வருமான வரி தாக்கல்: தவறு செய்தால் எவ்ளோ Fine தெரியுமா?! இதில் இவ்ளோ விஷயம் இருக்கா?!
வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வதில் ஏற்படும் சிறு தவறுகள்கூட அபராதம் விதிக்கப்படுவதற்கும், வரித் தொகை தாமதமாகக் கிடைப்பதற்கும் காரணமாக அமையும். சரியான படிவத்தைத் தேர்வு செய்வது, தேவையான ஆவணங்களைத் தயார் நிலையில் வைத்திருப்பது முக்கியமானவை.

கவனம் மிக அவசியம்
வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வது பெரும்பாலானோருக்கும் தவிர்க்க முடியாத கடமையாக உள்ளது. இதில் சிறு தவறு ஏற்பட்டால் அபராதம் விதிக்கப்படும், மீண்டும் வரவேண்டிய தொகையும் தாமதமாக கிடைக்கும். இதனால் ஆரம்பத்திலேயே சரியான படிவத்தை தேர்வு செய்வது மிக முக்கியம். படிவத்தை மாற்றி தேர்வு செய்தால் கூட அபராதம் செலுத்த நேரிடும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
படிவங்களின் வகைகள்
உங்களுக்கு ஏற்ற படிவத்தைப் பயன்படுத்தி தாக்கல் செய்ய வேண்டும். தவறான படிவம் தாக்கல் செய்தால் குறைபாடுள்ள கணக்காக (Defective Return) கருதப்படலாம்.
- ஐ.டி.ஆர்–1 (சஹஜ்) – ஒரே சம்பள வருமானம் கொண்டோருக்கு உரியது. வருமானம் ரூ.50 லட்சத்துக்குள் இருந்தால் இதையே பயன்படுத்தலாம்.
- ஐ.டி.ஆர்–2 – பங்கு, சொத்து முதலீடு, வெளியூரில் சொத்து வைத்துள்ளவர்களுக்கு.
- ஐ.டி.ஆர்–3 – வணிகம் அல்லது தொழில் மூலம் வருமானம் ஈட்டுபவர்கள்.
- ஐ.டி.ஆர்–4 – அனுமான வருமான அடிப்படையில் கணக்கு தாக்குபவர்கள் (Sugam).
- ஐ.டி.ஆர்–5, 6, 7 – கூட்டு நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள்.
பழைய மற்றும் புதிய வரி முறை
வரிச் சலுகைகள் குறைவாக இருந்தால் புதிய வரி முறை லாபத்தை அள்ளித்தரும். சலுகைகள் அதிகமாக இருந்தால் பழைய முறை சிறந்தது. சம்பளதாரர்கள் எந்த முறைக்கும் எப்போதும் மாறலாம். ஆனால் வணிக வருமானம் கொண்டவர்கள் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே மாற்றம்செய்ய முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
முக்கிய ஆவணங்கள் கண்டிப்பாக தேவை
- 26AS கணக்கெழுத்து மற்றும் ஆண்டு தகவல் அறிக்கை (AIS) சரிபார்க்க வேண்டும்.
- சம்பளதாரர்கள் Form 16 வைத்திருக்க வேண்டும்.
- வீட்டுக் கடன் வட்டி, பங்கு விற்பனை வருமானம் உள்ளிட்ட ஆதாரங்கள் தயாராக இருக்க வேண்டும்.தெ
- வங்கி கணக்கு, டிவிடெண்ட் வருமானம் போன்ற விவரங்களை முறையாக பதிவு செய்ய வேண்டும்.
இ-வெரிஃபிகேஷன் கட்டாயம்
வரிக் கணக்குத் தாக்கல் செய்ததும் 30 நாட்களுக்குள் ஆதார், வங்கிக் கணக்கு அல்லது டிமாட் கணக்கின் மூலம் இ-வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும். இல்லையென்றால், வருமானவரி தாக்கல் செல்லாது எனக் கருதப்படும். அதற்கு பதிலாக ITR-V படிவத்தை பிரிண்ட் எடுத்து கையெழுத்திட்டு, பெங்களூருவுக்கு தபால் அனுப்பலாம்.
கட்டாயமாக கவனிக்க வேண்டியவை
- சரியான படிவம் தேர்வு செய்யவும்.
- அனைத்துவித ஆதாரங்கள் தயாராக வைத்துக்கொள்ளவும்.
- 26AS மற்றும் AIS சரிபார்க்கவும்.
- இ-வெரிஃபிகேஷன் முறையை புறக்கணிக்க வேண்டாம்.
- பழைய, புதிய வரி முறையை நிதானமாக ஆராய்ந்து முடிவு எடுக்கவும்.
எந்த தவறும் அபராதத்திற்கு வழிவகுக்கும்
படிவத்தை தவறாகத் தாக்கல் செய்தால் அபராதம் மட்டுமல்ல, வரி திரும்பவந்தல் தாமதம் ஆகும். அதனால், மிகப்பெரிய கவனத்துடன் செயல் பட வேண்டும்.
கடைசி தேதிக்குப் பிறகு தாக்கல் செய்தால்
- ரூ.5 லட்சத்துக்கு மேல் வருமானம் - ரூ.5,000 அபராதம்.
- ரூ.5 லட்சத்துக்கு குறைவான வருமானம்- ரூ.1,000 அபராதம்.
- வரிச் தொகையை தாமதமாக செலுத்தினால்
- வரி தொகைக்கு ஆண்டு வட்டி (Interest) விதிக்கப்படும்.
- Sec.234A, 234B, 234C பிரிவுகளின் கீழ் 1% மாத வட்டி.
- தவறான தகவல்கள் (Income, Deduction, Bank details) வழங்கினால்
- வரிக்கு 50% அபராதம் (தவறான கணக்கீடு என்றால்).
- 100%-200% அபராதம் (திட்டமிட்டு தவறு செய்தால்).
படிவம் (Form) தவறாக தேர்வு செய்தால்
- Defective Return எனக் கருதப்படும்.
- வருமான வரி துறை நோட்டீஸ் அனுப்பும்.
- 15 நாட்களில் திருத்தாதால் தாக்கல் செல்லாது எனக் கருதப்படும்.
- TDS Details சரிபார்க்காமல் தாக்கல் செய்தால்
- Refund தாமதம் ஆகும்.
- கணக்கில் அதிக வரி (Excess Tax) பிடிக்கப்படும்.
- திருத்தக்கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய சூழல்
Books of Accounts பராமரிக்காமல் தாக்கல் செய்தால்
- வணிகர்கள் / தொழில்முனைவோர்
- Books of Accounts இல்லை என்றால் ரூ.25,000 அபராதம்.
- Books பராமரிக்காமல் Audit தவிர்த்தால் மேலும் ரூ.1 லட்சம் அபராதம்.
- Audit Report தாக்கல் தாமதம் செய்தால்
- ரூ.1.5 லட்சம் வரை அபராதம்.
- குறைவான தொகை: Audit Report தாக்கல் தாமதம் கால அளவுக்கு ஏற்ப வருமானத்தின் 0.5%.
முக்கியமாக நினைவில் வைக்கவும்:
எந்த தவறும் இழப்பை மட்டும் தரும் – மேலும் வருமான வரித் துறை கண்காணிப்பு, நோட்டீஸ் அனுப்பும்.தாக்கல் தாமதம் மற்றும் தவறுகள் வரிச் சலுகைகளை இழப்பதற்கு காரணமாகும்.Refund தாமதம், வட்டி, அபராதம் சேர்ந்து போதுமான பிழைகளை ஏற்படுத்தும்.
சரியாக பின்பற்ற வேண்டியவை
- சரியான படிவம் தேர்வு செய்யவும்.
- 26AS மற்றும் AIS சரிபார்க்கவும்.
- கடைசி தேதிக்கு முன்னர் தாக்கல் செய்யவும்.
- இ-வெரிஃபிகேஷன் செய்வதை மறக்க வேண்டாம்.
- தேவையான டாக்குமெண்ட்களை தயார் வைத்துக் கொள்ளவும்.