- Home
- Business
- PNB 444 day FD: 7.25% வட்டி! சேவிங்ஸ் வட்டியை விட 3 மடங்கு லாபமா? பிஎன்பி 444 நாள் FD திட்டம்
PNB 444 day FD: 7.25% வட்டி! சேவிங்ஸ் வட்டியை விட 3 மடங்கு லாபமா? பிஎன்பி 444 நாள் FD திட்டம்
PNB 444 day FD: பஞ்சாப் நேஷனல் வங்கி அறிமுகப்படுத்தியுள்ள 444 நாள் பிக்சட் டெபாசிட் திட்டம், பொது வாடிக்கையாளர்களுக்கு 7.25% மற்றும் சீனியர் சிட்டிசன்களுக்கு 7.75% வரை வட்டி வழங்குகிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் 444 நாள் பிக்சட் டெபாசிட் திட்டம்
சேமிப்பு கணக்கில் பணம் வைத்திருப்பது பாதுகாப்பானது என்றாலும், அதற்கு வட்டி கிடைக்கும் பல நேரங்களில் பணவீக்கத்தை சமாளிக்க போதுமானதாக இருக்காது. இதனால், குறைந்த அபாயத்தில் நிரந்தர வருமானம் தேடும் முதலீட்டாளர்கள் பலரும் நிலையான வைப்புத் திட்டங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர். அந்த வகையில், பஞ்சாப் நேஷனல் வங்கியின் 444 நாள் பிக்சட் டெபாசிட் திட்டம் தற்போது கவனம் செலுத்தியுள்ளது.
7.25% வரை வட்டி
இந்த திட்டத்தில் பொதுவான வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு 7.25% வரை வட்டி வழங்கப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்ட சீனியர் சிட்டிசன்களுக்கு 7.75% வரை வட்டி கிடைக்கிறது. 80 வயதுக்கு மேற்பட்ட சூப்பர் சீனியர் குடிமக்களுக்கு வட்டி மேலும் அதிகரித்துள்ளது. குறைந்தபட்சமாக ரூ.1,000 முதலீட்டில் இந்த பிக்சட் டெபாசிட்-யை தொடங்கலாம் என்பது சிறப்பு.
பிக்சட் டெபாசிட் திட்டம்
இந்த பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வட்டி மூன்று மாதம் ஒருமுறை அசலுடன் சேர்க்கப்பட்டு கணக்கிடப்படுகிறது. இதனால் கலவை பலன் கிடைக்கிறது. உதாரணமாக, ரூ.3 லட்சம் முதலீடு செய்தால் முதிர்வில் பொதுவான வாடிக்கையாளர்களுக்கு ரூ.3.26 லட்சத்திற்கும் அதிகமாகவும், சீனியர் சிட்டிசன்களுக்கு அதைவிட கூடுதல் தொகையும் கிடைக்கும்.
அவசரத் தேவை
அவசரத் தேவையில் பிக்சட் டெபாசிட்டை உடைக்காமல், அதன் மீது கடன் பெறும் வசதியும் வழங்கப்படுகிறது. இதனால் அபராதத்தை தவிர்க்க முடியும். மேலும், DICGC பாதுகாப்பின் கீழ் ரூ.5 லட்சம் வரை டெபாசிட்டுகளுக்கு உத்தரவாதம் இருப்பது பலருக்கு நம்பிக்கை அளிக்கிறது.
வரி விதிகள்
அதே நேரத்தில், வரி விதிகளையும் கவனிக்க வேண்டியது அவசியம். பிக்சட் டெபாசிட் வட்டி உங்கள் ஆண்டு வருமானத்தில் சேர்க்கப்பட்ட வரி கணக்கிடப்படும். குறிப்பிட்ட வரம்பை தாண்டினால் TDS பிடிக்கப்படும். எனவே முதலீடு செய்வதற்கு முன் வட்டி, காலம் மற்றும் வரி தாக்கம் ஆகியவற்றை முழுமையாக மதிப்பீடு செய்வது முக்கியம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

