MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Multibagger Stock : 352% லாபம்.. பங்குச்சந்தையில் செம சர்ப்ரைஸ் கொடுத்த மல்டிபேக்கர் பங்கு.. எது தெரியுமா?

Multibagger Stock : 352% லாபம்.. பங்குச்சந்தையில் செம சர்ப்ரைஸ் கொடுத்த மல்டிபேக்கர் பங்கு.. எது தெரியுமா?

Multibagger Stock : ரூ.10,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள ஒப்பந்தம் கிடைத்த செய்தி, நிறுவன பங்கில் பெரிய ஏற்றத்தை உருவாக்கியுள்ளது. இதனால் மல்டிபேக்கர் பங்குகள் மீண்டும் முதலீட்டாளர்களின் கவனத்தில் வந்துள்ளன.

1 Min read
Author : Raghupati R
Published : May 26 2026, 10:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
352% லாபம் கொடுத்த மல்டிபேக்கர் பங்கு
Image Credit : Gemini

352% லாபம் கொடுத்த மல்டிபேக்கர் பங்கு

பங்குச்சந்தையில் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு முதலீட்டாளரின் கனவும் தான். ஆனால் குறுகிய கால ஏற்ற இறக்கங்களைத் தாண்டி நீண்டகால பார்வையுடன் முதலீடு செய்யும் போது சில பங்குகள் எதிர்பாராத வருமானத்தை வழங்கும். அப்படிப்பட்ட பங்குகளே ‘மல்டிபேக்கர்’ என அழைக்கப்படுகின்றன. தற்போது அந்த பட்டியலில் கவனம் ஈர்த்துள்ள பெயராக ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் உருவெடுத்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
பங்குச்சந்தையில் அதிரடி உயர்வு
Image Credit : X

பங்குச்சந்தையில் அதிரடி உயர்வு

2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெறும் ரூ.102.45 அளவில் இருந்த இந்த பங்கு நிறுவனம், சில மாதங்களிலேயே ரூ.463.45 வரை உயர்ந்து 352%க்கும் அதிகமான வருமானத்தைப் பதிவு செய்துள்ளது. கடந்த வர்த்தக அமர்வில் மட்டும் சுமார் 5% உயர்வு இந்த பங்கு, சந்தை வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Related Articles

Related image1
ஐடிஆர் தாக்கல்: வரி நோட்டீஸ் தவிர்க்க இந்த ஆவணங்கள் தயாரா இருக்கா? முழு லிஸ்ட் இதோ
Related image2
மொத்தமாக மாறும் விதிமுறை..? நோட்டமிடும் Income Tax.. ஒருவர் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் தெரியுமா?
35
ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் பங்கு
Image Credit : X

ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் பங்கு

இந்த அதிரடி உயர்வுக்கு பின்னால் நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பே காரணமாக பார்க்கவும். பல ஆண்டுகள் நீடிக்கும் வகையில், சர்வதேச அளவிலான பெரிய தகவல் தொடர்பு நிறுவனத்திடமிருந்து ஆப்டிகல் இணைப்பு சாதனங்களை வழங்கும் ஒப்பந்தத்தை ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.10,000 கோடிக்கும் அதிகம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

45
நீண்டகால முதலீட்டாளர்களுக்கு செம வருமானம்
Image Credit : Getty

நீண்டகால முதலீட்டாளர்களுக்கு செம வருமானம்

இந்த செய்தி வெளியானதும் முதலீட்டாளர்களின் கவனம் உடனடியாக இந்த பங்கின் மீது திரும்பியது. நீண்டகால வருவாய்க்கான வாய்ப்பை இந்த ஒப்பந்தம் உருவாக்கக்கூடும் என்ற மதிப்பீடுகளும் சந்தையில் வெளியாகின. அதனால் பங்கின் விலை வேகமாக முன்னேறியது. பெரிய ஒப்பந்தங்கள் ஒரு நிறுவனத்தின் எதிர்கால வருமான பாதையை மாற்றக்கூடும் என்பதற்கான உதாரணமாக இதை சில சந்தை ஆய்வாளர்கள் பார்க்கின்றனர்.

55
ராக்கெட் வேகத்தில் உயர்ந்த பங்கு
Image Credit : Asianet News

ராக்கெட் வேகத்தில் உயர்ந்த பங்கு

இருப்பினும், பங்குச்சந்தை முதலீடுகள் எப்போதும் சந்தை அபாயங்களுடன் இணைந்தவை என்பதையும் மறக்க முடியாது. கடந்த செயல்திறன் எதிர்கால லாபத்திற்கான உறுதி அல்ல. எனவே, எந்த பங்கிலும் முதலீடு செய்வதற்கு முன் தனிப்பட்ட நிதி நிலை மற்றும் நிபுணர் ஆலோசனையை கருத்தில் கொள்ள வேண்டும் என்பதே முக்கிய நினைவூட்டல்.

பொறுப்புத் துறப்பு: இது முதலீட்டு ஆலோசனை அல்ல. சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது முதலீடு. முதலீடு செய்வதற்கு முன் நிதி ஆலோசகரை அணுகவும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பன்மடங்கு இலாபம் தரும் பங்குகள்
பங்குச்சந்தை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Crop Loan Waiver 2026 : பயிர்க்கடன் முழுசா தள்ளுபடி! யார் யாருக்கு கிடைக்கும்? முழு விவரம் இதோ!
Recommended image2
Gold Auction Prevention: நகை ஏலத்துக்கு போகுதா? இந்த 5 வழிகளை தெரிஞ்சா காப்பாத்தலாம்!
Recommended image3
Crop Loan Waiver 2026: பயிர்க்கடன் முழுசா தள்ளுபடி! யார் யாருக்கு கிடைக்கும்? முழு விவரம் இதோ!
Related Stories
Recommended image1
ஐடிஆர் தாக்கல்: வரி நோட்டீஸ் தவிர்க்க இந்த ஆவணங்கள் தயாரா இருக்கா? முழு லிஸ்ட் இதோ
Recommended image2
மொத்தமாக மாறும் விதிமுறை..? நோட்டமிடும் Income Tax.. ஒருவர் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved