- Home
- Business
- FASTag: ஃபாஸ்ட் டேக் புது ரூல்ஸ்! வாகன ஓட்டிகளே உஷார்! தப்பித்தவறி கூட இதை செஞ்சிடாதீங்க!
FASTag: ஃபாஸ்ட் டேக் புது ரூல்ஸ்! வாகன ஓட்டிகளே உஷார்! தப்பித்தவறி கூட இதை செஞ்சிடாதீங்க!
இந்தியாவில் ஃபாஸ்ட் டேக் புதிய விதிகள் பிப்ரவரி 17 முதல் அமலுக்கு வர உள்ளன. புதிய விதிகள் சொல்வது என்ன? வாகன ஓட்டிகள் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

FASTag: ஃபாஸ்ட் டேக் புது ரூல்ஸ்! வாகன ஓட்டிகளே உஷார்! தப்பித்தவறி கூட இதை செஞ்சிடாதீங்க!
இந்தியா முழுவதும் தேசிய நெஞ்சாலைகளில் டோல் கேட் அமைக்கப்பட்டுள்ளன. டோல் கேட்டில் வாகனங்கள் நீண்ட நேரம் அணிகுவத்து நிற்பதை தவிர்க்க ஆன்லைன் வாயிலாக சுங்ககட்டணம் கட்டும் ஃபாஸ்ட் டேக் (FASTag) சேவையை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்நிலையில், புதிய பாஸ்ட் டேக் FASTag விதிமுறைகள் பிப்ரவரி 17ம் தேதி (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா கொண்டு வந்துள்ள புதிய ஃபாஸ்ட் டேக் விதிகளின்படி ஃபாஸ்டேக் பரிவர்த்தனைகள் இனி சுங்கச்சாவடியில் டேக் ஸ்கேன் செய்யப்படும் நேரத்தைப் பொறுத்து சரிபார்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடியை அடைவதற்கு 60 நிமிடங்களுக்கு முன்பு ஒரு ஃபாஸ்ட் டேக் பிளாக் லிஸ்டிலோ அல்லது ஹாட்லிஸ்டிலோ அல்லது குறைந்த பேலன்ஸ் தொகையை கொண்டிருந்தால் அந்த பரிவர்த்தனை நிராகரிக்கப்படும்.
பாஸ்ட் டேக் புது ரூல்ஸ்
புதிய விதிகளின்படி, உங்கள் ஃபாஸ்ட் டேக்கில் லோ பேலன்ஸ் இருந்தால், இனி எல்லா டோல் கேட்டிலும் இனி ரீசார்ஜ் செய்ய முடியாது. இதேபோல் டோல் கேட்டில் ஸ்கேன் செய்த 10 நிமிடங்களுக்குப் பிறகு ஃபாஸ்ட் டேக் செயலற்றது ஆக்கப்பட்டால் அல்லது பிளாக் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டால் அந்த பரிவர்த்தனையும் செல்லாது. ஃபாஸ்ட் டேக் இந்த இரண்டு நிபந்தனைகளையுமே பூர்த்தி செய்திருந்தால் "எர்ரர் கோட் 176" உடன் பரிவர்த்தனை நிராகரிக்கப்படும். அதோடு வாகனத்திற்கு 2 மடங்கு கட்டணம் அபராதமாக வசூலிக்கப்படும்.
விமான டிக்கெட் முதல் உணவு வரை..! சலுகைகளை வாரி வழங்கும் 5 கிரெடிட் கார்டுகள்!
பாஸ்ட் டேக்-டோல் கேட்
கே ஒய் சி பிரச்சனை காரணமாகவும், வாகனங்கள் மீது சட்டரீதியான வழக்கு இருந்தாலும் சில பாஸ்ட் டேக்குகள் பிளாக் லிஸ்ட்டில் சேர்க்கபப்ட்டு இருக்கலாம். இனிமேல் பிளாக் லிஸ்ட் ஆகி இருக்கும் ஃபாஸ்ட் டேக்கை டோல் கேட்களில் பயன்படுத்த முடியாது. இப்போது பாஸ் டேக்கில் பேலன்ஸ் தொகை இல்லை என்றாலும் டோல் கேட்டில் வைத்து ரீசார்ஜ் செய்ய முடிகிறது. ஆனால் பிப்ரவரி 17ம் தேதி டோல் கேட்டில் வைத்து ஃபாஸ்ட் டேக்கை ரீசார்ஜ் செய்ய முடியாது.
பாஸ்ட் டேக்கின் புதிய விதிகள் டோல் கேட்டில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு முடிவுகட்டும் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். "புதிய ஃபாஸ்ட் டேக் விதிகள் பரிவர்த்தனை தோல்விகளைக் குறைக்கும், மென்மையான சுங்கக் கட்டண அனுபவத்தை உருவாக்கும்'' என்று கூறியுள்ளனர்.
வாகன ஓட்டிகள்
இனிமேல் வாகன ஓட்டிகள் என்ன செய்ய வேண்டும்?
* நீண்ட பயணங்களைத் தொடங்குவதற்கு முன் தங்கள் ஃபாஸ்ட் டேக்கணக்குகளில் போதுமான இருப்பைப் பராமரிக்கவும்.
* ஃபாஸ்ட் டேக் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவதைத் தடுக்க KYC விவரங்களைத் தொடர்ந்து புதுப்பிக்கவும்.
* டோல் பிளாசாக்களை அடைவதற்கு முன் ஃபாஸ்ட் டேக் நிலையைச் சரிபார்க்கவும்.
* ஃபாஸ்ட் டேக்கை முன்கூட்டியே நிர்வகிப்பதன் மூலம் புதிய விதிகளை எளிதாக கடைபிடிக்கலாம். தாமதங்கள் மற்றும் தேவையற்ற அபராதங்களைத் தவிர்க்கலாம்.
ஏடிஎம்மில் பணம் வராமல், அக்கவுண்டில் டெபிட் ஆகிவிட்டதா? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!