இந்த செலவுகளையெல்லாம் குறைத்தால் மாதம் ரூ.10 ஆயிரம் வரை மிச்சமாகுமா?!
யுபிஐ காலத்தில் தேவையற்ற செலவுகளைக் குறைப்பதன் மூலம் மாதம் ₹10,000 வரை சேமிக்கலாம். புதிய செல்போன்கள், ஆடைகள், காலணிகள் போன்ற தேவையற்ற செலவுகளைக் குறைத்து, லாபம் தரும் முதலீடுகளில் முதலீடு செய்யலாம்.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
செலவை குறைத்தால் வாழ்வு வளமாகும்
இப்போதெல்லாம் செலவு செய்வது என்பது ரொம்பவும் எளிதாகிவிட்டது. யுபிஐ பேமெண்ட் வந்த பிறகு கையில் காசு இல்லாமலே ஒரு ரூபாய் பொருட்களை கூட வாங்கிவிடும் சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் சில தேவையற்ற செலவுகளை குறைத்தால் மாதம் 10 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்கலாம் என்கின்றனர் பொருளாதார ஆலோசகர்கள்.
லாபம் தரும் முதலீடுகளில் முதலீடு செய்யலாம்
புதிது புதிதாக செல்போன்கள் வாங்குவது, வாராவாரம் ட்ரெஸ் எடுப்பது, காலணிகளை வாங்கி அடுக்குவது என தேவையற்ற செலவுகளை குறைத்து அதனை லாபம் தரும் முதலீடுகளில் முதலீடு செய்யலாம்.
கையை கடிக்கும் மார்டன் பைக்
இருசக்கர வாகனத்தை வைத்திருப்போர் அதனை அடிக்கடி மார்டனாக மாற்றுவது, பெயிண்டிங் செய்வது என ஆயிரக்கணக்கில் செலவு செய்து வருகின்றனர். இதனை தவிர்த்தால், சில ஆயிரங்கள் மிச்சமாகும்.
பணத்தை மிச்சப்படுத்தி தரும் "நடராஜா சர்வீஸ்"
நடந்து போகக்கூடிய தூரமே இருக்கும் காய்கறிக் கடைக்கு பைக்கில் போவதையும், பஸ்ஸில் போவதற்கான சூழல் இருந்தும் ஆட்டோ, கால்டாக்ஸி யில் போவதையும் தவிர்க்கலாம். அதேபோல் சைக்கிளை பயன்படுத்தினால் பெட்ரோல் செலவு குறைக்கும்.
ஜாலியான செலவு காலியாகும் பர்ஸ்சு
கைநிறைய சம்பளம் வாங்கும் இளைஞர்கள், ஒன்றாம் தேதியானால் ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுவது ஜாலியாக தேவையற்ற ஷாப்பிங் செய்வது என ஒரு பெரிய தொகையை செலவு செய்கின்றனர். தற்போதைய சர்வேபடி, ஐடியில் பணியாற்றும் 40 சதவீதம் பேர் இதனை செய்வதாக கூறப்படுகிறது. இது போன்ற செலவுகளை குறைத்தால் ஒரு பெரிய தொகையை சேமிக்கலாம்.
ஆபர்களை பார்த்து ஆசைப்பட வேண்டாம்
ஆபர்கள் என்ற பெயரில் தினமும் செல்போனுக்கு வரும் தகவல்களை பார்த்து தேவையில்லாத பொருட்களை வாங்கி குவிக்க வேண்டாம். இ-காமர்ஸ் நிறுவனங்கள் தரும் ஆஃபர்களைப் பார்த்துவிட்டு தேவை யில்லாதப் பொருட்களை வாங்கிக் குவிக்கிறார்கள் சிலர். 50 சதவீத தள்ளுபடி, BUY ONE GET ONE என சுண்டி இழுக்கும் ஆபர்கள் உங்களின் மணிபர்ச்சை காலி செய்துவிடும். செல்போனில் ஆஃபர்ஸ் பற்றி தகவல் தரும் எந்த ஆப்ஸுக்கும் நோட்டிஃபிகேஷன் அமைப்பை ஆன் செய்து வைக்காமல் இருந்தால் மாதம் 5 ஆயிரம் வரை மிச்சமாகும்.
புதுப்படமா? ஒருவாரம் கழித்து பார்தால் குற்றமல்ல
எந்த ஒரு திரைப்படம் வெளியானாலும், அல்லது லைவ் ஷோ புரோகிராம் வந்தாலும் அதனை அதிக விலை கொடுத்து முதல்நாள் டிக்கெட் வாங்கிச்செல்லாமல்,காத்திருந்து பார்க்கலாம். செல்போனில் ஸ்டேட்டஸ் வைப்பதற்காக இந்த செயலை செய்யாமல் சிலநாட்கள் காத்திருந்து படத்தை பார்த்தால் ஆகும் செலவில் பாதி மிச்சமாகும்.
மாத செலவை அதிகப்படுத்தும் "ட்ரீட்"
எடுத்ததற்கெல்லாம் ஸ்வீட் எடுத்து கொண்டாடுவது சாதாரணமாகிவிட்ட இன்றைய நாட்களில், அதனை தவிர்க்கலாம். புது சட்டை வாங்குவதில் தொடங்கி முதல் ஷோவுக்கு டிக்கெட் கிடைத்தது வரை எல்லாவற்றுக்கும் ட்ரீட் என்றாகிவிட்ட நிலையில் அதனை தவிர்த்தால் மாதம் 2 ஆயிரம் ரூபாய் வரை மிச்சப்படுத்தலாம். அதேபோல் வீட்டில் நடைபெறும் விசேஷங்களில் அடுத்தவர்கள் வியக்க வேண்டும் என செலவு செய்வதை முடிந்தவரைத் தவிர்க்கலாம்.
செல்போன் கட்டணத்தை குறைக்கலாம்
பேசுவதற்கே காசு கொடுக்கும் நிலை தற்போது நிலவுகிறது.ஐந்து நிமிடத்தில் பேசி முடிக்க வேண்டிய விஷயத்தை அரைமணி நேரம் பேசுவதையும், தேவையே இல்லாமல் எஸ்எம்எஸ் அனுப்புவதையும் தவிர்த்தால் செல்போன் கட்டணம் பாதியாகக் குறையும்.