Gold Rate Today : அதிரடியாக உயர்ந்த தங்க விலை.. எவ்வளவு தெரியுமா?
தங்கத்தின் விலை நீண்ட நாட்களுக்கு பிறகு குறைந்து வருகிறது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகை வாங்குவோரிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளி விளையும் அடிக்கடி ஏறி இறங்கி வருகிறது.
வரலாற்றில் இல்லாத அளவுக்கு சவரனுக்கு 44 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சியை கொடுத்தது. இருப்பினும் பொதுமக்கள் தங்கம் வாங்குவதை நிறுத்தவில்லை.
நேற்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 குறைந்து 44,080க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் கிராமுக்கு 30 குறைந்து 5,510க்கும் நேற்று விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய (மார்ச் 29) நிலவரப்படி, தங்கம் விலை ச22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 உயர்ந்து ரூபாய் 44,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு 35 உயர்ந்து 5,545க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி ஒரு கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து 76க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி 76,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க..ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை - முழு விபரம் இதோ