வீட்டுக்கே மதுபானம் டெலிவரி.. குஷியில் மதுப்பிரியர்கள்.. தமிழ்நாட்டுக்கு வருமா?
வாடிக்கையாளர்களுக்கு எளிதில் மதுபானம் வாங்கும் வசதி வழங்கும் நோக்கில், புதிய மொபைல் ஆப் ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்துக்கு வரவேற்பும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

ஆன்லைன் மதுபான விற்பனை
கேரள மாநில பான நிறுவனமான பெவ்கோ (BEVCO) தனது வாடிக்கையாளர்களுக்கு எளிதில் மதுபானம் வாங்கும் வசதி வழங்கும் நோக்கில், புதிய மொபைல் ஆப் ஒன்றை உருவாக்கி வருகிறது. பெவ்கோ எம்.டி. ஹர்ஷிதா அட்லூரி, ஐபிஎஸ், இந்த ஆப் மூலம் முதற்கட்டமாக வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பமான பானங்களை தேர்வு செய்து, ஆன்லைனில் பணம் செலுத்துங்கள், கடையில் வரிசையில் நிற்காமல் பெற்றுச் செல்லலாம் என்றார்.
கேரளா பெவ்கோ
அரசின் அனுமதி கிடைத்தால், வீட்டிற்கு நேரடியாக மதுபானம் கொண்டு செல்லும் வசதியும் தெரிவித்தார். ஆப்பின் வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன, 10-15 நாட்களில் தயாராகிவிடும். ஆனால், இந்த அறிவிப்புக்கு உடனடியாக மதுவிலக்கு மற்றும் உள்ளூர் நிர்வாகத் துறை அமைச்சர் எம்.பி. ராஜேஷ் எதிர்ப்பு தெரிவித்தார். மாநிலத்தின் மதுக்கொள்கையில் தற்போது ஆன்லைன் விநியோகத்திற்கு அனுமதி இல்லை.
மதுபான டெலிவரி ஆப்
முக்கிய கொள்கை முடிவுகள் அமைச்சரவை மட்டுமே எடுக்க வேண்டும் வேண்டும் என அவர் வலியுறுத்தினார். பெவ்கோ தனிப்பட்ட முறையில் திட்டங்களை அறிவிக்க முடியாது என்றார். சிலர், கூட்ட நெரிசலைக் குறைத்து, வசதி அளிக்கும் திட்டம் நல்லது என ஆதரிக்கவும், மற்றவர்களின் கொள்கைகள் மீறப்படக் கூடாது என வலியுறுத்துகின்றனர்.
மதுபானம் வீடு டெலிவரி
இந்த விவகாரம் கேரளாவில் மதுபான விற்பனை கொள்கையைச் சுற்றியுள்ள விவாதத்தை மீண்டும் சூடேற்றியுள்ளது. அடுத்த சில வாரங்களில், இந்த ஆப் திட்டம் முன்னேறுமா அல்லது அரசின் விதிமுறைகளால் நிறுத்தப்படுமா என்பது தெளிவாகும். இந்த நிலையில் தமிழகத்துக்கு இதுபோன்ற திட்டம் விரைவில் வருமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இப்போதைக்கு வராது என்றும் மட்டும் தெரிகிறது.