MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • D-Mart-ல் உங்க பொருளை விற்கணுமா? மாதா மாதம் லட்சக்கணக்கில் லாபம் பார்க்க சூப்பர் வாய்ப்பு!

D-Mart-ல் உங்க பொருளை விற்கணுமா? மாதா மாதம் லட்சக்கணக்கில் லாபம் பார்க்க சூப்பர் வாய்ப்பு!

D-Mart-ல் உங்கள் பொருட்களை விற்று மாதம் லட்சங்களில் லாபம் சம்பாதிக்க ஆசையா? D-Mart சப்ளையர் ஆவது எப்படி, தகுதிகள், ஆவணங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்து பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Jul 23 2026, 02:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
D Mart ல் உங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்வது எப்படி?
Image Credit : AI

D-Mart-ல் உங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்வது எப்படி?

D-Mart நிறுவனத்தில் எப்போதும் மற்ற கடைகளை விட விலை குறைவாக இருக்கும். அங்கு இல்லாத பொருட்களே இல்லை. நமது பொருளையும் அங்கு விற்பனை செய்ய வேண்டும் என்று பலருக்கும் ஆசை இருக்கும். ஆனால் அதற்கு என்ன செய்வது என்றுதான் தெரியாது. அதற்கான வழிமுறை இதோ:

D-Mart-ல் வாய்ப்பு

D-Mart-ல் நீங்கள் உங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்யலாம். ஆனால் முதலில் ஒரு விஷயத்தை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். D-Mart யாருக்கும் பிரான்சைஸ் வழங்குவது இல்லை. அதாவது, நீங்கள் உங்கள் ஊரில் D-Mart கடையைத் திறக்க முடியாது. ஆனால், உங்கள் தயாரிப்புகளை D-Mart-க்கு விநியோகம் செய்யும் ஒரு வெண்டர் (Vendor) அல்லது சப்ளையராக மாறலாம்.

இதையும் படிங்க: D-Mart Shopping: டி-மார்ட் போறீங்களா? இந்த 'ஸ்மார்ட் ட்ரிக்ஸ்' தெரிஞ்சா நிறைய பணம் மிச்சப்படுத்தலாம்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
என்ன தகுதிகள் இருக்க வேண்டும்?
Image Credit : instagram

என்ன தகுதிகள் இருக்க வேண்டும்?

உங்கள் பொருளை D-Mart வாங்குவதற்கு முன்பாக சில விஷயங்களைச் சரிபார்ப்பார்கள்.

தரம்: உங்கள் பொருளின் தரம் நன்றாக இருக்க வேண்டும்.

விலை: விலை மற்றவர்களுடன் போட்டி போடும் வகையில் இருக்க வேண்டும்.

பேக்கிங்: பேக்கிங் பார்ப்பதற்குக் கவர்ச்சியாக இருக்க வேண்டும்.

தொடர் விநியோகம்: முக்கியமாக, அவர்கள் கேட்கும் போதெல்லாம் தட்டுப்பாடு இல்லாமல் பொருளைச் சப்ளை செய்யும் திறன் இருக்க வேண்டும்.

இதையும் படிங்கபெங்களூரு, மும்பை, சென்னை இல்லை! இந்தியாவின் 'நம்பர் 1' பணக்கார மாவட்டம் எது தெரியுமா?

Related Articles

Related image1
DMart Offers: டிமார்ட் சீக்ரெட் ட்ரிக்: எந்த நாள்ல ஷாப்பிங் செஞ்சா அதிக தள்ளுபடி கிடைக்கும்?
Related image2
World's Longest Train: 7 கி.மீ நீளம்.. 8 என்ஜின்கள்.. 682 பெட்டிகள்! உலகின் மிக நீளமான ரயில்! எங்க ஓடுது?
35
என்னென்ன ஆவணங்கள் தேவை?
Image Credit : Social Media

என்னென்ன ஆவணங்கள் தேவை?

உங்கள் பொருள் என்ன வகையைச் சேர்ந்தது என்பதைப் பொறுத்து சில ஆவணங்கள் தேவைப்படும்.

GST மற்றும் PAN எண்கள் கண்டிப்பாகத் தேவை.

உணவுப் பொருளாக இருந்தால் FSSAI உரிமம் அவசியம்.

சில பொருட்களுக்கு BIS போன்ற அரசுச் சான்றிதழ்களும் தேவைப்படலாம்.

45
எவ்வளவு பணம் தேவைப்படும்?
Image Credit : Social Media

எவ்வளவு பணம் தேவைப்படும்?

சப்ளையர் ஆவதற்குத் தனியாக பிரான்சைஸ் கட்டணம் எதுவும் கிடையாது. ஆனால், பொருளைத் தயாரிக்க, பேக்கிங் செய்ய, கையிருப்பு (Stock) வைக்க, போக்குவரத்து செய்ய, சரியான நேரத்தில் டெலிவரி செய்ய என்று பார்த்தால், கையில் ஓரளவிற்கு முதலீடு இருக்க வேண்டும். சில சமயங்களில், பொருளை ஷெல்ப்பில் (Shelf) வைப்பதற்குத் தனியாகக் கட்டணம் கூட இருக்கலாம்.

மாதம் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

D-Mart-ல் உங்கள் பொருளை விற்பனை செய்வதன் மூலமாக எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று துல்லியமாகச் சொல்ல முடியாது. அது உங்கள் பொருளின் தரம், அதற்கு இருக்கும் தேவை (Demand), விற்பனை அளவு, உங்கள் செலவு, D-Mart நிறுவனத்துடன் நீங்கள் போடும் ஒப்பந்தம் ஆகியவற்றைப்பொறுத்து மாறும்.

55
D-Mart சப்ளையர் ஆவதற்கு விண்ணப்பிப்பது எப்படி?
Image Credit : Social Media

D-Mart சப்ளையர் ஆவதற்கு விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பிக்கும் முறை: D-Mart-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (Avenue Supermarts Ltd - Partner With Us) சென்று 'Vendor Registration' படிவத்தைப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். நேரடி அலுவலக அணுகுமுறையை விட இதுவே சரியான வழியாகும்.

MSME / Udyam பதிவு: நீங்கள் சிறு அல்லது குறுந்தொழில் நிறுவனமாக இருந்தால், மத்திய அரசின் Udyam / MSME சான்றிதழ் வைத்திருப்பது முன்னுரிமை பெறவும் வணிகப் பாதுகாப்பிற்கும் உதவும்.

கடைப்பணம் அளிக்கும் காலம்: D-Mart வழக்கமாகப் பொருட்களைப் பெற்றுக் கொண்ட பிறகு 30 முதல் 60 நாட்களுக்குள் பணப் பரிவர்த்தனையைச் செய்யும். இதற்கான சுழற்சி நிதி உங்களிடம் இருக்க வேண்டும்.

பொருட்களைத் திருப்பி அனுப்புதல்: விற்பனையாகாத அல்லது சேதமடைந்த பொருட்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும் (RTV - Return to Vendor) நிபந்தனைகளுக்கு நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.

பார்கோடு (Barcode): உங்கள் தயாரிப்புகள் ஒவ்வொன்றிலும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட GS1 Barcode கட்டாயம் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.

உங்கள் பொருளின் தரம் மிகச் சிறப்பாக இருந்து, அனைத்து ஆவணங்களும் சரியாக வைத்திருந்து, கேட்கும் போது சப்ளை செய்யும் திறன் இருந்தால், D-Mart போன்ற பெரிய அங்காடியில் உங்கள் பொருளுக்கு நிச்சயம் இடம் கிடைக்கும். எனவே, முதலில் உங்கள் பிராண்டைச் சரியாக உருவாக்குவதில் கவனம் செலுத்துங்கள்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வணிக யோசனை
வணிகம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Ration Card Update: ரேஷன் கார்டு வச்சிருக்கீங்களா? இந்த வேலையை உடனே முடியுங்க... இல்லைனா பொருட்கள் கிடைக்காது!
Recommended image2
Green Chilli Price : 100 கிராம் மிளகாய் 400 ரூபாயா? பாவம் இந்த மக்கள்! வைரலாகும் வீடியோ!
Recommended image3
Business Idea: மாசம் 1 லட்சம் சம்பாதிக்கலாம்! இந்த டிரெண்டிங் பிசினஸ் ஐடியா பற்றி தெரியுமா?
Related Stories
Recommended image1
DMart Offers: டிமார்ட் சீக்ரெட் ட்ரிக்: எந்த நாள்ல ஷாப்பிங் செஞ்சா அதிக தள்ளுபடி கிடைக்கும்?
Recommended image2
World's Longest Train: 7 கி.மீ நீளம்.. 8 என்ஜின்கள்.. 682 பெட்டிகள்! உலகின் மிக நீளமான ரயில்! எங்க ஓடுது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved