LPG Cylinder Price Hike: கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்
எல்பிஜி சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்படுவதாகவும், இந்த அறிவிப்பு நாளை முதல் அமலுக்கு வரும் என்ற மத்ததிய அமைச்சரின் அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

LPG Gas Cylinder
உஜ்வாலா திட்டம்
எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.50 அதிகரித்துள்ளது.இந்த உயர்வு இல்லத்தரசிகளின் மாதாந்திர பட்ஜட்டை கணிசமாக பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது. எல்பிஜி சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது இப்போது சிலிண்டருக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். எல்பிஜி சிலிண்டர் விலையை ரூ.50 உயர்த்துவதாக பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார். ஏற்கனவே உஜ்வாலா திட்டத்தில் மானிய விலையில் 503 ரூபாய்க்கு விற்கப்பட்ட சமையல் கேஸ் நாளை முதல் 553 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.
LPG Cylinder Price Hike
கேஸ் சிலிண்டர் விலை
மேலும் உஜ்வாலா திட்டம் அல்லாமல் மானிய விலையில் 803 ரூபாய்க்கு விற்கப்பட்ட சமையல் கேஸ் சிலிணிடர் நாளை முதல் 853 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். பணவீக்கம் ஏற்கனவே மிக அதிகமாக இருக்கும் நேரத்தில் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்து வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், எல்பிஜி சிலிண்டர் விலை சாமானியர்களுக்கு மற்றொரு அதிர்ச்சியாக மாறி உள்ளது.
Cooking Gas
அடிக்கு மேல் அடி
முன்னதாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்த்தியது. இந்த தகவல் அதிகாரப்பூர்வ உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.13 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.10 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், கலால் வரி உயர்வு பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விலையில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த உத்தரவில் குறிப்பிடவில்லை.
Gas Cylinder Price Hike
இதற்கிடையில், கலால் வரி உயர்த்தப்பட்டாலும் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சரிவு
கடந்த சில நாட்களாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்ததால், பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளதால், விலை குறைவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது.