5000 ரூபாய் நோட்டு வருதா? ரிசர்வ் வங்கி என்ன சொன்னது தெரியுமா?
RBI clarification on Rs 5000 note: இந்தியாவில் ரூ.5000 நோட்டு புழக்கத்துக்கு வரும் என சமூக வலைதளங்களில் பரவிவரும் தகவலுக்கு ஆர்பிஐ பதில் அளித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டதன் பின்னணியில் இந்தத் தகவல் வைரலாகி வருகிறது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
Rs 5000 note
ரூ.5000 நோட்டு வெளியாகுமா?
இந்திய ரிசர்வ் வங்கி ரூ.5000 நோட்டை கொண்டு வரப்போவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தை நிறுத்த, ரிசர்வ் வங்கி அவற்றை திரும்பப் பெற்றதால், தற்போது பெரிய மதிப்புள்ள ரூபாய் நோட்டு எதுவும் இல்லை. தற்போது இந்தியாவில் மிகப்பெரிய நோட்டு 500 ரூபாய்தான். அதனால்தான் ரிசர்வ் வங்கி 5000 ரூபாய் நோட்டைக் கொண்டு வரும் என்று தகவல் பரவி வருகிறது.
High Value Currency Notes
உயர் மதிப்புடைய கரன்சி நோட்டுகள்:
உயர் மதிப்புடைய கரன்சி நோட்டுகள் இந்தியாவிற்கு புதிதல்ல. 1947ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பிறகு ரூ.5,000 மற்றும் ரூ.10,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. 5,000 ரூபாய் நோட்டு 1954 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1978-ல் அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் அரசு பெரிய நோட்டுகள் செல்லாது என முடிவு செய்தபோது ரூ.1000, ரூ.5000, ரூ.10000 நோட்டுகள் மதிப்புநீக்கம் செய்யப்பட்டன. அதற்கு முன்பாக, கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் உயர் மதிப்புடைய கரன்சி நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.
RBI on 5000 rupees note
ரிசர்வ் வங்கி பதில்:
இது குறித்து ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. புதிதாக பச்சை நிறத்தில் 5,000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்படும் என்பது வெறும் வதந்தி என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. இதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது. இந்த வதந்திகளில் எந்த உண்மையும் இல்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநரும் தெளிவுபடுத்தியுள்ளார்.
2000 rupees note
ரூ.2000 நோட்டு வாபஸ்:
ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை மட்டுமே திரும்ப் பெற்றுள்ளது. எனவே பச்சை நிறத்தில் 5000 ரூபாய் நோட்டு வெளியாகும் எனப் பரவிவரும் பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம். தற்போது ரூ.500, ரூ. 200, ரூ. 100, ரூ. 50, ரூ. ரூ.20 மற்றும் ரூ.10 நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன.
Rumors on Rs 5,000 note
தற்போது டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகின்றன. அரசாங்கம் அதனை ஊக்குவித்து வருகிறது. யுபிஐ, சைபர்ஸ்பேஸ் பேங்கிங், டிஜிட்டல் வாலட் ஆகியவை நோட்டுகளுக்கு மாற்றாக உள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில் புதிய நோட்டுகளை புழக்கத்தில் விடுவது சரியல்ல என ஆர்பிஐ கருதுகிறது. புதிய கரன்சி நோட்டு வெளியிடப்படுமா என்பதை இந்திய ரிசர்வ் வங்கி அல்லது நிதி அமைச்சகம் மட்டுமே அறிவிக்கும். அவைதான் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இருக்கும். சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்.