உஷார்!.. உடனே செஞ்சுருங்க! இல்லைனா உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும்
வங்கி வாடிக்கையாளர்கள் இதனை செய்யவில்லை என்றால், உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும் மற்றும் அரசு உதவித் தொகைகள் தடைப்படும்.

வங்கி கணக்கு முடக்கம்
தற்போது வங்கி வாடிக்கையாளர்கள் இதனை செய்யாவிட்டால் அவர்களது வங்கி கணக்கு முடக்கப்படும். பணம் வருவதும் செல்லுவதும் இயலாது. அரசுத் திட்டங்களின் தொகை உதாரணத்திற்கு பிஎம் கிசான், விவசாய சலுகைகள், பென்ஷன் போன்றவை அனைத்தும் தடைப்படும். ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் பரிவர்த்தனை தோல்வியடையும்.
ரீ-கேஒய்சி ஆவணங்கள் பட்டியல்
வங்கிக்குச் செல்ல நேரமில்லை என்று கவலைப்பட வேண்டாம். ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரை, ஒவ்வொரு ஊராட்சியிலும் மறு-கேஒய்சி சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. உங்கள் கிராமத்திற்கு அருகிலேயே முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு சென்று, வங்கி ஊழியர்கள் உதவியுடன் ரீ-கேஒய்சி (Re-KYC) செய்து கொள்ளலாம்.
ஜன் தன் கணக்கு முடக்கம்
ஆதார், பான், வாகன ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், வேலைவாய்ப்பு அட்டை உள்ளிட்ட ஆவணங்களில் ஒன்று. 2 பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்களை எடுத்துச் செல்லவும். முகவரி அல்லது கைபேசி எண் மாறியிருந்தால், அதையும் புதுப்பிக்கவும்.
ஜன் தன் கணக்காளர்கள்
10 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட பிரதமர் ஜன் தன் திட்டத்தின் காரணமாக, கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு வங்கிக் கணக்கு கிடைத்தது. அரசு நிதி உதவிகள் நேரடியாக இந்தக் கணக்குகளில் வர ஆரம்பித்தன. இப்போது இந்த திட்டம் 10 ஆண்டுகளை கடந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் விதிகளின் கீழ், இக் கணக்குகளுக்கான ரீ-கேஒய்சி கட்டாயம் ஆகிவிட்டது.
ஜன் தன் முகாம்கள் விவரம்
ரீ-கேஒய்சி என்பது உங்கள் அடையாளத்தை மீண்டும் உறுதி செய்வது. ஆதார், பான் போன்ற அடையாள ஆவணங்களை நீங்கள் வங்கியில் சமர்ப்பித்திருந்தாலும், பத்து ஆண்டுகளுக்குப் பிறகு வங்கி அதை மீண்டும் சரிபார்க்க வேண்டும். இது, உங்கள் முகவரி, கைபேசி எண் போன்றவை தற்போது நிலைபேறாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்தும்.