விமான டிக்கெட் முதல் உணவு வரை..! சலுகைகளை வாரி வழங்கும் 5 கிரெடிட் கார்டுகள்!
அத்தியாவசிய தேவைகளுக்கு கிரெடிட் கார்டுகள் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் நிலையில், விமான டிக்கெட்டுகள் முதல் உணவு வரை சலுகைகளை அதிகமாக வழங்கும் 5 கிரெடிட் கார்டுகள் குறித்து பார்க்கலாம்.

விமான டிக்கெட்டுகள் முதல் உணவு வரை..! சலுகைகளை வாரி வழங்கும் 5 கிரெடிட் கார்டுகள்!
இன்று பெரும்பாலானவர்கள் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்கு கிரெடிட் கார்டுகள் பெரிதும் கைகொடுத்து வருகின்றன. குறிப்பாக அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு பயண கிரெடிட் கார்டுகள் மிகவும் நல்லதாகக் கருதப்படுகின்றன. அவை ஹோட்டல் கட்டணத்தில் தள்ளுபடிகள், சிறப்பு நிகழ்வுகளுக்கான விமான டிக்கெட் அணுகல் மற்றும் உணவருந்தலில் தள்ளுபடிகள் ஆகியவற்றை வழங்குகின்றன.
நீங்கள் ஒரு கிரெடிட் கார்டு பயனராகவும், பயண பிரியராகவும் இருந்தால், ஒரே நேரத்தில் கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்கும் பயண கிரெடிட் கார்டைத் தேர்வு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. 45 நாள் வட்டி இல்லாத கடன் காலத்தைப் பயன்படுத்திக் கொள்ளும்போது அதே சேவைகளை தள்ளுபடி விலையில் அனுபவிக்கலாம்.
கிரெடிட் கார்டுகள்
பயணம் செய்ய்யும்போது விமான டிக்கெட்டுகள் முதல் உணவு வரை சலுகைகளை வாரி வழங்கும் கிரெடிட் கார்டுகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆக்சிஸ் வங்கி அட்லஸ் கிரெடிட் கார்டு
இந்த கிரெடிட் கார்டு உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிலையங்களில் லவுஞ்ச் எனப்படும் பல்வேறு வசதிகளை கொண்ட சொகுசு அறைகளை பயன்படுத்த இலவசமாக அனுமதிக்கிறது. மேலும் இது EazyDiner வழியாக பல உணவகங்களில் 25 சதவீத தள்ளுபடியையும் வழங்குகிறது.
அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பிளாட்டினம் கிரெடிட் கார்டு
அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பிளாட்டினம் கிரெடிட் கார்டு இந்தியா முழுவதும் உள்ள விமான நிலைய லவுஞ்ச்களுக்கு வருடத்திற்கு 8 இலவச வருகைகளை (ஒரு காலாண்டிற்கு இரண்டு இலவச வருகைகள்) வழங்குகிறது. இந்த கிரெடிட் கார்டு வைத்திருந்தால் தாஜ் மற்றும் விவாண்டா ஹோட்டல்களிலிருந்து ரூ.10,000 மதிப்புள்ள மின்-பரிசு அட்டையையும் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் ஒரு வரம்பைத் தாண்டிச் செலவிடும்போது, ஒரு குறிப்பிட்ட தொகை வரை பயணச் சலுகைகளைப் பெற உங்களுக்கு உரிமை உண்டு.
8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய நற்செய்தி
கிரெடிட் கார்டு சலுகைகள்
HDFC டைனர்ஸ் கிளப் பிளாக் கிரெடிட் கார்டு
இந்த கிரெடிட் கார்டு Club Marriott, Times Prime, Amazon Prime, Swiggy One (3 மாதங்கள்) மற்றும் MMT BLACK ஆகியவற்றின் இலவச வருடாந்திர உறுப்பினர்கள் சந்தாவை வழங்குகிறது. இந்த கார்டு மூலம் நீங்கள் 150க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்களில் விமான டிக்கெட்டுகள் / ஹோட்டல்களை சலுகை விலையில் முன்பதிவு செய்து கொள்ள முடியும். HDFC வங்கி டைனர்ஸ் கிளப் பிளாக் கிரெடிட் கார்டில் வாங்கிய தேதியிலிருந்து 50 நாட்கள் வரை வட்டி இல்லாத கடன் காலத்தைப் பெறலாம்.
ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு
ஆக்சிஸ் வங்கி ரிசர்வ் கிரெடிட் கார்டு
ஆக்சிஸ் வங்கி ரிசர்வ் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை பாஸ் உறுப்பினர் சேர்க்கையுடன் வரம்பற்ற இலவச சர்வதேச லவுஞ்ச்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். நீங்கள் மட்டுமின்றி, உங்களுடன் வரும் ஒரு நபரும் ஆண்டுக்கு 12 முறை லவுஞ்ச்களை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் இது மென்மையான மற்றும் தொந்தரவு இல்லாத அனுபவத்திற்காக 8 இலவச VIP உதவி சேவைகளையும் வழங்குகிறது. இதில் விமான நிலைய செயல்முறை உதவியான செக்-இன், பாதுகாப்பு சோதனை, குடியேற்ற செயல்முறைகள் மற்றும் போர்ட்டர் சேவைகள் ஆகியவையும் அடங்கும்.
MakeMyTrip ICICI வங்கி சிக்னேச்சர் கிரெடிட் கார்டு
இந்த கிரெடிட் கார்டு ரூ.20,000 மதிப்புள்ள சேமிப்பை வழங்குகிறது. அதாவது பிரீமியம் பயண சலுகைகள், சிறப்பு தள்ளுபடிகள் மற்றும் வெகுமதிகளை நீங்கள் அனுபவிக்கலாம். இந்த கிரெட்டு கார்டு மூலம் BookMyShoந் தளத்தில் நீங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போது ஆண்டுக்கு ரூ.3,600 வரை சேமிக்க முடியும்.
2007க்குப் பிறகு முதல் முறையாக லாபம் ஈட்டிய பிஎஸ்என்எல்.. ஜியோ தான் காரணமா?