- Home
- Business
- மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு ஜாக்பாட்.! வருமான வரி சட்டத்தில் வரும் அதிரடி மாற்றங்கள்.! ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்.!
மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு ஜாக்பாட்.! வருமான வரி சட்டத்தில் வரும் அதிரடி மாற்றங்கள்.! ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்.!
New Income Tax Rules 2026 : மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வருமான வரிச் சட்டம் வருகிற ஏப்ரல் 1, 2026 முதல் நடைமுறைக்கு வர உள்ளது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

1.வரி ஆண்டு அறிமுகம்
60 ஆண்டு கால பழமையான 1961 ஆம் ஆண்டு சட்டத்திற்கு பதிலாக ‘புதிய வருமான வரி சட்டம் 2025’ ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரவுள்ளது. இது வரி விதிமுறைகளை எளிமையாக்குவதையும், வரி செலுத்துவோர் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சிக்கலான பிரிவுகளை குறைப்பதையும் நோகமாக கொண்டுள்ளது. இதுவரை நாம் பயன்படுத்தி வந்த ‘நிதியாண்டு’ மற்றும் ‘மதிப்பீடு ஆண்டு’ என்ற குழப்பமான முறை மாற்றப்படுகிறது. இனி ஏப்ரல் 1 முதல் தொடங்கும் 12 மாத காலப்பகுதி நேரடியாக ‘வரி ஆண்டு’ (Tax Year) என்று அழைக்கப்படும். இது வரி தாக்கல் செய்வதை எளிதாக்கும்.
2.வாடகை ஒப்பந்தத்தில் புதிய விதிகள்
வாடகை வீட்டில் வசிப்பவர்கள் ஹெச்.ஆர்.ஏ (வீட்டு வாடகைப்படி) கோரும் பொழுது ஆண்டு வாடகை ரூ.1 லட்சத்தை தாண்டினால் நில உரிமையாளரின் விபரங்களுடன் அவருக்கும் உங்களுக்கும் உள்ள உறவை புதிய படிவம் மூலம் தெரிவிக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களுக்கு வாடகை கொடுப்பதாக கூறி வரி ஏய்ப்பு செய்வதை தடுக்க இந்த விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. குறிப்பாக பெற்றோர் அல்லது உறவினர்களுக்கு வாடகை செலுத்தி வரிச்சலுகை பெறுபவர்கள் உரிய ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டியது இனி கட்டாயமாகும்.
3. வீட்டு வாடகை சலுகை
புதிய விதிகளின்படி மும்பை, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், புனே, பெங்களூரு, அகமதாபாத், டெல்லி ஆகிய நகரங்களில் வசிக்கும் ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் 50% வரை ஹெச்.ஆர்.ஏ வரிவிலக்கு பெறலாம். தற்போது டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நான்கு பெரு நகரங்களில் வசிப்பவர்களுக்கு மட்டுமே அடிப்படை சம்பளத்தில் 50% வரை ஹெச்.ஆர்.ஏ வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. ஏப்ரல் 1 முதல் பெங்களூர், புனே, ஹைதராபாத், அகமதாபாத் ஆகிய நான்கு நகரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இனி இந்த எட்டு நகரங்களில் வசிப்பவர்களுக்கும் 50% வரி விலக்கும், இதர நகரங்களுக்கு 40% என்கிற வரம்பு தொடரும்.
4. கல்வி உதவித் தொகைக்கு வரி விலக்கு
பணியாளர்களுக்கு வழங்கப்படும் சில சலுகைக்கான வரி விலக்கு வரம்பு பல ஆண்டுகளுக்குப் பிறகு உயர்த்தப்பட்டுள்ளது. கல்வி உதவித்தொகை ஒரு குழந்தைக்கு மாதம் ரூ.100 என்பதிலிருந்து ரூ.3,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விடுதி உதவித்தொகை ஒரு குழந்தைக்கு மாதம் ரூ.300 என்பதிலிருந்து ரூ.9,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்சம் இரண்டு குழந்தைகளுக்கு மட்டும் இது பொருந்தும்.
5.கார் பயன்பாடு
அதேபோல் கார் பயன்பாடு தொடர்பான விதிகளிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர் காரை தனது சொந்த தேவைக்கும், அலுவலக தேவைக்கும் பயன்படுத்தினால் 1.6 லிட்டர் என்ற திறன் கொண்ட கார்களுக்கு மாதம் ரூ.5,000-ம் அதைவிட பெரிய கார்களுக்கு மாதம் ரூ.7,000-ம் வரிக்குரிய மதிப்பாக கணக்கிடப்படும். நிறுவனத்தின் மூலம் ஓட்டுனர் வழங்கப்பட்டால் இந்த மதிப்புடன் மாதம் ரூ.3,000 ரூபாய் கூடுதலாக அதிகரிக்கப்படும். தவிர நிறுவனத்தால் வழங்கப்படும் பரிசுகள் அல்லது வவுச்சர்களுக்கு ரூ.15,000 வரை வரிவிலக்கு அளிக்கப்படும்.
6. புதிய வரி விகிதங்கள்
சம்பளம் பெறும் தனிநபர்களுக்கு புதிய வழிமுறை அதிக பலன்களை அளிக்கிறது. புதிய முறையில் ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி செலுத்த தேவையில்லை. சம்பளம் பெறுவோருக்கான நிலையான கழிவு ரூ.75,000 ஆக உள்ளது. இதையும் சேர்த்தால் ரூ.12.75 லட்சம் வரை வருமானம் ஈடுபவர்கள் வரி செலுத்த வேண்டியதில்லை.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

