- Home
- Business
- இவ்வளவு கம்மியான வட்டியா.! சுய உதவி குழுவினருக்கு தலா ரூ.1.25 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- விண்ணப்பிப்பது எப்படி.?
இவ்வளவு கம்மியான வட்டியா.! சுய உதவி குழுவினருக்கு தலா ரூ.1.25 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- விண்ணப்பிப்பது எப்படி.?
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.25 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. குழு உறுப்பினர்கள் ஒருவருக்கு அதிகப்பட்சமாக ரூ. 1.25 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது,

மகளிர்களுக்கான கடன் உதவி திட்டங்கள்
மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பல்வேறு கடன் உதவி திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி திட்டங்கள் இந்தியாவில், குறிப்பாக ஏழை மற்றும் பின்தங்கிய மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக, மத்திய மற்றும் மாநில அரசுகள், வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டங்கள் மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, சிறு தொழில்கள் தொடங்கவும், வருமானம் ஈட்டவும், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை அடையவும் உதவுகின்றன.
25 லட்சம் ரூபாய் கடன் உதவி திட்டங்கள்
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் , தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் - (TABCEDCO) குழுக்கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரூ. 25 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. இந்த கடன் உதவியானது சுய உதவிக்குழுவில் உறுப்பினராக உள்ள மகளிர் மற்றும் ஆடவருக்கு குழுக்கடன் வழங்கப்படுகிறது. குழு உறுப்பினர்கள் ஒருவருக்கு அதிகப்பட்சமாக ரூ. 1.25 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது.
ரொம்ப கம்மியான வட்டி
சுய உதவி குழு கடன் உதவி திட்டத்தில் ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திரும்ப செலுத்தும் காலம் 2 1/2 ஆண்டுகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடன் உதவி பெற ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் மட்டுமே இருக்க வேண்டும் எனவும் குழு துவங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகி இருத்தல் வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
தகுதிகள் என்ன.?
தகுதிகள்:
பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்குள்.
வயது: 18 -60 வரை
குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகங்கள்.
" டாப்செட்கோவின் இணையத்தளம் www.tabcedco.tn.gov.in
கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகங்கள்.
மாவட்ட / மத்திய / நகர கூட்டுறவு வங்கிகள் / கூட்டுறவு கடன் சங்கங்கள். ஆகிய இடங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேவைப்படும் ஆவணங்கள் :
சாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை