இந்த வங்கியில் யாரும் பணம் எடுக்கவோ.. டெபாசிட் செய்யவோ முடியாது.. ரிசர்வ் வங்கி உத்தரவு
கோடிக் கணக்கில் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி வங்கிக்கு தடை விதித்துள்ளது. இது வங்கி வாடிக்கையாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வங்கியில் யாரும் பணம் எடுக்கவோ.. டெபாசிட் செய்யவோ முடியாது.. ரிசர்வ் வங்கி உத்தரவு
இந்தச் சம்பவத்தால் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பீதி பரவியது. பின்னர் சனிக்கிழமை, இந்த வங்கியில் நடந்த பெரிய அளவிலான மோசடி குற்றச்சாட்டு வெளிச்சத்திற்கு வந்தது. கோரேகான் மற்றும் தாதர் கிளைகளின் பொறுப்பில் இருந்தபோது, அங்கிருந்து இந்த பெரிய தொகையை மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட மேலாளர் ஹிதேஷ் பிரவீன் மேத்தா மீது பல பிரிவுகளின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி
கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி, ரிசர்வ் வங்கி மும்பையின் நியூ இந்தியா கூட்டுறவு வங்கிக்கு தடை விதித்தது. அதன்பிறகு, இந்த வங்கியில் யாரும் எந்த பரிவர்த்தனையும் செய்ய முடியாது என்று அறிவிக்கப்பட்டது. ஹிதேஷ் பிரவீன் மேத்தா என்ற பொது மேலாளரே இந்த பெரிய தொகையை மோசடி செய்ததாகத் தெரிகிறது. ஹிதேஷுடன் சேர்ந்து இந்தச் சம்பவத்தில் இன்னொருவர் தொடர்புடையதாக விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
வங்கியில் மிகப்பெரிய ஊழல்
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 316 (5) மற்றும் 61 (2) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வங்கியில் இந்த மிகப்பெரிய ஊழல் 2020 முதல் 2025 வரை நடந்ததாகக் கருதப்படுவதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த மிகப்பெரிய ஊழல் எப்படி நடந்தது? இந்தச் சம்பவத்தில் யார் யார் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதை விசாரிக்க ‘பொருளாதாரக் குற்றப்பிரிவு’க்கு விசாரணைப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆர்பிஐ விசாரணை
வங்கியின் பாதுகாப்புக் கொள்கைகள் மீறப்பட்டதா என்பதையும் விசாரணை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். இந்த வங்கியின் கடந்த இரண்டு ஆண்டுகளின் நிதி அறிக்கையும் வெளியாகியுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டில் 31 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக அதில் தெரிகிறது. மேலும், கடந்த 2024 மார்ச் மாதம் வரை 23 கோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு தடை
இந்த மிகப்பெரிய மோசடியை அறிந்த ரிசர்வ் வங்கி, கடந்த வியாழக்கிழமை தடை விதித்தது. இந்த வங்கியில் யாரும் பணம் எடுக்கவோ அல்லது டெபாசிட் செய்யவோ முடியாது என்று அதில் கூறப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு புதிய கடன்கள் எதுவும் வழங்கப்படாது. மேலும், ஆர்பிஐ வங்கி இந்தத் தடையை விதித்த பிறகு, வாடிக்கையாளர்கள் மத்தியில் பீதி பரவியது. இப்போது இந்தச் சம்பவத்தில் வங்கியின் முன்னாள் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரூ.200 நோட்டுகள் உங்களிடம் இருக்கா? ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு