MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • SBI Bank Jobs: வங்கி வேலை தேடுறீங்களா? எஸ்பிஐ-ல் 1538 ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள்.. முழு விவரம்

SBI Bank Jobs: வங்கி வேலை தேடுறீங்களா? எஸ்பிஐ-ல் 1538 ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள்.. முழு விவரம்

SBI Bank Jobs: வங்கி வேலைக்காக தயாராகி வரும் இளைஞர்களுக்கு எஸ்பிஐ புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜூனியர் அசோசியேட் பணியில் மொத்தம் 1538 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 Min read
Author : Raghupati R
Published : Aug 11 2026, 01:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
எஸ்பிஐ வேலைவாய்ப்பு
Image Credit : Asianet News

எஸ்பிஐ வேலைவாய்ப்பு

வங்கி வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா எனப்படும் எஸ்பிஐ முக்கியமான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் ஜூனியர் அசோசியட் பணியில் மொத்தம் 1538 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் மூலம் இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

எனவே, கடைசி நேரம் வரை காத்திருக்காமல் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து விண்ணப்பிப்பது முக்கியம். இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு வயது தொடர்பான தகுதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 20 ஆகவும், அதிகபட்சம் 28 ஆகவும் இருக்க வேண்டும். இருப்பினும், குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
கல்வித்தகுதி
Image Credit : Asianet News

கல்வித்தகுதி

கல்வித் தகுதி, வயது கணக்கிடப்படும் தேதி, இடஒதுக்கீடு மற்றும் பிற தகுதிகள் தொடர்பான முழுமையான விவரங்கள் விண்ணப்பிக்கும் முன் எஸ்பிஐ வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சரிபார்ப்பது அவசியம். குறிப்பாக உங்கள் மாநிலம் மற்றும் பணியிடத்துக்கான தகுதிகளை தனியாக கவனிக்க வேண்டும். எஸ்பிஐ ஜூனியர் அசோசியேட் பணிக்கான தேர்வு பல கட்டங்களாக நடைபெறும்.

முதலில் முதல்நிலைத் தேர்வு நடத்தப்படும். இந்தத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு ஒரு மணி நேரம் நடைபெறும் கொள்குறி வகை தேர்வாக இருக்கும். தவறான பதில்களுக்கு எதிர்மறை மதிப்பெண் வழங்கப்படும். முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் அடுத்த கட்டமான முதன்மைத் தேர்வில் பங்கேற்க முடியும். இந்த முதன்மைத் தேர்வு வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதிகள் தொடர்பான இறுதி அறிவிப்பை எஸ்பிஐ அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறது.

33
விண்ணப்பிக்கும் முறை
Image Credit : Google

விண்ணப்பிக்கும் முறை

இதையடுத்து, சில விண்ணப்பதாரர்களுக்கு உள்ளூர் மொழித் திறன் தேர்வு முக்கியமானதாக இருக்கும். குறிப்பிட்ட மாநிலத்தின் உள்ளூர் மொழியை பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரண்டாம் வகுப்பில் ஒரு பாடமாக படிக்காதவர்கள் இந்தத் தேர்வில் பங்கேற்க வேண்டியிருக்கும். இதில் அந்த மொழியைப் படித்தல், எழுதுதல், பேசுதல் மற்றும் புரிந்துகொள்ளுதல் போன்ற திறன்கள் சோதிக்கப்படும். எனவே, எந்த மாநிலத்துக்கான பணியிடத்தை தேர்வு செய்கிறீர்களோ, அந்த மாநிலத்தின் மொழித் தகுதி தொடர்பான விதிகளை முன்கூட்டியே தெரிந்துகொள்வது நல்லது.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எஸ்பிஐ-யின் அதிகாரப்பூர்வ தொழில் இணையதளத்திற்குச் சென்று ஆன்லைன் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். முதலில் தனிப்பட்ட மற்றும் கல்வி விவரங்களை சரியாகப் பதிவு செய்து, தேவையான ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும். அதன் பிறகு விண்ணப்பக் கட்டணத்தை வங்கி குறிப்பிடும் ஆன்லைன் முறையில் செலுத்தி விண்ணப்பத்தை இறுதியாக சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பிறகு பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணை தொடர்ந்து செயல்பாட்டில் வைத்திருப்பது முக்கியம். தேர்வு தொடர்பான அனுமதிச்சீட்டு மற்றும் அடுத்தடுத்த அறிவிப்புகள் அவற்றின் மூலம் கிடைக்கக்கூடும். ஆகஸ்ட் 27-க்குள் விண்ணப்பிக்க வேண்டியிருப்பதால், ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரிபார்த்து விரைவாக விண்ணப்பிப்பது நல்லது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பாரத ஸ்டேட் வங்கி
வங்கி
வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு
தொழில்
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.63,200 வரை சம்பளம்! உடனே விண்ணப்பிங்க!
Recommended image2
18 Months DA Arrears: 18 மாத நிலுவை DA தொகை கிடைக்குமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்
Related Stories
Recommended image1
Budget Bikes: ரூ.80,000-க்குள் சிறந்த மைலேஜ் தரும் டாப் 3 பைக்குகள்! பெட்ரோல் செலவு பாதியாகும்!
Recommended image2
Best Cars Under 5 Lakhs: ரூ.5 லட்சத்துக்குள் கார் வாங்கணுமா? சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 கார்கள் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved