- Home
- Business
- மினிமம் பேலன்ஸ் ரூ.50,000.! அதிர்ச்சி கொடுத்த ஐசிஐசிஐ வங்கி.! மயக்கம் போட்டு விழுந்த வாடிக்கையாளர்கள்.!காரணம் என்ன தெரியுமா.?!
மினிமம் பேலன்ஸ் ரூ.50,000.! அதிர்ச்சி கொடுத்த ஐசிஐசிஐ வங்கி.! மயக்கம் போட்டு விழுந்த வாடிக்கையாளர்கள்.!காரணம் என்ன தெரியுமா.?!
ஐசிஐசிஐ வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கான மாத சராசரி குறைந்தபட்ச இருப்பை அதிகரித்துள்ளது. பெருநகரங்களில் ₹50,000, நகர்ப்புறங்களில் ₹25,000, கிராமப்புறங்களில் ₹10,000 என உயர்த்தப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மினிமம் பேலன்ஸ் கட்டாய உயர்வு
ஐசிஐசிஐ வங்கி, தனது சேமிப்பு கணக்குகளுக்கான மாத சராசரி குறைந்தபட்ச இருப்புத்தொகையை பெரிதாக உயர்த்தியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மினிமம் பேலன்ஸ் பல மடங்கு உயர்வு.!
பெருநகரம் மற்றும் மெட்ரோ பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்கள் இதுவரை பராமரித்து வந்த ரூ.10,000-க்கு பதிலாக, இனி ரூ.50,000 வைத்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. நகர்ப்புறங்களில் ரூ.5,000 இருந்த குறைந்தபட்ச இருப்பு ரூ.25,000 ஆகவும், கிராமப்புறங்களில் ரு.2,500 இருந்தது ரு.10,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், உள்நாட்டு வங்கிகளில் மிக உயர்ந்த மினிமம் பேலன்ஸ் விதிமுறையை கொண்ட வங்கியாக ஐசிஐசிஐ மாறியுள்ளது.
மற்ற வங்கிகளின் நிலை
மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும் போது, எஸ்பிஐ 2020 முதல் குறைந்தபட்ச இருப்பு நிபந்தனையை நீக்கியுள்ளது. எச்டிஎஃப்சி வங்கி மெட்ரோவில் ரூ.10,000, அரைநகர்ப்புறங்களில் ரூ.5,000, கிராமப்புறங்களில் ரூ.2,500 என்ற அளவில் வைத்துள்ளது. பெரும்பாலான வங்கிகள் ரூ.2,000 முதல் ரூ.10,000 வரை மட்டுமே மினிமம் பேலன்ஸை நிர்ணயித்துள்ளன.
ஏன் இந்த மாற்றம்?
வங்கியின் தினசரி செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு செலவுகளை ஈடுசெய்யும் நோக்கில் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட இருப்பை பராமரிக்காதால், ஆகஸ்ட் 1 முதல் அபராதக் கட்டணம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வட்டி விகித குறைப்பு
இரட்டை தாக்கம் ஏப்ரல் 16, 2025 முதல் சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதமும் குறைக்கப்பட்டது. ரூ.50 லட்சம் வரை 2.75% மற்றும் ரூ.50 லட்சத்திற்கு மேல் 3.25% வட்டி மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால், வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் வருமானம் குறையக்கூடும்.
வாடிக்கையாளர்களின் எதிர்வினை
மினிமம் பேலன்ஸ் உயர்வு மற்றும் வட்டி விகித குறைப்பு ஆகிய இரண்டுமே ஒரே நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது. இதனால், பல்வேறு தரப்பினர் வங்கி கணக்குகளை மறுபரிசீலனை செய்யும் நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.