- Home
- Business
- இனி UPI பின்கோடு தேவையில்லை.. Face ID, Fingerprint மூலமாக பணத்தை அனுப்பலாம்.. விரைவில் வருது!
இனி UPI பின்கோடு தேவையில்லை.. Face ID, Fingerprint மூலமாக பணத்தை அனுப்பலாம்.. விரைவில் வருது!
யுபிஐ பரிவர்த்தனைகளில் பின்கோடுக்கு பதிலாக பயோமெட்ரிக் அங்கீகார முறையை NPCI அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. முகம் அல்லது விரல் அங்கீகாரம் மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.

பின்கோடு இல்லாமல் யுபிஐ
கூடிய சீக்கிரத்தில் யுபிஐ (UPI) பணப்பரிவர்த்தனைகள் மேலும் எளிமையாக மாறப்போகின்றன. நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI), யூபிஐ பரிவர்த்தனைகளில் பின்கோடு (PIN) தேவைப்படாமல், முகம் மற்றும் விரல் அங்கங்களை கொண்டு பயோமெட்ரிக் அடையாளச் சரிபார்ப்பு முறையை கொண்டுவர திட்டமிட்டுள்ளது என பிசினஸ் ஸ்டாண்டர்டு செய்தி வெளியிட்டுள்ளது. இது வந்துவிட்டால், உங்கள் முகத்தை ஸ்கேன் செய்வது அல்லது பிங்கர் பிரிண்ட் போதும். எந்தவொரு பின்கோடும் தேவைப்படாது.
யுபிஐ புதிய விதிமுறைகள்
தற்போது யுபிஐ பரிவர்த்தனைகள் 4 முதல் 6 இலக்க பின்கோடின் மூலம் மட்டுமே செயல்படுத்த முடியும். இது பாதுகாப்பான முறையாக இருந்தாலும், பலருக்கு குறிப்பாக மூத்த குடிமக்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு – ஒரு தடையாக உள்ளது. ஆனால், பயோமெட்ரிக் முறையில் அந்த தடைகள் மறையும். உங்கள் உடல் அடையாளங்களின் அடிப்படையில் (முக அடையாளம் / கைரேகை), பரிவர்த்தனைகள் சுலபமாகவும், பாதுகாப்பாகவும் செய்யலாம்.
யுபிஐ விரல் அடையாளம்
இந்த புதிய முயற்சி, யாருக்கெல்லாம் ஸ்மார்ட்போனில் பின்கோடு நினைவில் வைப்பதில் சிரமம் இருந்தாலும், அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். பிளூட்டஸ் ஓன் நிறுவனர் ரோகித் மஹாஜன், இது மோசடியை குறைக்க உதவும் எனக் குறிப்பிடுகிறார். இது தற்போது ஆலோசனையின் நிலைக்கே உள்ளது.
புதிய மாற்றங்கள்
NPCI இதனை செயல்படுத்த விரும்பினாலும், பயனர் அனுமதி மற்றும் தரவுப் பாதுகாப்பு குறித்து பல கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும். இந்த புதிய முறை எப்படி அறிமுகப்படுத்தப்படுகிறது என்ற பல கேள்விகள் தற்போது உள்ளது. இதற்கிடையில், ஆகஸ்ட் 1 முதல் சில புதிய யுபிஐ விதிமுறைகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஒவ்வொரு யுபிஐ பயன்பாட்டிலும், ஒரு நாள் மொத்தம் 50 முறை மட்டுமே வங்கிக் கணக்கு இருப்புப் பிழை பார்த்துக் கொள்ளலாம்.
டிஜிட்டல் பண பரிவர்த்தனை
அதேவேளை, ஒவ்வொரு பரிவர்த்தனையின் பின்னரும், உங்களுக்கான புதுப்பிக்கப்பட்ட இருப்புப் பிழை தானாகவே காணப்படும். மேலும், மாத வருமானம் / சந்தா போன்ற தானாகக் கழிக்கப்படும் (தானாகப் பற்று) பணப்பரிவர்த்தனைகள், இனிமேல் காலை 10 மணிக்கு முன் இரவு 9.30 மணிக்கு மட்டுமே செயல்படுத்தப்படும்.