MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Paytm Bank: இந்த மூன்று காரணங்களால்.. பேடிஎம் வங்கியின் உரிமம் ரத்து.. ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை

Paytm Bank: இந்த மூன்று காரணங்களால்.. பேடிஎம் வங்கியின் உரிமம் ரத்து.. ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை

வாடிக்கையாளர் நலனுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி, பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியின் உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரத்து செய்துள்ளது. இந்த உத்தரவின்படி, பேடிஎம் வங்கி அனைத்து விதமான வங்கி வணிகத்தையும் உடனடியாக நிறுத்த வேண்டும். 

2 Min read
Author : vinoth kumar
Published : Apr 25 2026, 08:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Getty

நொய்டாவை தலைமையிடமாக கொண்டு பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர் ரிசர்வ் வங்கியிடம் உரிமம் பெற்று செயல்பட்டு வந்தது. இந்நிலையில் யுபிஐ மற்றும் வங்கி சேவைகள் வழங்கும் பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி (RBI) ரத்து செய்வதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Image Credit : Google

இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்: வங்கிக்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கும் எதிரான வகையில் வங்கியின் செயல்பாடுகள் மேற்கொள்ளபட்டதால் அதன் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வங்கி நிர்வாகத்தின் பொதுநலனுக்கும் அதன் வைப்பாளர்களுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதனால் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி அனைத்து வகையான வங்கி வணிகத்தையும் மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்படுகிறது.

Related Articles

Related image1
ஊட்டியை விடுங்க.. கோவையில் கட்டாயம் பார்க்க வேண்டிய குளு குளுவென இருக்கும் 10 இடங்கள்!
Related image2
பழைய பெட்ஷீட் இருக்கா.. தூக்கி போடாதீங்க.. வீட்டுக்கு புதிய லுக் கொடுக்கும் 5 சூப்பர் ஐடியா!
35
Image Credit : Paytm

அதேநேரம், வங்கியின் கடன்களை எல்லாம் திருப்பிச் செலுத்தத் தேவையான நிதி, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியிடம் இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வங்கியில் பணம் டெபாசிட் செய்த வாடிக்கையாளர்களின் நலனுக்கு எதிராக பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி செயல்பட்டதாக ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

45
Image Credit : google

1949-ஆம் ஆண்டு வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 22(4)-ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்றைய வேலை நாள் முடிவடையும்போது, இந்த உரிமம் ரத்து முழுமையாக அமலுக்கு வந்தது. இதன் காரணமாக, வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 5(b)-யின்படி 'வங்கி' தொடர்பான எந்தவொரு வணிகத்தையும், பிரிவு 6-ல் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற சேவைகளையும் இனி பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியால் செய்ய முடியாது.

55
Image Credit : ANI

மேலும் வங்கியைக் கலைப்பதற்காக உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை சமர்ப்பிக்க இருப்பதாக கூறியுள்ள ரிசர்வ் வங்கி, அப்படி வங்கியைக் கலைக்கும்போது, தனது முழு வைப்புத்தொகைப் பொறுப்பையும் திருப்பிச் செலுத்துவதற்குப் போதுமான பணப்புழக்கத்தை இந்த வங்கி கொண்டு இருப்பதாகவும் கூறியுள்ளது. முன்னதாக கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், வாடிக்கையாளர் கணக்குகளில் புதிய டெபாசிட்டுகள், வாலட் டாப்பப்கள் மற்றும் கிரெடிட் பரிவர்த்தனைகளை செய்யத் தடை விதிக்கப்பட்டது. இந்த தடைகள் வங்கியின் வளர்ச்சியை முடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்திய ரிசர்வ் வங்கி
வங்கிக் கணக்கு
வங்கி
Latest Videos
Recommended Stories
Recommended image1
Indian Railways: உலகத் தரத்திற்கு மாறும் தமிழ்நாடு ரயில் நிலையங்கள்.! மத்திய அரசு சர்ப்ரைஸ் அறிவிப்பு.! உங்க ஊரு இருக்கா?
Recommended image2
Telepathy Tech: உங்கள் எண்ணங்களைப் படித்தால் பணம்.! டெலிபதியை உருவாக்கும் AI ஸ்டார்ட்அப்
Recommended image3
UPI பரிவர்த்தனைக்கு கட்டணமா? குட் நியூஸ் சொன்ன பேமெண்ட்ஸ் கவுன்சில்! இனி கவலை இல்லை!
Related Stories
Recommended image1
ஊட்டியை விடுங்க.. கோவையில் கட்டாயம் பார்க்க வேண்டிய குளு குளுவென இருக்கும் 10 இடங்கள்!
Recommended image2
பழைய பெட்ஷீட் இருக்கா.. தூக்கி போடாதீங்க.. வீட்டுக்கு புதிய லுக் கொடுக்கும் 5 சூப்பர் ஐடியா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved