வருமான வரி தாக்கல் அவகாசம் மீண்டும் நீட்டிப்பு.. கடைசி தேதி என்ன தெரியுமா?
மத்திய நேரடி வரித் துறை வாரியம் (CBDT), வருமான வரி அறிக்கைகள் (ITR) மற்றும் ஆடிட் அறிக்கைகள் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை மீண்டும் நீட்டித்துள்ளது. இதுகுறித்த விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

வருமான வரி அவகாசம் நீட்டிப்பு
வரி செலுத்துவோருக்கு மத்திய வரித்துறை ஒரு முக்கிய நிவாரணத்தை வழங்கியுள்ளது. மத்திய நேரடி வரித் துறை வாரியம் (CBDT) கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி அறிவித்ததன்படி, வருமான வரி அறிக்கைகள் (ITR) மற்றும் ஆடிட் அறிக்கைகள் தாக்கல் செய்யப்படும் கடைசி தேதி டிசம்பர் 10, 2025 என நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், அக்டோபர் 31 என்று இருந்த கடைசி தேதிக்கு பதிலாக, இன்று ஒரு மாத கால அவகாசம் கிடைத்துள்ளது.
வரி செலுத்துவோர்
இந்த முடிவு, வரி செலுத்துவோர் மற்றும் கணக்காய்வாளர்கள் எதிர்கொண்ட தொழில்நுட்ப சிக்கல்கள், கால அவகாச கோரிக்கைகள் போன்றவற்றை கருத்தில் கொள்ள வேண்டும் என்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலில் ஆடிட் அறிக்கை தாக்கல் கடைசி தேதி செப்டம்பர் 30 அன்று இருந்தது. பின்னர் அது அக்டோபர் 31 என நீட்டிக்கப்பட்டது. இப்போது மீண்டும் நிவாரணமாக டிசம்பர் 10, 2025 வரை நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் வரி தாக்கல் தாமதமானாலும் அபராதம் இல்லாமல் சமர்ப்பிக்கலாம்.
யார் ஆடிட் செய்ய வேண்டியது?
வர்த்தக நிறுவனங்கள் அல்லது வருவாய் ரூ.1 கோடியை (ரூ.10 கோடி வரை, ஆனால் பண பரிவர்த்தனை 5% குறைவாக இருந்தால்) மீறினால் அவை கட்டாயம் ஆடிட் செய்யப்பட வேண்டும். மேலும், மருத்துவர், வழக்கறிஞர் போன்ற தொழில்முறை நபர்களின் வருமானம் ரூ.50 லட்சத்தை மீறினால் அவர்களும் ஆடிட் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் வேண்டும்.
ஆடிட் அறிக்கை தாக்கல்
ஆடிட் அறிக்கை தாக்கல் செய்யாதவர்களுக்கு வருமான வரி சட்டம் பிரிவு 271B கீழ் அபராதம் விதிக்கப்படும். இது மொத்த விற்பனை மதிப்பின் 0.5% வரை, அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை இருக்கலாம். ஆனால் தாமதத்திற்கு நியாயமான காரணம் இருந்தால், உதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை அல்லது அவசரநிலை போன்றவை, அபராதம் ரத்து செய்யப்படும்.
வரி அறிக்கை தாக்கல் விதிகள்
இந்த நீட்டிப்பு முடிவு, குஜராத், பஞ்சாப்-ஹரியானா, மற்றும் ஹிமாச்சல பிரதேச உயர்நீதிமன்றங்களின் வழிகாட்டுதலின் பேரில் எடுக்கப்பட்டது. நீதிமன்றங்கள், ஆடிட் அறிக்கைக்கும் ITR தாக்கலுக்கும் குறைந்தது ஒரு மாத இடைவெளி இருக்க வேண்டும் என்று CBDT-க்கு அறிவுறுத்தியதால், வரித்துறை இந்த அவகாசத்தை வழங்கியுள்ளது.