MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • August 1 Rules: தட்கல் டிக்கெட் புக் செய்ய போறீங்களா? ஆகஸ்ட் 1 முதல் இந்த புதிய நடைமுறை அமல்!

August 1 Rules: தட்கல் டிக்கெட் புக் செய்ய போறீங்களா? ஆகஸ்ட் 1 முதல் இந்த புதிய நடைமுறை அமல்!

August 1 Rules: தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவில் பயணிகள் சந்திக்கும் நீண்ட காத்திருப்பு மற்றும் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் முக்கிய மாற்றத்தை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது.

2 Min read
Author : Raghupati R
Published : Jul 28 2026, 07:25 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தட்கல் டிக்கெட்டில் புதிய மாற்றங்கள்
Image Credit : our own

தட்கல் டிக்கெட்டில் புதிய மாற்றங்கள்

தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ரயில்வே முன்பதிவு கவுண்டர்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை பலருக்கும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த சிக்கலைக் குறைத்து, பயணிகளுக்கு வேகமான சேவையை வழங்கும் நோக்கில் மேற்கு மத்திய இரயில்வே (WCR) புதிய டோக்கன் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய நடைமுறை 2026 ஆகஸ்ட் 1 முதல் அந்த மண்டலத்திற்கு உட்பட்ட ரயில்வே முன்பதிவு கவுண்டர்களில் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவது, டிக்கெட் பெறும் நடைமுறையையும் மேலும் ஒழுங்குபடுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ரயில் டிக்கெட்
Image Credit : Getty

ரயில் டிக்கெட்

புதிய விதிமுறையின்படி, ஏசி வகுப்புக்கான தட்கல் டிக்கெட் முன்பதிவை விரும்பும் பயணிகளுக்கு காலை 8.30 மணி முதல் 9.00 மணி வரை டோக்கன்கள் வழங்கப்படும். மேலும், ஸ்லீப்பர்/நான்-ஏசி வகுப்புக்கான பயணிகளுக்கு காலை 9.00 மணி முதல் 9.30 மணி வரை டோக்கன் வழங்கப்படும். இதற்கு முன்பு இருந்த நேரத்தை விட டோக்கன் வழங்கும் நேரம் முன்கூட்டியே மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும், தட்கல் முன்பதிவு தொடங்கும் அதிகாரப்பூர்வ நேரங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வழக்கம்போல் ஈசி வகுப்புக்கான முன்பதிவு காலை 10 மணிக்கு, ஏசி அல்லாத வகுப்புக்கான முன்பதிவு காலை 11 மணிக்கு தொடங்கும்.

ஹீரோ பைக் விலை திடீர் குறைப்பு.. ரூ.59,999-க்கு வாங்கலாம்; ஆனால் இந்த 4 மாநிலங்களுக்கு மட்டும்

Related Articles

Related image1
Vande Bharat: ஒரு வந்தே பாரத் ரயில் செய்ய எத்தனை கோடி செலவாகும் தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.!
Related image2
Train: ரயில் ‘சந்திப்பு’ vs ‘முனையம்’.! ரெண்டும் ஒன்னு கிடையாதா? இவ்வளவு வித்தியாசம் இருக்கா? 90% பேருக்கு தெரியாது.!
35
ஆகஸ்ட் 1 மாற்றம்
Image Credit : Google

ஆகஸ்ட் 1 மாற்றம்

இந்த புதிய டோக்கன் முறையின் முக்கிய பலன் என்னவென்றால், டோக்கன் பெற்ற பிறகு பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் குறையும். ஒவ்வொரு முன்பதிவு கவுண்டரிலும் ஏசி வகுப்புக்கு அதிகபட்சமாக 10 டோக்கன்களும், ஏசி அல்லாத வகுப்புக்கு 15 டோக்கன்களும் வழங்கப்பட உள்ளன. இருப்பினும், பயணிகளின் தேவையைப் பொறுத்து இந்த எண்ணிக்கையை அந்தந்த உள்ளூர் ரயில்வே நிர்வாகம் மாற்றிக்கொள்ளும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், டோக்கன் வைத்திருப்பவர்களின் முன்பதிவு முழுமையாக முடிந்த பிறகே முன்னுரிமை டிக்கெட்டுகள் 'முதலில் வருபவருக்கு' என்ற அடிப்படையில் வழங்கப்படும்.

45
தட்கல் முன்பதிவு
Image Credit : our own

தட்கல் முன்பதிவு

பயணிகள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களில் ஒன்று, இந்த டோக்கன்களை வேறு யாருக்கும் மாற்றிக்கொடுக்க முடியாது என்பதாகும். டோக்கன் பெற்ற நபரே நேரில் வந்து டிக்கெட்டை பெற வேண்டும். அதே நேரத்தில், செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டையை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் முறைகேடுகளைத் தடுக்கவும், உண்மையான பயணிகளுக்கே டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

55
புதிய டோக்கன் முறை
Image Credit : our own

புதிய டோக்கன் முறை

தற்போதைக்கு இந்த புதிய டோக்கன் விநியோக முறை மேற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் உள்ள கவுண்டர் தட்கல் முன்பதிவுக்கு மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. இந்திய ரயில்வேயின் அனைத்து மண்டலங்களிலும் இதே நடைமுறை அமல்படுத்தப்பட்டதாக இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. எனினும், இந்த முயற்சி பயணிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்றால், எதிர்காலத்தில் மற்ற ரயில்வே மண்டலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தொடர்வண்டி பயணச்சீட்டு
தட்கல் டிக்கெட்
ரயில் டிக்கெட் முன்பதிவு
இந்திய இரயில்வே
ரயில்வே விதிகள்
Latest Videos
Recommended Stories
Recommended image1
EPF பணத்தை எடுக்க போறீங்களா? அவசரப்படாதீங்க.. இ.பி.எஃப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Recommended image2
Salary Hike: சம்பளம் ஏறியும் மாசக் கடைசில பண கஷ்டமா? பணத்தை கையில் தங்க வைக்க இந்த 5 தப்ப பண்ணாதீங்க
Recommended image3
Pearls: நம்ம நாட்டுல இங்கதான் முத்துக்கள் ரொம்ப சீப்! எல்லாரும் இங்கதான் வந்து வாங்குறாங்க!
Related Stories
Recommended image1
Vande Bharat: ஒரு வந்தே பாரத் ரயில் செய்ய எத்தனை கோடி செலவாகும் தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.!
Recommended image2
Train: ரயில் ‘சந்திப்பு’ vs ‘முனையம்’.! ரெண்டும் ஒன்னு கிடையாதா? இவ்வளவு வித்தியாசம் இருக்கா? 90% பேருக்கு தெரியாது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved