- Home
- Business
- பெண்களுக்கான 5 லாபகரமான சிறு தொழில்கள்.! மாதம் ரூ.60,000 ஆயிரம் வரை வருமானம்.! அட்டகாசமான தொழில் வாய்ப்பு.!
பெண்களுக்கான 5 லாபகரமான சிறு தொழில்கள்.! மாதம் ரூ.60,000 ஆயிரம் வரை வருமானம்.! அட்டகாசமான தொழில் வாய்ப்பு.!
குறைந்த முதலீட்டில் பெண்கள் வீட்டிலிருந்தே தொடங்கக்கூடிய 5 சிறந்த சிறு தொழில் வாய்ப்புகள். உலர்ந்த பூங்கொத்துகள், ஆர்கானிக் பியூட்டி புராடக்ட்ஸ், ஹோம் பேக்கரி, முட்டை மற்றும் மீன் விற்பனை, பிளே ஸ்கூல் / டே கேர்.

பெண்களுக்கான குறைந்த முதலீட்டில் லாபம் தரும் 5 சிறு தொழில்கள்
இன்றைய காலத்தில் பெண்கள் வீட்டு வேலைகளுடன் கூடுதல் வருமானம் ஈட்ட விரும்புகின்றனர். அதற்காக பெரிய முதலீடு தேவையில்லை. சில சின்ன தொழில்களை வீட்டிலிருந்தே தொடங்கி நல்ல வருமானத்தை சம்பாதிக்கலாம். கீழே பெண்களுக்கு ஏற்ற 5 சிறு தொழில் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
உலர்ந்த பூங்கொத்து (Dry Flower Bouquet) தயாரிப்பு
பூக்களை உலர்த்தி அழகான பூங்கொத்துகள், வால் ஹேங்கிங், அலங்கார பொருட்கள் தயாரிக்கலாம். திருமணம், பிறந்தநாள், விழா நிகழ்ச்சிகளில் அதிக தேவை. ஆரம்ப முதலீடு ரூ.2,000 – ரூ.5,000 வரை போதுமானது. ஒவ்வொரு பூங்கொத்தையும் ரூ.200 – ரூ.500 க்கு விற்கலாம்.
ஆர்கானிக் பியூட்டி புராடக்ட்ஸ்
இயற்கை மூலிகைகள் கொண்டு ஹேண்ட்மேட் ஹேர் ஆயில், ஸ்கின் க்ரீம், ஃபேஸ் பவுடர் போன்றவற்றை தயாரித்து விற்கலாம். இயற்கை பொருட்களுக்கு எப்போதும் அதிக சந்தை. முதலீடு ரூ.3,000 – ரூ.7,000 போதுமானது. ஒவ்வொரு பொருளிலும் குறைந்தது 40% லாபம் கிடைக்கும்.
ஹோம் பேக்கரி / பேக்கிங்
கேக், பிஸ்கட், ப்ரவுனி, டோனட் போன்றவற்றை வீட்டிலேயே செய்து விற்பனை செய்யலாம். ஆன்லைன் ஆர்டர்ஸ் மூலமும் லாபம் பெறலாம். ஆரம்ப முதலீடு ரூ.10,000 – ரூ.20,000 (ஒவன், பாத்திரங்கள், மூலப்பொருட்கள்). லாபம்: மாதம் ரூ.25,000 – ரூ.40,000 வரை பெறலாம்.
கோழி முட்டை மற்றும் மீன் விற்பனை
முட்டை மற்றும் மீனை wholesale-ல் வாங்கி retail-ஆ விற்பனை செய்யலாம். அதிக தேவை உள்ள பொருள் என்பதால் தினசரி லாபம் உறுதி. முதலீடு ரூ.5,000 – ரூ.15,000. ஒரு நாளைக்கு ரூ.500 – ரூ.1,000 வரை லாபம் கிடைக்கும்.
வீட்டில் பிளே ஸ்கூல் / டே கேர்
சிறிய அளவில் 3–6 வயது குழந்தைகளுக்கான பிளே ஸ்கூல் அல்லது டே கேர் தொடங்கலாம். கல்வி + விளையாட்டு முறையில் நடத்தினால் பெற்றோர்கள் நம்பிக்கை வைப்பார்கள். முதலீடு ரூ.15,000 – ரூ.25,000 (விளையாட்டு பொருட்கள், கல்வி பொருட்கள்). மாதம் ரூ.40,000 – ரூ.60,000 வரையிலும் வருமானம் பெறலாம்.