Gold Rate Today : திடீரென குறைந்த தங்கத்தின் விலை.. மிஸ் பண்ணிடாதீங்க - எவ்வளவு தெரியுமா?
கடந்த சில வாரங்களாக அதிகரித்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரத்தை காணலாம்.
வீட்டு விசேஷங்கள், பண்டிகைகள் உள்ளிட்ட அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் தங்க அணிகலன்கள் முக்கிய இடத்தை பிடிக்கிறது. அதே நேரம் தற்போது தங்கத்தின் மீதான முதலீடுகளும் அதிகரித்து வருகிறது.
தங்கம் வெள்ளி விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் இடையில் சில நாட்கள் தங்கம் வெள்ளி விலை குறைந்தாலும் நீண்ட கால அடிப்படையில் தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கு நல்ல லாபமே கிடைத்து வருகிறது.
நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.45,440க்கும், 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.5,680க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய (மே 22) நிலவரப்படி, தங்கம் கிராம் ஒன்று 5,675க்கும், சவரனுக்கு 45,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல வெள்ளியை பொறுத்தவரை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து 78.60க்கும், வெள்ளி கிலோ 78,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க..வெப்பத்தை போக்க வருகிறார் வருண பகவான்.! தமிழ்நாட்டில் கொட்டப்போகும் மழை - எங்கெல்லாம் தெரியுமா?