MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ரூபாய் மாஸ் கம்பேக்… ஆர்பிஐ நடவடிக்கையால் ஒரே நாளில் பெரிய உயர்வு.!

ரூபாய் மாஸ் கம்பேக்… ஆர்பிஐ நடவடிக்கையால் ஒரே நாளில் பெரிய உயர்வு.!

வரலாற்று சரிவை சந்தித்த இந்திய ரூபாய், ரிசர்வ் வங்கியின் திடீர் நடவடிக்கையால் தற்போது வலுவான மீட்சியைப் பெற்றுள்ளது. இந்த நடவடிக்கை சந்தையில் டாலர் வரத்தை அதிகரித்து, ரூபாயின் மதிப்பை உயர்த்தியுள்ளது.

1 Min read
Author : Raghupati R
Published : Mar 30 2026, 12:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Image Credit : Getty

இந்திய ரூபாய் சமீபத்தில் கடுமையான சரிவை சந்தித்திருந்தாலும், தற்போது அதிரடியான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.கடந்த வெள்ளிக்கிழமை வரலாற்றிலேயே மிகக் குறைந்த நிலைக்கு சரிந்த ரூபாய், அதற்குப் பிறகு மிக வேகமாக திரும்பி வந்துள்ளது. இதன் பின்னணி காரணமாக ரிசர்வ் வங்கியின் திடீர் நடவடிக்கை பார்க்கப்படுகிறது. இன்று வர்த்தகம் தொடங்கியவுடன், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சுமார் 1% உயர்ந்து 93.85 என்ற நிலையை எட்டியது. இதற்கு முன் வெள்ளிக்கிழமை, ரூபாய் 94.84 வரை வீழ்ந்திருந்தது.

23
Image Credit : Getty

அந்த நிலையில் ஒரே நாளில் சுமார் ஒரு ரூபாய் உயர்வு கண்டிருப்பது சந்தையில் பெரிய மாற்றமாக உள்ளது. இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் ரிசர்வ் வங்கி எடுத்த புதிய கட்டுப்பாடுதான். அந்நியச் செலாவணி சந்தையில் நிலைத்தன்மையை ஏற்படுத்தும், வங்கிகளின் ‘நெட் ஓப்பன் பொசிஷன்’ வரம்பை 100 மில்லியன் டாலராகக் குறைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 10க்குள் அனைத்து வங்கிகளும் இந்த விதியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டின் விளைவாக, வங்கிகள் அதிக அளவில் டாலரை கையிருப்பில் வைத்திருக்க முடியாது. இதனால் அவர்கள் வைத்திருந்த கூடுதல் டாலரை சந்தையில் விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

Related Articles

Related image1
ரூ.10 லட்சம் லோன்… திருப்பிச் செலுத்த வேண்டியது குறைவு! கூட்டுறவு வங்கி புதிய சலுகை
Related image2
மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு ஜாக்பாட்.! வருமான வரி சட்டத்தில் வரும் அதிரடி மாற்றங்கள்.! ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்.!
33
Image Credit : Getty

சந்தையில் டாலர் வரத்து அதிகரித்ததால், ரூபாயின் மதிப்பு தானாகவே உயர்ந்தது. இந்த நடவடிக்கை ரூபாய் மேலும் சரிவதை தடுக்க உதவும் என நிபுணர்கள் கருதுகின்றனர். ‘ஓப்பன் பொசிஷன்’ என்பது ஒரு வங்கி வாங்கிய அல்லது விற்ற வெளிநாட்டு நாணயத்தை எதிர் பரிவர்த்தனை மூலம் முடிக்காமல் வைத்திருப்பதைக் குறிக்கும். நாள் முடிவில் வாங்கியதும் விற்றதும் இடையேயான வித்தியாசமே ‘நெட் ஓப்பன் பொசிஷன்’. இப்போது இந்த அளவை கட்டுப்படுத்தியதால், சந்தையில் சமநிலை ஏற்பட்டு ரூபாய்க்கு வலுவான ஆதரவு கிடைத்துள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய நாணயம்
பொருளாதாரம்
இந்தியா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Iran Oil: 'ஈரானின் எண்ணெய்யை பிடுங்குவோம்' - டிரம்பின் மிரட்டலால் உலகம் ஷாக்! என்னதான் திட்டம்?
Recommended image2
Mileage Tips: இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க... வண்டி மைலேஜ் குறைய 100% கேரண்டி!
Recommended image3
ஏப்.1 முதல் மொத்தமாக மாறப்போகும் விதிமுறை..! வங்கியில் பணம் செலுத்துவதில் புதிய கட்டுப்பாடு..
Related Stories
Recommended image1
ரூ.10 லட்சம் லோன்… திருப்பிச் செலுத்த வேண்டியது குறைவு! கூட்டுறவு வங்கி புதிய சலுகை
Recommended image2
மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு ஜாக்பாட்.! வருமான வரி சட்டத்தில் வரும் அதிரடி மாற்றங்கள்.! ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved