பெட்ரோல் விலை உயர்வால் கவலையா? உங்கள் கார் மற்றும் பைக்கின் மைலேஜை அதிகரிக்க உதவும் 10 எளிய வழிமுறைகள் இங்கே பார்க்கலாம்.
நிறைய பேர் ஒவ்வொரு 5 நொடிக்கும் வேகமாக ஆக்சிலேட்டர் கொடுத்துவிட்டு, உடனே பிரேக் அடிப்பார்கள். இந்த பழக்கத்தால் தான் பெட்ரோல் வீணாகிறது.
டயரில் காற்று குறைவாக இருந்தால் அது சாலையோடு அதிகமாக உரசும். இதனால் இன்ஜினுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டு பெட்ரோல் அதிகமாக குடிக்கும். 10-15 நாட்களுக்கு ஒருமுறை செக் செய்ய வேண்டும்.
டிராஃபிக் சிக்னலில் 20-30 வினாடிகளுக்கு மேல் நிற்க வேண்டியிருந்தால், தாராளமாக இன்ஜினை ஆஃப் செய்துவிடுங்கள். புதிய வண்டிகளில் ஆட்டோ ஸ்டார்ட்-ஸ்டாப் வசதி இருக்கும்.
காரில் ஏசி போடும்போது பெட்ரோல் வேகமாக செலவாகும். சிட்டி டிராஃபிக்கில் வெயில் குறைவாக இருக்கும் நேரங்களில் ஜன்னலை திறந்து வைத்து பயணிக்கலாம். ஏசியை மிதமான அளவில் வையுங்கள்.
அழுக்கான ஏர் ஃபில்டர், காலாவதியான இன்ஜின் ஆயில், பழைய ஸ்பார்க் பிளக் ஆகியவை மைலேஜை பெருமளவு குறைத்துவிடும். காரையோ, பைக்கையோ சரியான இடைவெளியில் சர்வீஸ் செய்தால் மைலேஜ் உயரும்.
காரின் பூட் ஸ்பேஸில் தேவையில்லாத பழைய பைகள், கனமான டூல்ஸ் போன்ற எக்ஸ்ட்ரா சாமான்களைப் போட்டு வைக்காதீர்கள். வண்டியின் எடை கூடினால், இன்ஜின் அதிக பெட்ரோலை இழுக்கும்.
சிறிய தூரம் இருக்கும் இடங்களுக்கு வண்டியை எடுப்பதுதான் தேவையற்றது. அதற்கு பதிலாக நடந்து செல்லலாம், சைக்கிள் அல்லது ஷேர் ஆட்டோக்களைப் பயன்படுத்தலாம். இது பணத்தையும் மிச்சமாக்கும்,
குறைந்த வேகத்தில் அதிகப்படியான கியரிலோ அல்லது அதிவேகத்தில் குறைந்த கியரிலோ வண்டியை ஓட்டக் கூடாது. வேகத்திற்கு ஏற்ப கியர்களை மாற்றினால் நல்ல மைலேஜ் கிடைக்கும்.
ஒரே அலுவலகத்திற்கு 3, 4 பேர் தினமும் செல்கிறீர்கள் என்றால் கார் பூலிங் முறையை பயன்படுத்துங்கள். ஆளுக்கு ஒரு வண்டியில் செல்வதற்கு பதிலாக, ஒரே காரில் சென்றால் பெட்ரோல் செலவு குறையும்
பெட்ரோல் பங்க்குகளிலும் தரம் ஒரே மாதிரி இருப்பதில்லை. எனவே, தரமான மற்றும் நம்பிக்கையான பங்க்குகளில் மட்டுமே எரிபொருள் குளிர்ந்த சூழலில் பெட்ரோல் போடுவது நல்லது.