MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ஜூன் 1 ஷாக் அப்டேட்.. இன்று முதல் புது ரூல்ஸ்.. யுபிஐ, எல்பிஜி, பான் பயன்படுத்துவோர் கவனம்

ஜூன் 1 ஷாக் அப்டேட்.. இன்று முதல் புது ரூல்ஸ்.. யுபிஐ, எல்பிஜி, பான் பயன்படுத்துவோர் கவனம்

June 1 Users Alert : ஜூன் 1 முதல், எல்பிஜி, யுபிஐ, ஏடிஎம் பரிவர்த்தனைகள் மற்றும் வருமான வரி ஆகியவற்றில் பல புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த மாற்றங்கள் பொதுமக்களின் தினசரி செலவுகளையும், டிஜிட்டல் பரிவர்த்தனை பாதுகாப்பையும் நேரடியாகப் பாதிக்கும்.

2 Min read
Author : Raghupati R
Published : Jun 01 2026, 07:43 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஜூன் 1 விதிமாற்றம்
Image Credit : Asianet News

ஜூன் 1 விதிமாற்றம்

ஜூன் 1 தொடங்கியவுடன் நாட்டின் பல முக்கிய சேவைகளிலும் புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. சமையலறை செலவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை வரை, இந்த மாற்றங்கள் நேரடியாக பொதுமக்களின் தினசரி வாழ்க்கையையும் மாதாந்திர பட்ஜெட்டையும் பாதிக்கக்கூடியவை. அதனால், இன்றிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ள இந்த புதிய விதிகளை தெரிந்துகொள்வது அவசியமாகியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
எல்பிஜி அப்டேட்
Image Credit : Getty

எல்பிஜி அப்டேட்

முக்கியமான மாற்றமாக, பிஎன்ஜி (Piped Natural Gas) இணைப்பு பெற்ற வீடுகளுக்கான எல்பிஜி விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய நடைமுறையின்படி, பிஎன்ஜி வசதி செயல்பாட்டுக்கு வரும் 30 நாட்களுக்குள் பழைய எல்பிஜி சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட வேண்டும். அதேசமயம், இண்டேன், பாரத் கேஸ், ஹெச்பி கேஸ் நிறுவனங்கள் ‘கனெக்ஷன் டிரான்ஸ்ஃபர் வவுச்சர்’ முறையை அறிமுகப்படுத்தி, எதிர்காலத்தில் மீண்டும் எல்பிஜி இணைப்பு பெறும் வாய்ப்பையும் வழங்குகின்றன. வழக்கம்போல், எல்பிஜி மற்றும் வணிக சிலிண்டர் விலை திருத்தமும் இன்று அமலுக்கு வருகிறது.

Related Articles

Related image1
PNB 444 day FD: 7.25% வட்டி! சேவிங்ஸ் வட்டியை விட 3 மடங்கு லாபமா? பிஎன்பி 444 நாள் FD திட்டம்
Related image2
தங்க லாபம் வந்தா முழுசும் உங்களுக்கில்லை.. வரி எப்படி கணக்காகும் தெரியுமா?
35
யுபிஐ புதிய விதி
Image Credit : Getty

யுபிஐ புதிய விதி

டிஜிட்டல் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் யுபிஐ பரிவர்த்தனைகளிலும் புதிய பாதுகாப்பு அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது. கூகுள்பே, போன்பே, பேடிஎம் போன்ற ஆப்களில் பணம் அனுப்புவதற்கு முன், பெறுநரின் வங்கியில் பதிவு செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ பெயர் திரையில் காட்டப்படும். தவறான பரிவர்த்தனை மற்றும் மோசடிகளை குறைப்பதே இதன் நோக்கம்.

45
ஏடிஎம்
Image Credit : X

ஏடிஎம்

வங்கி சேவைகளிலும் சில மாற்றங்கள் அமலாகின்றன. பல வங்கிகள் ஏடிஎம் இலவச பரிவர்த்தனை வரம்பை கடுமையாக பின்பற்றத் தொடங்கியுள்ளன. வரம்பை மீறினால் பணம் எடுப்பது, பேலன்ஸ் பார்ப்பது போன்ற சேவைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படலாம். பான் விதிகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளுக்கு பான் கட்டாயம் தொடர்கிறது.

55
வருமான வரி மாற்றங்கள்
Image Credit : Gemini

வருமான வரி மாற்றங்கள்

இதோடு, வருமான வரி மற்றும் போக்குவரத்துத் துறைகளிலும் புதிய நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன. முன்கூட்டியே வரி செலுத்த வேண்டியவர்களுக்கு ஜூன் 15 முக்கிய தேதியாகும். மேலும், சென்னை புறநகர் ரயில் சேவைகளின் புதிய கால அட்டவணையும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதால், தினசரி பயணிகள் தங்கள் பயண நேரத்தை மீண்டும் சரிபார்க்க வேண்டிய அவசியம் உள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பான் அட்டை
எரிவாயு உருளை
ஒருங்கிணைந்த பணப் பரிமாற்ற இடைமுகம்
வங்கி
ரயில்

Latest Videos
Recommended Stories
Recommended image1
DMart Jobs : டிமார்ட்டில் பெண்கள் அதிகம் வேலை செய்வதற்கு காரணம் என்ன?
Recommended image2
PNB 444 day FD: 7.25% வட்டி! சேவிங்ஸ் வட்டியை விட 3 மடங்கு லாபமா? பிஎன்பி 444 நாள் FD திட்டம்
Recommended image3
தங்க லாபம் வந்தா முழுசும் உங்களுக்கில்லை.. வரி எப்படி கணக்காகும் தெரியுமா?
Related Stories
Recommended image1
PNB 444 day FD: 7.25% வட்டி! சேவிங்ஸ் வட்டியை விட 3 மடங்கு லாபமா? பிஎன்பி 444 நாள் FD திட்டம்
Recommended image2
தங்க லாபம் வந்தா முழுசும் உங்களுக்கில்லை.. வரி எப்படி கணக்காகும் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved