந்த செய்தி உங்களுக்கு தான். ஆம்... ஏடிஎம் மற்றும் வங்கி கிளைகளில் இருந்து பணம் எடுப்பதற்கான விதிகளில் எஸ்பிஐ சில முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. குறிப்பிட்ட லிமிட்டைத் தாண்டி பணம் எடுத்தால் கூடுதல் பணம் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும்.

எஸ்பிஐ தனது 'அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு' (Basic Savings Bank Deposit - BSBD) கணக்கு வைத்திருப்பவர்களுக்காக இந்த புதிய பணம் எடுக்கும் விதிகளை அறிவித்துள்ளது. இந்த புதிய விதிகள் அக்டோபர் 1, 2026 முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
அக்டோபர் 1 முதல் என்னென்ன விதிகள் மாறும்?
Image Credit : google

அக்டோபர் 1 முதல் என்னென்ன விதிகள் மாறும்?

எஸ்பிஐ-யின் புதிய விதிகளின்படி, BSBD கணக்கு வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாக 4 முறை இலவசமாகப் பணம் எடுக்கலாம் (வங்கி கிளை அல்லது ஏடிஎம் இரண்டையும் சேர்த்து). ஆனால், ஒரு மாதத்தில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால், ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் வங்கி 15 ரூபாய் சேவைக் கட்டணம் வசூலிக்கும். அதோடு, இந்த 15 ரூபாய் கட்டணத்துக்கான ஜிஎஸ்டி தொகையையும் வாடிக்கையாளர்களே செலுத்த வேண்டும். இதனால், அடிக்கடி ஏடிஎம் பயன்படுத்துபவர்கள் கூடுதல் பணம் செலுத்த வேண்டியிருக்கும்.

Related Articles

Related image1
SBI Bank Jobs: வங்கி வேலை தேடுறீங்களா? எஸ்பிஐ-ல் 1538 ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள்.. முழு விவரம்
Related image2
SBI RD Scheme: மாதம் ரூ.600 போதும்.. ரூ.1 லட்சத்துக்கு மேல் சேர்க்கும் அருமையான எஸ்பிஐ திட்டம்.. உங்களுக்கு தெரியுமா?
35
BSBD (அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு) கணக்கு என்றால் என்ன?
Image Credit : social media

BSBD (அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு) கணக்கு என்றால் என்ன?

BSBD என்பது 'Basic Savings Bank Deposit Account' என்பதன் சுருக்கம். சாமானிய மக்கள் எந்தவிதமான கூடுதல் சுமையோ அல்லது மினிமம் பேலன்ஸ் பராமரிக்க வேண்டிய தொந்தரவோ இல்லாமல் வங்கிச் சேவைகளைப் பெறுவதற்காக இந்த கணக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

45
BSBD கணக்கின் முக்கிய அம்சங்கள்
Image Credit : google

BSBD கணக்கின் முக்கிய அம்சங்கள்

இலவச ரூபே கார்டு: இந்த கணக்கு வைத்திருப்பவர்களுக்கு 'RuPay ATM-cum-Debit Card' இலவசமாக வழங்கப்படும்.

வருடாந்திர பராமரிப்புக் கட்டணம் இல்லை: இந்த ரூபே டெபிட் கார்டுக்கு எந்தவிதமான வருடாந்திர பராமரிப்புக் கட்டணமும் (Annual Maintenance Charge) கிடையாது.

பணம் எடுத்தல்: எஸ்பிஐ கிளைகள் அல்லது ஏடிஎம்கள் மூலம் பணம் எடுத்துக் கொள்ளலாம்.

செக் புக் வசதி இல்லை: இந்த கணக்கிற்கு வங்கியிடமிருந்து செக் புக் வசதி கிடைக்காது.

இலவச ஆன்லைன் பரிவர்த்தனை: NEFT மற்றும் RTGS போன்ற டிஜிட்டல்/எலக்ட்ரானிக் முறைகள் மூலம் கணக்கிற்குப் பணம் அனுப்புவதற்கு எந்தக் கட்டணமும் இல்லை.

செயல்படாத கணக்கு: ஏதாவது காரணத்தால் கணக்கு செயல்படாமல் (Inoperative) போனால், அதை மீண்டும் ஆக்டிவேட் செய்ய எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.

55
BSBD கணக்கு தொடங்க முக்கிய தகுதி
Image Credit : our own

BSBD கணக்கு தொடங்க முக்கிய தகுதி

எஸ்பிஐ-யில் BSBD கணக்கு தொடங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய நிபந்தனை உள்ளது. வாடிக்கையாளரின் பெயரில் எஸ்பிஐ-யில் வேறு எந்த சேமிப்புக் கணக்கும் (Savings Account) இருக்கக்கூடாது. ஒருவேளை எஸ்பிஐ-யில் ஏற்கெனவே சாதாரண சேமிப்புக் கணக்கு வைத்திருந்தால், புதிய BSBD கணக்கு தொடங்கிய 30 நாட்களுக்குள் பழைய சேமிப்புக் கணக்கை கட்டாயமாக மூட வேண்டும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
எஸ்பிஐ ஏடிஎம்
பாரத ஸ்டேட் வங்கி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Money making Vegetables : செமயா காசு பார்க்கணுமா? அப்போ இந்த 3 காய்கறிகளைப் பயிரிடுங்க!
Recommended image2
Edible Gold: தங்கத்தை சாப்பிடலாமா? சாப்பிட்டால் என்ன ஆகும்?
Recommended image3
Bike Toll Fee: காருக்கு டோல்… பைக்குக்கு நோ டோல்! இதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணமா?
Related Stories
Recommended image1
SBI Bank Jobs: வங்கி வேலை தேடுறீங்களா? எஸ்பிஐ-ல் 1538 ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள்.. முழு விவரம்
Recommended image2
SBI RD Scheme: மாதம் ரூ.600 போதும்.. ரூ.1 லட்சத்துக்கு மேல் சேர்க்கும் அருமையான எஸ்பிஐ திட்டம்.. உங்களுக்கு தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved