MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • D-Mart Shopping: டி-மார்ட் போறீங்களா? இந்த 'ஸ்மார்ட் ட்ரிக்ஸ்' தெரிஞ்சா நிறைய பணம் மிச்சப்படுத்தலாம்!

D-Mart Shopping: டி-மார்ட் போறீங்களா? இந்த 'ஸ்மார்ட் ட்ரிக்ஸ்' தெரிஞ்சா நிறைய பணம் மிச்சப்படுத்தலாம்!

D-Mart Shopping: டி-மார்ட்-ல் மளிகை சாமான் விலை கம்மினு ஒரே கூட்டமா இருக்கு. ஆனா, சில சிம்பிள் டிப்ஸ் ஃபாலோ பண்ணா, உங்க நேரத்தையும் பணத்தையும் ஈஸியா மிச்சப்படுத்தலாம் தெரியுமா?

2 Min read
Author : Rayar A
| Updated : Jul 21 2026, 06:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
D Mart Shopping
Image Credit : Gemini AI

D-Mart Shopping

மாச சம்பளம் வந்ததும் முதல் 10 நாள் D-Mart-ல் பயங்கர கூட்டம் இருக்கும். பில்லிங் கவுன்ட்டர்ல ரொம்ப நேரம் நிக்கணும். அதனால, ஒவ்வொரு மாசமும் 10-ம் தேதில இருந்து 25-ம் தேதிக்குள்ள ஷாப்பிங் போறது பெஸ்ட். கூட்டம் கம்மியா இருக்கும், சில சமயம் புது ஆஃபர் கூட கிடைக்கும்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
டி-மார்ட்-ல் திங்கள் முதல் வியாழன் வரை ஷாப்பிங் போங்க
Image Credit : Asianet News

டி-மார்ட்-ல் திங்கள் முதல் வியாழன் வரை ஷாப்பிங் போங்க

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் D-Mart-ல் கால் வைக்கக்கூட இடம் இருக்காது. குடும்பத்தோடு வர்றவங்களால தள்ளுவண்டி எடுக்கறதுல இருந்து பில்லிங் வரைக்கும் ஒரே தள்ளுமுள்ளுதான். அதனால, முடிஞ்சா திங்கள் முதல் வியாழன் வரை ஷாப்பிங் போங்க. நிம்மதியா பொருட்களைப் பார்த்து வாங்கலாம்.

நிறைய பேர் வேலை முடிஞ்சு சாயங்காலம்தான் D-Mart-க்கு வராங்க. இதனால க்யூ நீளமா இருக்கும். அதுக்கு பதிலா, காலையில ஷாப்பிங் போனா கூட்டம் கம்மியா இருக்கும். பில்லிங்ல நிற்காம, வேலையை சீக்கிரம் முடிச்சுட்டு வீட்டுக்குக் கிளம்பலாம்.

35
தேவையில்லாத செலவு குறையும்
Image Credit : DMart

தேவையில்லாத செலவு குறையும்

D-Mart-ல நிறைய பேர் செய்யுற பெரிய தப்பு இதுதான். வாங்கப் போனதை விட்டுட்டு, ஆஃபர்ல இருக்குனு தேவையில்லாததை வாங்கி டிராலியை நிரப்பிடுவாங்க. இதைத் தவிர்க்க, வீட்டுல இருந்தே வாங்க வேண்டிய பொருட்களுக்கு ஒரு லிஸ்ட் ரெடி பண்ணுங்க. அந்த லிஸ்ட்ல இருக்குறதை மட்டும் வாங்குங்க. தேவையில்லாத செலவு குறையும்.

45
சரியான நாள், சரியான நேரத்துல போங்க
Image Credit : X

சரியான நாள், சரியான நேரத்துல போங்க

D-Mart-ல விலை கம்மினு எப்ப வேணாலும் போறதை விட, சரியான நாள், சரியான நேரத்துல, ஒரு லிஸ்ட்டோட போனா நிறைய நன்மை இருக்கு. இந்த சின்ன சின்ன டிப்ஸை ஃபாலோ பண்ணா, உங்க மாசாந்திர பட்ஜெட்ல நிச்சயம் ஒரு தொகையை மிச்சப்படுத்தலாம்.

55
டி-மார்ட் 'சொந்த பிராண்ட்' (Own Brands) பொருட்கள்
Image Credit : Google

டி-மார்ட் 'சொந்த பிராண்ட்' (Own Brands) பொருட்கள்

பிராண்ட் பொருட்கள் vs டி-மார்ட் பிராண்ட்: டி-மார்ட்டின் சொந்த பிராண்டுகளான Premia (மளிகைப் பொருட்கள்) மற்றும் DMart Homes/Unique (வீட்டு உபயோகப் பொருட்கள்) ஆகியவற்றின் தரம் முன்னணி பிராண்டுகளுக்கு இணையாக இருக்கும். பிரபல பிராண்டுகளை விட இவைகளின் விலை 10% முதல் 30% வரை குறைவாக இருக்கும். ஆகவே இவற்றை வாங்கி பணத்தை மிச்சபப்டுத்தலாம்.

'Buy 1 Get 1' மற்றும் காம்போ ஆஃபர்கள்

சோப், பேஸ்ட், ஷாம்பூ மற்றும் துணி துவைக்கும் பவுடர்களில் BOGO (Buy 1 Get 1) அல்லது பெரிய பேக் (Combo Packs) வாங்கும்போது கூடுதல் தள்ளுபடி கிடைக்கும். காலாவதியாகும் தேதியை (Expiry Date) மட்டும் பார்த்து வாங்குவது அவசியம்.

டி-மார்ட் ரெடி (DMart Ready App) பயன்படுத்துங்கள்

நேரில் சென்று வாங்கும் முன் DMart Ready செயலியில் (App) பொருட்களின் விலையை சரிபார்த்துக் கொள்ளலாம். சில சமயம் ஆப் வழியே ஆர்டர் செய்து 'Pick-up Point' மூலம் பெற்றுக் கொண்டால் கூடுதல் தள்ளுபடியும், நேரமும் மிச்சமாகும்!

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வணிகம்
ஷாப்பிங்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Saravana Stores: மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் 10 பொருட்கள்.! மூட்டை மூட்டையாய் அள்ளிக்கிட்டு போகலாம் வாங்க.!
Recommended image2
Bank Holidays Alert: செப்.26 முதல் 30 வரை 5 நாட்கள் வங்கி சேவை பாதிக்குமா? மக்களே உஷார்.!
Recommended image3
Digital Gold: டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது எப்படி? தெரிந்துகொள்ள வேண்டிய ஆபத்துகள்!
Related Stories
Recommended image1
Cheaper Than D-Mart: டி-மார்ட்டை விட குறைந்த விலை.. பெரிய தள்ளுபடி உடன் கிடைக்கும் மளிகை பொருட்கள்.. முழு விபரம்
Recommended image2
D-Mart: டி-மார்ட்டில் மட்டும் எப்படி எல்லா பொருளும் மலிவா கிடைக்குது? 'மலிவு விலை' ரகசியம் இதுதான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved