- Home
- Business
- Stock : “ரூ.1 லட்சம் போட்டிருந்தால் இன்று ரூ.14 கோடி!”.. முதலீட்டாளர்களை கோடீஸ்வரர்களாக்கிய பங்கு எது?
Stock : “ரூ.1 லட்சம் போட்டிருந்தால் இன்று ரூ.14 கோடி!”.. முதலீட்டாளர்களை கோடீஸ்வரர்களாக்கிய பங்கு எது?
ரூ.1 லட்சம் முதலீட்டை இன்று ரூ.14 கோடியாக மாற்றி, முதலீட்டாளர்களுக்கு 1400 மடங்கு வருமானத்தை வழங்கியுள்ளது ஒரு பங்கு. அது இந்த நிறுவனம், எவ்வளவு லாபத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்கியுள்ளது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அதிக லாபம் கொடுத்த பங்கு
பங்குச் சந்தையில் சரியான நேரத்தில் செய்யப்பட்ட முதலீடு, வாழ்க்கையை மாற்றக்கூடிய அளவுக்கு செல்வத்தை உருவாக்கும் என்பதற்கு இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் ஒரு பெரிய உதாரணமாக மாறியுள்ளது. ஒருகாலத்தில் வெறும் ரூ.1 லட்சம் முதலீடு செய்த முதலீட்டாளர்கள், இன்று பல கோடி ரூபாய்களின் சொந்தக்காரர்களாக உள்ளனர். கடந்த 24 ஆண்டுகளில் இந்த பங்கு கொடுத்த வருமானம் தற்போது சந்தை முதலீட்டாளர்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளது.

ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால்
கிடைத்துள்ள தகவல்களின் படி, 2002 ஆம் ஆண்டு Hindustan Zinc Limited நிறுவன பங்குகளில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால், 2026 மே மாதத்தில் அதன் மதிப்பு சுமார் ரூ.14 கோடியாக உயர்ந்திருக்கும். அதாவது, இந்த பங்கு சுமார் 1400 மடங்கு வருமானத்தை வழங்கியுள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 33 சதவீத CAGR வளர்ச்சி விகிதத்தில் இந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கு லாபம் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பங்குச் சந்தை ஏற்ற, இறக்கங்களுக்கிடையில் சில பங்குகள் மட்டுமே இத்தகைய அபார வளர்ச்சியைப் பதிவு செய்கின்றன.
முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
இந்த நிறுவனம் தற்போது தொழிலதிபர் அனில் அகர்வால் தலைமையிலான வேதாந்தா குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. 2002 ஆம் ஆண்டு மத்திய அரசு தனது 26 சதவீத பங்குகளை ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸுக்கு ரூ.445 கோடிக்கு விற்பனை செய்தது. அதன் பின் நிறுவனத்தின் வளர்ச்சி வேகம் அதிகரித்தது. இன்று, உலகின் மிகப்பெரிய வெள்ளி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக இந்த நிறுவனம் திகழ்கிறது. சமீபத்தில், 2026-27 நிதியாண்டுக்கான முதல் டிவிடெண்டாக ஒரு பங்குக்கு ரூ.11 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது.
மல்டிபேக்கர் பங்குகள்
பங்குச் சந்தையில் இத்தகைய மல்டிபேக்கர் பங்குகள் அரிதாகவே உருவாகின்றன. ஆனால், நீண்டகால முதலீடு மற்றும் பொறுமை இருந்தால் மிகப்பெரிய செல்வத்தை உருவாக்க முடியும் இந்த பங்கு மீண்டும் நிரூபித்துள்ளது. இருப்பினும், பங்குச் சந்தை முதலீடுகள் எப்போதும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை என்பதால், முதலீடு செய்வதற்கு முன் நிதி ஆலோசகர்களின் கருத்துகளைப் பெறுவது அவசியம் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

