MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ரூ.15,000 வரை.. வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ் சொன்ன ஆர்பிஐ.. என்ன விஷயம்?

ரூ.15,000 வரை.. வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ் சொன்ன ஆர்பிஐ.. என்ன விஷயம்?

ரிசர்வ் வங்கியின் புதிய இ-ஆணை விதிகளால், ஆட்டோ டெபிட் முறையில் முக்கிய மாற்றங்கள் வந்துள்ளன. மேலும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 24 மணி நேரத்திற்கு முன் அறிவிப்பு அனுப்பப்படும். ரிசர்வ் வங்கியின் விதிகள் குறித்து காண்போம்.

1 Min read
Author : Raghupati R
Published : Apr 22 2026, 10:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ரிசர்வ் வங்கி அறிவிப்பு
Image Credit : Getty

ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வங்கி கணக்கில் திடீரென பணம் கழிந்தது என்ற பதட்டம் இனி குறையப் போகிறது. ரிசர்வ் வங்கியின் புதிய இ-ஆணை விதிகளை அமல்படுத்தியதால், ஆட்டோ டெபிட் முறையில் பெரிய மாற்றம் வந்துள்ளது. இஎம்ஐ, இன்சூரன்ஸ், ஓடிடி சந்தா போன்ற கட்டணங்கள் மாதந்தோறும் தானாக கழிக்கப்படும் நிலையில், இப்போது பயனாளிகளுக்கே அதிக கட்டுப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.

25
வங்கி கணக்கு
Image Credit : ChatGPT

வங்கி கணக்கு

புதிய விதிகளின்படி, எந்த தானியங்கு கட்டணமும் தொடங்குவதற்கு முன் ஒரு முறை பதிவு அவசியம். அதோடு கூடுதல் அங்கீகார முறையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், உங்கள் அனுமதி இல்லாமல் எந்த நிறுவனமும் உங்கள் கணக்கில் இருந்து பணம் கழிக்க முடியாது என்பதில் உறுதி கிடைக்கும்.

Related Articles

Related image1
RBI: வெளிநாட்டு பணம் இனி 1 மணி நேரத்தில் கிரெடிட் ஆகும்.. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு!
Related image2
கேஸ் புக்கிங் பெயரில் மோசடி.! இந்த 5 வெப்சைட் உள்ள போய்டாதீங்க.! உங்க வங்கி கணக்கு ஹேக் செய்யப்படும்.! எச்சரிக்கை.!
35
ஆட்டோ-டெபிட்
Image Credit : Getty

ஆட்டோ-டெபிட்

இந்த மாற்றங்களில் முக்கியமானது, ஒவ்வொரு ஆட்டோ-டெபிட் 24 மணி நேரத்திற்கு முன் அறிவிப்பு அனுப்பப்பட வேண்டும். அந்த எச்சரிக்கை நிறுவனம் பெயர், தொகை, தேதி போன்ற முழு விவரங்களும் இருக்கும். ஏதேனும் தவறு அல்லது சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனை இருந்தால், அதை உடனே நிறுத்தும் வாய்ப்பும் கிடைக்கும்.

45
ரூ.15,000 வரை
Image Credit : Getty

ரூ.15,000 வரை

மேலும், ரூ.15,000 வரை உள்ள ஆட்டோ பேமெண்ட்டுகளுக்கு ஓடிபி தேவையில்லை என்று ஆர்பிஐ புதிய வரம்பை நிர்ணயித்துள்ளது. அதே நேரத்தில், இன்சூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்டுகள், கிரெடிட் கார்டு பில் போன்ற முக்கிய கட்டணங்களுக்கு இந்த வரம்பு ரூ.1 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சிறிய மற்றும் பெரிய கட்டணங்கள் இரண்டும் எளிதாக நடைபெறும்.

55
ஆட்டோ டெபிட் விதிகள்
Image Credit : Asianet News

ஆட்டோ டெபிட் விதிகள்

இந்த விதிகள் மூலம், பயனாளிகள் எப்போது வேண்டுமானாலும் தங்கள் இ- மேன்டேட்டை மாற்றவோ அல்லது ரத்து செய்யவோ முடியும். கூடவே, உங்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மாற்றப்பட்டாலும் தானாக பணம் செலுத்துதல் தொடர்ந்து செயல்படும். ஓடிடி, பிற பில்கள், இஎம்ஐ போன்ற பல சேவைகள் இதில் அடங்கும். ஆனால் பாஸ்டேக் ஆட்டோ ரீசார்ஜுக்கு இந்த விதிகள் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்திய ரிசர்வ் வங்கி
வங்கி
வங்கிக் கணக்கு
இந்திய ரிசர்வ் வங்கி

Latest Videos
Recommended Stories
Recommended image1
PM Kisan: பிஎம் கிசான் 23-வது தவணை.. உங்களுக்கு ரூ.2,000 கிடைக்குமா? இந்த 3 விஷயத்தை உடனே செக் பண்ணுங்க!
Recommended image2
ரயில் பயணிகளுக்கு ஜாக்பாட்.. இனி சார்ட் போட்ட பிறகும் பெர்த் ஈஸியாக கிடைக்கும்.. எப்படி தெரியுமா?
Recommended image3
Kitchen Tips: சிலிண்டர் 2 மாசம் வரணுமா?! கேஸ் செலவை பாதியாக குறைக்கும் சூப்பர் டிப்ஸ்!
Related Stories
Recommended image1
RBI: வெளிநாட்டு பணம் இனி 1 மணி நேரத்தில் கிரெடிட் ஆகும்.. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு!
Recommended image2
கேஸ் புக்கிங் பெயரில் மோசடி.! இந்த 5 வெப்சைட் உள்ள போய்டாதீங்க.! உங்க வங்கி கணக்கு ஹேக் செய்யப்படும்.! எச்சரிக்கை.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved