MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Gold Exchange Tax : பழைய தங்க நகையை மாற்ற போறீங்களா? தெரியாம பெரிய வரி சிக்கலில் சிக்கிடாதீங்க!

Gold Exchange Tax : பழைய தங்க நகையை மாற்ற போறீங்களா? தெரியாம பெரிய வரி சிக்கலில் சிக்கிடாதீங்க!

Gold Exchange Tax : பழைய தங்க நகையை மாற்றி புதிய நகை வாங்குவது சாதாரண வர்த்தகமாக தோன்றினாலும், வருமான வரித்துறை அதை ‘சொத்து பரிமாற்றம்’ எனக் கணக்கிடலாம். சில சூழல்களில் மூலதன ஆதாய வரி கட்ட வேண்டிய நிலையும் உருவாகலாம்.

2 Min read
Author : Raghupati R
Published : May 26 2026, 07:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தங்க நகை வரி
Image Credit : Getty

தங்க நகை வரி

இந்திய குடும்பங்களில் தங்கம் என்பது வெறும் முதலீடு அல்ல. அந்த உணர்வு, பாரம்பரியம் மற்றும் குடும்ப மரபின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. காலம் மாறுவதோடு நகை வடிவங்களும் மாறி வருவதால், பலர் பழைய நகைகளை கொடுத்து புதிய வடிவங்களில் மாற்றிக் கொள்கிறார்கள். நகைக்கடைகளும் இதற்காக கவர்ச்சியான மாற்றுச் சலுகைகளை வழங்குகின்றன. ஆனால், இந்த எளிய பரிமாற்றத்தின் பின்னால் பலருக்கும் தெரியாத வருமான வரி விதிகள் மறைந்துள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
நகை எக்ஸ்சேஞ்ச்
Image Credit : Getty

நகை எக்ஸ்சேஞ்ச்

பழைய நகையை மாற்றும்போது கைக்கு நேரடியாக பணம் கிடைப்பதில்லை, அதில் வரி சிக்கல் இருக்காது என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் வருமான வரிச் சட்டத்தின் பார்வை வேறுபட்டது. ஒரு சொத்தை விற்பது மட்டுமல்ல, அதை வேறு சொத்துடன் மாற்றிக் கொள்வதும் ‘பரிமாற்றம்’ என்றே கருதப்படுகிறது. இதனால், குறைந்த விலையில் வாங்கப்பட்ட தங்கத்தின் மதிப்பு காலப்போக்கில் உயர்ந்திருந்தால், அந்த உயர்வுக்கான மூலதன ஆதார வரி பொருந்தக்கூடிய வாய்ப்பு உள்ளது.

Related Articles

Related image1
ஐடிஆர் தாக்கல்: வரி நோட்டீஸ் தவிர்க்க இந்த ஆவணங்கள் தயாரா இருக்கா? முழு லிஸ்ட் இதோ
Related image2
SBI Alert: எஸ்பிஐ வெளியிட்ட அவசர அறிவிப்பு.! வாடிக்கையாளர்களுக்கு வங்கியின் முக்கிய வேண்டுகோள்.!
35
மூலதன ஆதாய வரி
Image Credit : Getty

மூலதன ஆதாய வரி

இந்த சிக்கல் குறிப்பாக பரம்பரை அல்லது தலைமுறையாக வந்த நகைகளில் அதிகமாக காணப்படுகிறது. பல குடும்பங்களில் பழைய நகைகளுக்கான அசல் பில் அல்லது வாங்கிய கால விவரங்கள் இருக்காது. இதுவே வரி கணக்கில் குழப்பத்தை உருவாக்கும். பரிசாகவோ, உயில் மூலமாகவோ அல்லது குடும்ப மரபாகவோ கிடைத்த நகைகளுக்கும் வரி விதிகள் பொருந்தும் என்பதால், அதன் ஆரம்ப மதிப்பை நிரூபிக்கும் ஆதாரங்கள் முக்கியமாகின்றன.

45
வருமான வரி விதிகள்
Image Credit : AI Generated photo

வருமான வரி விதிகள்

இங்கே ஏப்ரல் 1, 2001 தேதி முக்கிய இடம் பெறுகிறது. அந்த தேதியில் இருந்த சந்தை மதிப்பு, சில பழைய தங்க நகைகளுக்கான வரி கணக்கீட்டில் அடிப்படையாக பயன்படுத்தப்படுகிறது. இதனால், சாதாரண நகை மாற்றம் போல தோன்றும் விஷயம் கூட, வரி கணக்கில் முக்கிய இடம் பெறக்கூடும்.

55
தங்க வரி விதி
Image Credit : ChatGPT

தங்க வரி விதி

அதனால், நகையை மாற்றுவதற்கு முன் வாங்கிய தேதி, பழைய பில், மதிப்பிடப்பட்ட விலை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீட்டு அறிக்கை போன்ற ஆவணங்களை சரிபார்ப்பது அவசியம். சிறிய கவனக்குறைவு எதிர்காலத்தில் வரி நோட்டீஸ் அல்லது தேவையற்ற பணச் சுமையாக மாறக்கூடும் என்பதே நிபுணர்களின் எச்சரிக்கையாக உள்ளது. எனவே மக்கள் நகையை மாற்றும்போது விழிப்புணர்வுடன் இருத்தல் அவசியம் ஆகும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தங்கம்
வரி
வருமான வரி
தங்க நகை
வருமான வரி விதிகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
பிஎஃப் பணம் எடுக்க இனி இவ்ளோ சுலபமா? EPFO வெளியிட்ட சூப்பர் அப்டேட்! முழு விவரம்!
Recommended image2
8th Pay Commission: குறைந்தபட்ச சம்பளம் ரூ.68,000.! சென்னையில் நடந்த கூட்டத்தில் கிடைத்த சிக்னல் என்ன?
Recommended image3
Vegetable Price: அப்பாடா... குறைந்தது காய்கறிகள் விலை.! கூடை கூடையாய் விற்பனை.! பை பையாய் அள்ளிச்சென்ற இல்லத்தரசிகள்.!
Related Stories
Recommended image1
ஐடிஆர் தாக்கல்: வரி நோட்டீஸ் தவிர்க்க இந்த ஆவணங்கள் தயாரா இருக்கா? முழு லிஸ்ட் இதோ
Recommended image2
SBI Alert: எஸ்பிஐ வெளியிட்ட அவசர அறிவிப்பு.! வாடிக்கையாளர்களுக்கு வங்கியின் முக்கிய வேண்டுகோள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved