விவசாயிகளுக்கு புத்தாண்டு பரிசு ரெடி.? வங்கி கணக்கில் காசு வருமா? மெகா சர்ப்ரைஸ்!
பிஎம் கிசான் திட்டத்தின் அடுத்த தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கும் நிலையில், 2026 மத்திய பட்ஜெட்டில் ஆண்டு உதவித்தொகை உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா
புத்தாண்டை முன்னிட்டு விவசாயிகளுக்கு மத்திய அரசு ஒரு நல்ல செய்தியை வழங்கத் தயாராகி வருவதாக எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சிறு மற்றும் குறு விவசாயிகளுக்காக செயல்படுத்தப்பட்டுள்ள பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் 22-வது தவணையை விவசாயிகள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இதற்கிடையில், 2026 பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டும் விவசாயிகளின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. உயர்ந்து வரும் பணவீக்கம் மற்றும் விவசாய செலவுகளை கருத்தில் கொண்டு, ஆண்டு உதவித் தொகையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
மத்திய பட்ஜெட் 2026
தற்போதைய 2024–25 நிதியாண்டு கணக்குகளை பார்த்தால், இந்த திட்டத்திற்கு அரசு முதலில் ரூ.60,000 கோடி ஒதுக்கியது. ஆனால் விவசாயிகளின் தேவையை உணர்ந்து, அந்த தொகைக்கு பிறகு ரூ.63,500 கோடியாக உயர்த்தப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ரூ.2,000 கோடிக்கு மேல் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருப்பது, விவசாயம் மத்திய அரசின் முன்னுரிமைப் பட்டியலில் இருப்பதை வெளிப்படுத்துகிறது. இதனால், வரவிருக்கும் பட்ஜெட்டில் இந்தத் திட்டத்திற்கு மேலும் பெரிய அறிவிப்பு இருக்கலாம் என்ற நம்பிக்கை உள்ளது.
விவசாய நலத் திட்டம்
தற்போது, இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 மூன்று தவணைகளாக நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. விதை, உரம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு இந்த உதவி உடனடி நிவாரணமாக அமைந்துள்ளது. இடைத்தரகர்கள் இன்று நேரடி பணப்பரிமாற்றம் (DBT) செய்யப்படுவது இந்தத் திட்டம் மிகப் பெரிய பலமாகக் கருதப்படுகிறது. ஆனால், பணவீக்கம் காரணமாக இந்த தொகையை மேலும் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வருகிறது.
விவசாய உதவி உயர்வு
2026 பிப்ரவரி 1-ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது, விவசாய அமைச்சகத்தின் அறிவிப்புகள் மீது நாடு முழுவதும் கவனம் செலுத்தப்படும். 2019-ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், 2023–24 நிதியாண்டில் மட்டும் ரூ.61,000 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது. வரவிருக்கும் தேர்தல்கள் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், இந்த பட்ஜெட் விவசாயிகளுக்கு ஒரு “புத்தாண்டு பரிசாக” அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

