MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ஐடிஆர் தாக்கல்: வரி நோட்டீஸ் தவிர்க்க இந்த ஆவணங்கள் தயாரா இருக்கா? முழு லிஸ்ட் இதோ

ஐடிஆர் தாக்கல்: வரி நோட்டீஸ் தவிர்க்க இந்த ஆவணங்கள் தயாரா இருக்கா? முழு லிஸ்ட் இதோ

வருமான வரி தாக்கல் (ITR Filing 2026) சீசன் தொடங்கிய நிலையில், பலர் ஆவணங்களை முழுமையாக சரிபார்க்காமல் தாக்கல் செய்து பின்னர் நோட்டீஸ், ரிபண்ட் தாமதம் போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

2 Min read
Author : Raghupati R
Published : May 26 2026, 02:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தவறவிடக்கூடாத ஆவணங்கள்
Image Credit : Google

தவறவிடக்கூடாத ஆவணங்கள்

வருமான வரி தாக்கல் சீசன் மீண்டும் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் கோடிக்கணக்கான வரி செலுத்துவோர் ஆவணங்களைத் தேடி அலையும் நேரம் இது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் ஒரே மாதிரியான தவறு மீண்டும் நடக்கிறது. அவசரத்தில் அல்லது முழுமையற்ற தகவல்களுடன் ஐடிஆர் தாக்கல் செய்யப்படுவதால், பலருக்கு ரிபண்ட் தாமதம், வருமான வரித்துறை நோட்டீஸ், மேலும் தேவையற்ற விளக்கங்கள் அளிக்க வேண்டிய சூழல் உருவாகிறது. மதிப்பீட்டு ஆண்டு 2026-27க்கு ஐடிஆர் தாக்கல் செய்ய தயாராக இருப்பவர்கள் முதலில் ஆவணங்களை சரியாக ஒழுங்குபடுத்துவது மிகவும் முக்கியம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
பான் மற்றும் ஆதார்
Image Credit : social media

பான் மற்றும் ஆதார்

இதில் முதன்மையானது பான் மற்றும் ஆதார். வருமான வரித்துறையின் விதிகளின்படி பான் கார்டு இல்லாமல் ஐடிஆர் தாக்கல் சாத்தியமில்லை. அதோடு ஆதார்-பான் இணைப்பு செய்யப்பட வேண்டும். பெயர், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் ஆகிய இரண்டு பதிவுகளிலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். இதில் சிறிய முரண்பாடு கூட தொழில்நுட்ப சிக்கல்களை உருவாக்கலாம்.

Related Articles

Related image1
CNG Price Hike: மீண்டும் எகிறிய CNG விலை! 2 வாரத்தில் 4-வது அடி... மக்கள் தலையில் அடுத்த சுமை!
Related image2
Petrol Diesel GST: பெட்ரோல், டீசல் GST-க்குள் வந்தால் என்ன நடக்கும்? விலை குறையுமா?
35
சம்பளதாரர்கள் கவனத்திற்கு
Image Credit : Pixabay

சம்பளதாரர்கள் கவனத்திற்கு

சம்பளத்தாருக்கு படிவம் 16 மிக முக்கியமானது. நிறுவனத்திலிருந்து பெறப்படும் இந்த ஆவணத்தில் சம்பளம், TDS மற்றும் கழிவுகள் பற்றிய முழு விவரமும் இருக்கும். நடுவில் வேலை மாறியிருந்தால் அனைத்து ஆண்டு நிறுவனங்களிலிருந்தும் படிவம் 16 பெற வேண்டும். அதோடு மாதாந்திர சம்பள சீட்டுகளும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். PF, போனஸ், கொடுப்பனவு மற்றும் திருப்பிச் செலுத்தும் விவரங்கள் குறுக்கு சரிபார்ப்பு செய்ய இது உதவும்.

45
ஐடிஆர் தாக்கல் படிவங்கள்
Image Credit : Pixabay

ஐடிஆர் தாக்கல் படிவங்கள்

ஐடிஆர் தாக்கல் செய்யும் முன் அதிகம் கவனிக்க வேண்டிய பகுதி படிவம் 26AS மற்றும் AIS. வங்கி வட்டி, ஈவுத்தொகை, பரஸ்பர நிதி மற்றும் பங்கு பரிவர்த்தனைகள் உள்ளிட்ட பல தகவல்கள் இதில் பதிவாகும். நீங்கள் அறிவித்த வருமானம் மற்றும் AIS விவரங்கள் பொருந்தவில்லை என்றால் ஆய்வு வாய்ப்பு அதிகரிக்கலாம். அதனால் வங்கி அறிக்கை, FD வட்டி சான்றிதழ், வாடகை வருமான பதிவுகள் போன்ற ஆவணங்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.

55
ஹோம் லோன் வைத்திருப்பவர்கள்
Image Credit : freepik

ஹோம் லோன் வைத்திருப்பவர்கள்

முதலீட்டாளர்கள், ஹோம் லோன் வைத்திருப்பவர்கள் மற்றும் ஃப்ரீலான்சர்களுக்கும் தனிப்பட்ட சரிபார்ப்புப் பட்டியல் உள்ளது. பங்குச்சந்தை மற்றும் பரஸ்பர நிதி முதலீட்டாளர்கள் மூலதன ஆதாய அறிக்கை வைத்திருக்க வேண்டும். ஹோம் லோன் வைத்திருப்பவர்கள் வட்டி சான்றிதழ் மூலம் பிரிவு 24(b) மற்றும் 80C கீழ் சலுகை பெறலாம். மேலும் PPF, ELSS, NPS, இன்சூரன்ஸ், HRA, ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் மற்றும் கடந்த ஆண்டின் ஐடிஆர் நகல் ஆகியவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஃப்ரீலான்சர்கள் மற்றும் தொழில்முனைவோர் ஜிஎஸ்டி வருமானம், விலைப்பட்டியல், செலவுப் பதிவுகள் மற்றும் லாப-நஷ்ட அறிக்கை ஆகியவற்றை முன்கூட்டியே தயார் செய்தால் ஐடிஆர் தாக்கல் சுலபமாகவும், தவறுகள் இல்லாமலும் இருக்கும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வருமான வரி
வருமான வரி விதிகள்
வரி
வணிகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
CNG Price Hike: மீண்டும் எகிறிய CNG விலை! 2 வாரத்தில் 4-வது அடி... மக்கள் தலையில் அடுத்த சுமை!
Recommended image2
Petrol Diesel GST: பெட்ரோல், டீசல் GST-க்குள் வந்தால் என்ன நடக்கும்? விலை குறையுமா?
Recommended image3
LPG Rule Change: இனி ஒரே வீட்டில் 2 கேஸ் கனெக்ஷன் இருக்கக் கூடாது! எல்பிஜி பயனாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு!
Related Stories
Recommended image1
CNG Price Hike: மீண்டும் எகிறிய CNG விலை! 2 வாரத்தில் 4-வது அடி... மக்கள் தலையில் அடுத்த சுமை!
Recommended image2
Petrol Diesel GST: பெட்ரோல், டீசல் GST-க்குள் வந்தால் என்ன நடக்கும்? விலை குறையுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved