MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • புதுசா கார் ஓட்டுறீங்களா.?! அப்டியே ஸ்டார்ட் பண்ணாதீங்க.! மாசா கார் ஓட்டுறதுக்கு பக்கா டிப்ஸ்.!

புதுசா கார் ஓட்டுறீங்களா.?! அப்டியே ஸ்டார்ட் பண்ணாதீங்க.! மாசா கார் ஓட்டுறதுக்கு பக்கா டிப்ஸ்.!

சீட் பெல்ட், மிர்ரர் செட்டிங், மொபைல் போன் தவிர்த்தல், முன் செல்லும் வாகனத்துடன் இடைவெளி, மழைக்காலத்தில் வேகம் குறைத்தல், யூ டர்ன், ஓவர்டேக், ஹை ஸ்பீட், மலைப்பாதை, பார்க்கிங் என அனைத்திலும் கவனம் தேவை. 

3 Min read
Vedarethinam Ramalingam
Published : Jul 29 2025, 11:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
அமர்ந்தவுடனே ரேஸ்காரா ஓடாதீங்க!
Image Credit : our own

அமர்ந்தவுடனே ரேஸ்காரா ஓடாதீங்க!

சீட்டில் உட்கார்ந்தவுடனே `ஹீரோ’ மாதிரி சீறி ஓட வேண்டாம். முதல்ல சீட்டும், மிர்ரரும், சீட் பெல்டும் செட்டிங் பண்ணிக்கோங்க. கம்ஃபர்ட்டா செட்டாயிட்டா தான், நெறைய நேரம் ஓட்ட முடியும். கார கிளப்பிய பிறகு இந்த எல்லாத்தையும் பண்ணணும்னா, அது மோசமான ஸ்டைல் பாஸ்!

சரியான டிரைவிங் பொசிஷன் அவசியம்

காரில் ஏறியவுடனே `ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ ஸ்டைலில் பறக்கக் கூடாது! சீட்டை அட்ஜஸ்ட் செய்யுங்க: உங்க உயரத்துக்கு ஏத்த மாதிரி சீட் உயரம், முன்னும் பின்னும் தள்ளுதல், முதுகு சாய்வு எல்லாம் சரி செய்யுங்க.கண்ணாடிகளை சரிசெய்யுங்க: சைட் மிரர், ரியர் வியூ மிரர் எல்லாம் சரியா இருக்கணும். சீட் பெல்ட் கட்டாயம்: இதை மறந்துடாதீங்க.கம்ஃபர்ட்டா உணர்ந்த பிறகுதான் காரை ஸ்டார்ட் பண்ணுங்க. ஓட்டும்போது இதையெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணினா, கவனம் சிதறி ஆபத்து வரலாம்.

211
மொபைல் போனை தொடாதீங்க
Image Credit : our own

மொபைல் போனை தொடாதீங்க

டிரைவிங்கில் இருக்கும் போது வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டா எல்லாத்தையும் விடுங்க. "ஒரு மெசேஜ் தான்"னு நினைச்சாலும், ஒரு விநாடி கண்ணை சாலையிலிருந்து எடுக்குறதால, உங்கள் கார் 60 அடி தாண்டிருக்கும்! கன்ட்ரோலே போயிடும். முக்கியமான காலா? சைட்ல நிறுத்திக்கிட்டு பேசுங்க.முக்கியமான கால் வந்தா  இடது பக்கம் ஒதுக்கி, இண்டிகேட்டர் போட்டு, காரை நிறுத்தி பேசுங்க.  ஒரு செகண்ட் பார்வை சாலையை விட்டு மாறினாலும், 50 கி.மீ வேகத்தில் ஒரு செகண்டுக்கு 60 அடி கார் நகர்ந்திருக்கும். ஆபத்து உறுதி!

Related Articles

Related image1
கார் வாங்கப்போகிறீர்களா.? இதை தெரிஞ்சிக்காம வாங்காதீங்க.! இல்லாட்டி பட்ஜெட் கையை கடிக்கும்.!
Related image2
Tata Punch EV: வெறும் ரூ.40,000 முன்பணத்தில் உங்கள் சொந்த கார்
311
அடிக்கடி பார்வை - மிரருக்கு மட்டுமல்ல, இடைவெளிக்கும்!
Image Credit : our own

அடிக்கடி பார்வை - மிரருக்கு மட்டுமல்ல, இடைவெளிக்கும்!

முன் செல்லும் காரை ஜஸ்ட் பின்தொடராதீங்க. குறைந்தது 15 அடி இடைவெளி வையுங்க. சட்னா அவங்க பிரேக் அடிச்சா? ஏழரை தான் இருவருக்கும். 

முன்னால் செல்லும் வாகனத்துடன் இடைவெளி

15 அடி இடைவெளி வைங்க. முன்னால் போற கார் திடீர்னு பிரேக் அடிச்சா, மோதாம இருக்க இந்த இடைவெளி அவசியம். மாடு, நாய் குறுக்கே வந்தாலும் இந்த இடைவெளி உங்களைக் காப்பாத்தும்.

411
மழைக்காலத்தில் எக்ஸ்ட்ரா கவனம்
Image Credit : our own

மழைக்காலத்தில் எக்ஸ்ட்ரா கவனம்

ஈரமான சாலை, லோகல் கார், ஹைவே வேகம் – ரிஸ்க் ஹை பாஸ். `ஏபிஎஸ் இல்லாத கார்கள் ஸ்கிட் ஆகுற வாய்ப்பு அதிகம். வேகத்தை குறைச்சிக்கோங்க. ஈரமான சாலைகளில் கார் ஸ்கிட் ஆக வாய்ப்பு அதிகம், குறிப்பா ஏபிஎஸ் இல்லாத கார்களுக்கு. வேகத்தைக் குறைங்க: ஆக்ஸிலரேட்டரை மிதிக்காதீங்க, மெதுவா ஓட்டுங்க. ஹைவேயில் வேகமா போனா, கன்ட்ரோல் தப்பிப்போக வாய்ப்பிருக்கு.

511
யூ டர்ன்-ல யூ கேர் பண்ணணும்!
Image Credit : our own

யூ டர்ன்-ல யூ கேர் பண்ணணும்!

பிளைண்ட் ஸ்பாட் முக்கியம். சென்டர் மீடியனின் முடிவும் உங்கள் தோள்பட்டையும் ஒத்த நிலையில் வந்த பிறகு டர்ன் பண்ணீங்கனா, கவலையே இல்ல. இது காரை பாதுகாப்பா திருப்ப உதவும்.

611
ஓவர்டேக் – ஓவரா செஞ்சா ஓவராகும்!
Image Credit : Getty

ஓவர்டேக் – ஓவரா செஞ்சா ஓவராகும்!

பாஸ் லைட், ஹார்ன் – இரண்டையும் கொடுத்து, நேரமான நேரத்தில் தான் ஓவர்டேக் பண்ணணும். கார்னரில் ஓவர்டேக் பண்ணறதா? கனவில்கூட வேண்டாம் பாஸ்! கார்னரிங்கில் ஓவர்டேக் பண்ணாதீங்க: இது மிகப் பெரிய ஆபத்து. ஹார்ன், லைட் உபயோகிச்சு, பாதுகாப்பா ஓவர்டேக் பண்ணுங்க.

711
ஹை ஸ்பீடில் கவனம்
Image Credit : Getty

ஹை ஸ்பீடில் கவனம்

டயர்டா இருக்கு, தூக்கம் வருது போல இருக்கு? உடனே கார் நிறுத்துங்க. சில்லென்ற காற்று, காபி ஒரு ஃப்ரெஷ் கிடைக்கட்டும். அரை தூக்கத்தில் ஓட்டினா, லைஃபே பறந்துடும்! சிவப்பு லைனைத் தாண்டினா, உடனே காரை நிறுத்தி பார்க்கிங் பண்ணுங்க. இது இன்ஜின் பாதிப்பைத் தடுக்கும்.

811
மலைப்பாதை – சும்மா கியர் மட்டும்தான் காப்பாற்றும்!
Image Credit : google

மலைப்பாதை – சும்மா கியர் மட்டும்தான் காப்பாற்றும்!

ஏற்றத்தில் ஃபர்ஸ்ட் கியர் தான். இறக்கத்தில் கூட ஃபர்ஸ்ட் கியர் பேஸ்ட். நியூட்ரலா இறங்கணும் நெனச்சீங்கனா... அதுவே கடைசி பயணம் ஆகிவிடும். ஏற்றத்தில் முதல் கியர்: இது கன்ட்ரோலுக்கு உதவும். இறக்கத்தில் முதல் கியர்: நியூட்ரல் அல்லது மற்ற கியர்களில் இறங்கினா, கன்ட்ரோல் தப்பிப்போகும்.

911
பார்க்கிங்கா? பயப்படாதீங்க – அசால்டா பண்ணலாம்!
Image Credit : facebook

பார்க்கிங்கா? பயப்படாதீங்க – அசால்டா பண்ணலாம்!

ரிவர்ஸ் கேமரா இருந்தாலும், பின்பக்கம் பார்வை ரொம்ப முக்கியம். ஒருத்தரையாவது கீழே இறங்கி பார்க் பண்ண உதவ சொல்றீங்கனா, அது தான் செம ஸ்மார்ட்! ரிவர்ஸ் கேமரா இருந்தாலும்: பின்னாடி அடிக்கடி பாருங்க. நண்பர்களை இறங்கி உதவ சொல்லுங்க. இது புது ஓட்டுநர்களுக்கு ரொம்ப உதவும்.

1011
களைப்பு உணர்ந்தால்
Image Credit : Meta AI

களைப்பு உணர்ந்தால்

களைப்பா இருந்தா, உடனே காரை நிறுத்தி இறங்கி ஃப்ரெஷ் ஆகுங்க.காபி, குளிர்பானம் குடிச்சு உறக்கத்தைக் கலைங்க. அரைத் தூக்கத்தில் ஓட்டினா வாழ்க்கையே ஆபத்துல முடியலாம்.

1111
கார் ஓட்டுதல் எனும் கலை
Image Credit : Gemini

கார் ஓட்டுதல் எனும் கலை

இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றினா, நீங்க ஒரு பாதுகாப்பான ஓட்டுநராக மாறலாம். சாலையில் பயணிக்கும்போது உங்க பாதுகாப்பு உங்க கையில்தான் இருக்கு!

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வாகன பராமரிப்பு
வாகன மைலேஜ்
ஓட்டுநர் உரிமம்
வணிகம்
வணிக யோசனை

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved