சேமிப்புனா வாழ்க்கையை விட்டுக்கொடுக்கணும்னு இல்ல. சம்பளம் வந்ததும் தானியங்கி முறையில் தனி சேமிப்பு கணக்கிற்கு மாத்திடுங்க. அத்தியாவசிய செலவுகள் (50%), விருப்ப செலவுகள் (30%) போக மீதி 20% சேமிக்கலாம்.
சேமிப்புனா நமக்குப் பிடிச்சதை விட்டுக்கொடுக்கணும்னு தோணும். வார இறுதி காபி, நெட்ஃபிளிக்ஸ், எல்லாம் வேணாம்னு சொல்லணும்னு நினைப்போம். ஆனா, சேமிப்புனா அதுவல்ல. சில ஸ்மார்ட் வழிகள்ல வாழ்க்கை முறையை மாத்தாம சேமிக்கலாம். எப்படின்னு இங்க பாருங்க.
முதல்ல உங்களுக்குச் சம்பளம் கொடுங்க
சம்பளத்தை ஒரு கேக்னு நினைச்சுக்கோங்க. வாடகை, மளிகைச் சாமான்கள், பில்களுக்குக் கொடுக்குறதுக்கு முன்னாடி, சேமிப்புக்காக ஒரு துண்டு எடுத்து வெச்சுடுங்க. சம்பளம் வந்ததும் தானியங்கி முறையில் மாத்திடுங்க. அப்பதான் மிஸ் பண்ண மாட்டீங்க.
இரண்டு கணக்குகள் வெச்சுக்கோங்க
ஒரு கணக்கு செலவுக்கு. இன்னொன்னு சேமிப்புக்கு. அவ்வளவுதான். தனித்தனியா வெச்சா சேமிப்பை வேற எதுக்குமா செலவு பண்ண மாட்டீங்க.
50-30-20 ஃபார்முலாவைப் பயன்படுத்துங்க
இதுதான் மேஜிக் கணக்கு:
- 50% அத்தியாவசிய செலவுகளுக்கு (பில்கள், வாடகை, மளிகை)
- 30% பொழுதுபோக்குக்கு (சாப்பாடு, ஷாப்பிங், சினிமா)
- 20% சேமிப்பு மற்றும் முதலீடுகளுக்கு
- குற்ற உணர்ச்சி இல்லாம சமநிலை.
தாமதக் கட்டணங்களைத் தவிர்க்கவும்
தாமதக் கட்டணம்னா எதுவுமே இல்லாம பணம் கட்டுற மாதிரி. பில்லுக்கான தேதியை மறந்துட்டா கூடுதல் பணம் கட்ட வேண்டியிருக்கும். அதனால தானியங்கி முறையில் பில்லுக்கான பணத்தை செலுத்துங்க.
'சின்ன லீக்குகளை' கவனிங்க
பெரிய செலவுகள் மட்டும்தான் பணப்பையை காலி பண்ணாது. சின்னச் சின்ன செலவுகளும்தான். பயன்படுத்தாத ஆப் சந்தா, மீதமான சாப்பாடு இருக்கும்போது உணவு டெலிவரி. இதையெல்லாம் கவனிச்சு சரி பண்ணுங்க.
பணியிட சலுகைகளைப் பயன்படுத்துங்க
இலவச ஜிம்? மருத்துவக் காப்பீடு? உணவு கூப்பன்கள்? இதெல்லாம் உங்க சம்பளத்தோட ஒரு பகுதிதான். அதைப் பயன்படுத்துங்க! நீங்க பயன்படுத்திக்கிற ஒவ்வொரு சலுகையும் நீங்க வேற எங்கயும் செலவு பண்ண வேண்டிய பணம் இல்ல.
கிரெடிட் கார்டு விளையாட்டை (பாதுகாப்பாக) விளையாடுங்க
ஒவ்வொரு மாதமும் உங்க கார்டை முழுமையா செலுத்த முடியும்னா, கேஷ்பேக் அல்லது வெகுமதிகள் உள்ள கார்டைப் பயன்படுத்துங்க. நீங்க ஏற்கனவே செலவு பண்றீங்க. அதனால புள்ளிகள், தள்ளுபடிகள் அல்லது இலவசங்களபெறுங்க.
ரவுண்ட்-அப் சேமிப்பை முயற்சி செய்யுங்க
நிறைய பேங்க் ஆப்கள் உங்க கொள்முதல்களை ரவுண்ட் அப் பண்ணி மீதி சில்லறையை சேமிப்புல போட்டுடும். ₹92க்கு காபி வாங்குனா? ₹8 சேமிப்புக்குப் போயிடும்.
உங்க சம்பள ஸ்லிப்பைச் சரிபார்க்கவும்
சில நேரங்கள்ல உங்க சம்பளத்துல இருந்து தேவையில்லாத பிடித்தங்கள் இருக்கும். உதாரணமா, பழைய காப்பீட்டுத் திட்டங்கள். அவ்வப்போது சரிபார்த்து சுத்தம் பண்ணுங்க.
உங்க பணத்தை வேலை செய்ய விடுங்க
சேமிப்புக் கணக்கு நல்லதுதான். ஆனா, அது உங்க பணத்தை அதிகமா பெருக்காது. அதனால கொஞ்சம் பணத்தை ஃபிக்ஸட் டெபாசிட் அல்லது மியூச்சுவல் ஃபண்ட்ஸ்ல முதலீடு பண்ணுங்க. அப்பதான் உங்க பணம் பெருகும்.
